Tag Archive: மாதொருபாகன்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65

[ 6 ] “காளி தன்னந்தனியளாக மீண்டும் இக்காளிக வனத்திற்கு வந்தாள்” என்றான் சண்டன். “அவள் தந்தை இரு கைகளையும் விரித்து ஓடிவந்து வழிமுகப்பிலேயே அவளை எதிர்கொண்டார். “என்ன ஆயிற்று? சொல் மகளே, என்ன ஆயிற்று?” என்று அவர் கூவினார். அன்னையும் தோழியரும் தொடர்ந்தோடி வந்தனர். அவள் குலம் அவளை சூழ்ந்துகொண்டது. “தந்தையே, எனக்கொரு தவக்குடில் அமையுங்கள். அங்கு கன்னிமை நோற்கிறேன்” என்று காளி சொன்னாள். தந்தை திகைப்புடன் “என்ன சொல்கிறாய்? உன் கொழுநன் எங்கே?” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93602/

பெருமாள் முருகன் பற்றி

பெருமாள் முருகனின் மாதொருபாகனின் கலைமதிப்பு பற்றி இங்கே ஒரு கட்டுரை இருந்தது. முன்னரே நான் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள்தான் அவை. ஆனால் இத்தருணத்தில் அவை இன்றிருக்கும் சூழலுக்கு எதிர்மறையாக பயன்படுத்தப்படும் என்பதனால் நீக்கப்படுகிறது அதன் கடைசிவரி. ‘இன்றைய சூழலில் கேள்வியே இதுதான். எழுத்தாளன் எழுதுவதற்கு சாதி மத இனக்குழுக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமா அவர்களிடம் பஞ்சாயத்துக்கு அமர்ந்துதான் பிரசுரிக்கவேண்டுமா? பிற அனைத்துமே பிறகு’ ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/69956/

பெருமாள் முருகன் கடிதம் 8

ஜெ, சார்லி ஹெப்டோ மற்றும் மாதொருபாகன் நிகழ்வுகளின் பின் கருத்துச் சுதந்திரம் குறித்து (மீண்டும்) ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன். இது போன்ற சில சமயங்களில் WWGD – What would Gandhi do – என்று யோசிப்பது பிரயோசனமாக இருந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அதன் எல்லைகள் குறித்த காந்திய பார்வை என்ன? நான் யோசித்த வரை: சார்லி விஷயத்தில் கேலிச்சித்திரம் வாயிலாக கருத்தைச் சொல்லும் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், அவ்வுரிமையை அவர்கள் பிரயோகித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69809/

மாதொருபாகன் எதிர்வினை 3

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு நான் தங்களின் படைப்புகளத் தொடர்ந்து படித்து வருபவர்களில் ஒருவனாயிருந்தும் இதுவரை உங்களுக்கு கடிதங்கள் எதையுமெழுதியதில்லை. ஆனால் மாதொரு பாகன் எதிர்ப்பு தொடர்பாக நீங்கள் முன் வைத்திருக்கும் வாதங்கள் தொடர்பாக என்னுள் இர்ண்டு வினாக்கள் எழுகிறது. புனைவு என்றாலும் கூட ஒருவர் ஒரு ஊரிலுல் உள்ள அனைத்துப் பெண்களும் விபச்சாரிகள் என்று எழுதுவார் ஆனால் அதனை எதிர்த்து யாரும் போராடக் கூடாது வழக்குத் தொடரக் கூடாது மாறாக தாங்கள் விபச்சாரிகள் இல்லை என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69221/

மாதொருபாகன் எதிர்வினை-2

திரு ஜெ அவர்களுக்கு, யுவ செந்திலின் வக்கீல் நோட்டீஸ் பாணி கடிதத்தை கண்டேன். அதில் உள்ள சில உண்மைக்கு புறம்பான விஷயத்தை மட்டும் தெளிவு படுத்த நினைக்கிறேன். மாதொரு பாகன் நாவலுக்கு பாஜகவும், இந்து இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தது உண்மை ஆனால் புத்தகத்தை எரித்தது பாஜகவோ, இந்து இயக்கங்களின் தலைவர்களோ அல்ல. அந்த கூட்டத்தில் இருந்த யரும் புத்தகத்தை முழுதாக படிக்க வில்லை. ஒரு பக்கம் ஜெராக்ஸ் ஆக எடுக்கப்பட்டு ஸ்கெட்ச்சால் அடிக்கோடிடப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. வாட்ஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69185/

இரு சந்தேகங்கள்

ஜெமோ இரண்டு சந்தேகங்கள். முதல்சந்தேகம் மாதொரு பாகன் நாவலுக்கு எழுந்த எதிர்ப்பை நீங்கள் சரியாகவே கண்டித்திருக்கிறீர்கள். உங்கள் ஆணித்தரமான குரல் வரவேற்புக்குரியது. ஆனால் சில மாதங்களுக்கு முன் உங்கள் கட்டுரையின் ஒரு வரி இதேபோன்ற எதிர்ப்பைச் சந்தித்தது. உங்கள் சொந்த ஊரிலேயே. அதுவும் முழுக்கமுழுக்க இதேபோன்ற நிகழ்வுதான். இதேபோல சாதியக்குழுக்களும் உதிரி இந்த்துவக் குழுக்களும்தான் அதைச் செய்தார்கள். நீங்கள் மிரட்டப்பட்டதாக எழுதியிருந்தீர்கள். நீங்கள் மிரட்டப்பட்டபோது அதை ஃபேஸ்புக்கில் பலர் எழுதியிருந்தனர். சொல்லப்போனால் சில இந்துத்துவர்கள் கண்டித்திருந்தனர். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69051/