Tag Archive: மாஜிலி

சூரியதிசைப் பயணம் – 8

மாஜிலியில் இருந்து நேராக சிவ்சாகர் நகரை நோக்கி காரில் வந்தோம். வரும் வழியில் சாப்பிடலாமென நினைத்தாலும் இரவுக்குள் சென்றுவிடவேண்டும் எனத் தோன்றியதனால் எங்கும் தாமதிக்கவில்லை. வழியில் ஒரு கடையில் ஜிலேபி , காரவடை, டீ சாப்பிட்டோம். ஷிவ்சாகரில்தான் நண்பர் ராம்குமார் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருந்தார். ஷிவ்சாகருக்கு வந்தது நல்ல நாள், சிவராத்திரி. ராம்குமார் எங்களை புறவழிச்சாலை வழியாக வரச்சொல்லியிருந்தார். அவர் ஏற்பாடுசெய்திருந்த அலுவல்விடுதிதான் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம். அதற்கு நேர் எதிரில் பிரம்மாண்டமான குளம். அதன்பெயர்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71719

சூரியதிசைப் பயணம் – 7

மறுநாள் காலை ஆறரை மணிக்கு எழுந்து டீ குடிக்கச் சென்றோம். மாஜிலி எட்டு மணிக்கே விழித்தெழும். முக்கியமான காரணம் சமீப காலம் வரை நீடித்த உல்ஃபா கலவரம், அஸ்ஸாமில் நிரந்தரமான பீதியை நிலைநிறுத்தி வணிகம் தொழில் அனைத்தையுமே பக்கவாதம் வந்து படுக்கச்செய்துவிட்டது. மெல்ல மெல்லத்தான் அஸ்ஸாம் மீண்டுவருகிறது. ஒரு சிறிய கடையில் டீ இருந்தது. அதை குடிக்க ஒரு கிடா வாசலில் காத்திருந்தது. டீ குடித்து அதற்கும் ஏதாவது வாங்கிக்கொடுக்கவேண்டும் என்பது அங்கே வழக்கம் என அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71717

சூரியதிசைப் பயணம் – 6

நதி என நாம் நினைப்பதன் சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இளமையில் நானறிந்த நதி என் வீட்டின் கொல்லையில் ஓடிய வள்ளியாறுதான். வற்றாத நதி. அதன் படுகை அதிகம் போனால் அரைகிலோமீட்டர் அகலம். மழைக்காலத்தில் செந்நிறநீர் நிறைந்தோடும். எட்டாவது படிக்கையில் முதல்முறையாக தாமிரவருணியை பார்த்தேன். இருமடங்கு பெரிய நதி. என் மனம் அன்றுகொண்ட விம்மிதத்தை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதன்பின் காவேரியைப்பார்த்தபோது தாமிரவருணி சிறியதாகியது. அதன்பின் கிருஷ்ணையையும் கோதாவரியையும் பார்த்தபோது நதி என்ற கற்பனையையே மாற்றியமைத்தேன். கிருஷ்ணா நதி மீது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71715

சூரியதிசைப் பயணம் – 5

காசிரங்கா வனவிடுதியில் காலை ஆறுமணிக்கு எழுந்தோம். முந்தையநாளே குளித்திருந்தமையால் காலையில் குளிக்கவில்லை. கீழே ஒரு உணவகம் இருந்தது. ஆனால் காலையுணவை அவர் சமைக்க ஒன்றரை மணிநேரம் ஆகிவிடும் என்றார். ஆகவே டீ மட்டும் குடித்துவிட்டு கிளம்பினோம். நல்ல குளிர் இருந்தது. அஸ்ஸாம் சமநிலப்பகுதி என்றாலும் ஊட்டி அளவுக்கே காலையில் குளிர் இருந்தது. இமையமலையின் குளிர்ச்சாரல் காரணமாக இருக்கலாம். திறந்த ஜீப் வந்தது. இப்பகுதியில் மாருதி ஜிப்ஸி ஜீப்புகள் இன்னமும் பரவலாக புழக்கத்தில் உள்ளன. காட்டுக்குள் செல்ல அவைதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71611