Tag Archive: மாணிக்கவாசகர்

எரிமருள் வேங்கை

திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு மாளிகை கட்டி நிறைய மக்களுடன் பல்லக்கும் பரிவட்டமுமாக வாழ்ந்தார். ஒருநாள் ஆலயம்தொழவந்த நக்கீரரை அவர் கண்டார். உயிர்த்தெழுந்த பொற்றாமரைக்குளத்தை அடிக்கடி வந்து பார்த்துச்செல்வது அவரது வழக்கம். இருவரும் பிராகாரத்தில் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டார்கள். தருமி தன்னுள் நீண்டகாலம் இருந்த கேள்வியைக்கேட்டார். ‘திருவிளையாடல் நடந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/53878

உள்ளான்

ஓயாமல் ஒவ்வொரு கணமும் எண்ணிக்கொண்டிருப்பவர்களின் உள்ளே இருந்துகொண்டிருக்கும் உள்ளே ஆனவனை, உள்ளவனை, தொலைவிலிருப்பவனை, அருகிலிருந்து அனைத்துக்கும் உதவும் சேவகனை, தென்னன் பெருந்துறையில் கோயில்கொண்டவனை வேதங்களாக ஆனவனை, பெண்ணை உடலில்பாதியாக்கியவனை, எளியவனாகிய என்னை ஆட்கொண்ட நாயகனை, தாய்வடிவமாக ஆன தத்துவத்தை, ஏழுலகும் தானே ஆனவனை, அவ்வுலகங்களை ஆள்பவனை பாடியபடி ஆடுவோம் அம்மானை! சொல்லிச்சொல்லி எஞ்சும் ஒன்றின் முன் வைக்கப்பட்ட சொற்கள். உள்ளமெல்லாம் கனிய எண்ணுபவர்களின் உள்ளே குடிகொள்பவன். அனைத்துக்கும் உள் ஆக ஆனவன். உள்ளவன். உள்ளுவதும் ஆனவன். உள்ளல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1887

அளப்பருந் தன்மை

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவுக்கு, இதில் வரும் உவமை பிடித்திருந்தது.முகநூலில் பதிவிட்டேன்.உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். திருவாசகத்தின் திருவண்டப்பகுதியின் ஆரம்ப வரிகளை வாசித்தேன்.அறிவியலா!ஆன்மீகமா! அடிச்சு விளையாடி இருக்கிறார் மாணிக்கவாசகர்.அவருடைய காலத்தில் இதெல்லாம் எப்படித் தெரிந்தது என்று நண்பரிடம் வியந்து சொன்னேன்.அவருக்காக நரிகளையே பரிகளாக்கியவர் இந்த’சின்ன’ விசயத்தை சொல்லிக்கொடுக்காமல் இருந்திருப்பாரா என்று நண்பர் சீரியஸாகவே கூறினார்.அதுவும் சரிதான். அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57973