Tag Archive: மஹதி

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15

பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 4 சாளரம் வழியாக கடல்நீலத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் பார்த்த முதற்கடல் அதுதான். மஹதியும் ராகினியும் மாலினியும்கூட கடலை பார்த்திருக்கவில்லை. துவாரகைக்குள் நுழைந்து வளைசுருள்பாதையில் மேலேறத் தொடங்குவதுவரைக்கும் அவர்கள் கடலை அறியவில்லை. பலமுறை தென்மேற்குதிசையில் எழுந்திருந்த நீலச்சுவரை அவர்கள் நோக்கியிருந்தும்கூட அது வானத்தின் ஒரு தோற்றம் என்றே சித்தம் காட்டியது. சுருள்பாதையில் மேலேறி மூன்றாவது வட்டத்தை அடைந்தபோது கீழே கட்டி முடியாத துறைமுகப்பு தெரியத்தொடங்கியது. கடலுக்குள் இரண்டு நீண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75950

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 14

பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 3 காலையிளமழையை கேட்டுதான் பாமா கண்விழித்தாள். மார்பின்மேல் கைகளை வைத்தபடி கண்மயங்கி சொல்லழிந்து கேட்டபடி படுத்திருந்தாள். அவளுக்கென்றே பேசிக்கொண்டிருந்தது. பின் நினைவெழுந்தபோது அது மழையா என்ற ஐயம் வந்தது. மெல்லிய மரப்பட்டைகளால் ஆன அந்தப்பாடிவீட்டின்மேல் இரவெல்லாம் கடல்காற்று மையென்றே பெய்துகொண்டிருந்தது. திரும்பி சிறுசாளரத்தை நோக்கியபோது அது இளநீலத் திரை அணிந்திருந்ததைக் கண்டு வியந்து எழுந்தாள். அதனருகே தரையில் மென்நீலத் துவாலையென ஒளிவிழுந்துகிடந்ததும்தான் அதுவெளியே எழுந்த விடியலின் நிறமென்று உணர்ந்தாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75927

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13

பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 2 அந்தப்பாதையையே அவள் அறிந்திருந்தாள். யமுனைவழியாக மதுராவுக்கு வந்து அங்கே ஏழுநாட்கள் தங்கி அங்கிருந்து மீண்டும் படகுகளில் ஏகசக்ரபுரிக்கு வந்து திரும்பி சர்மாவதிக்குள் நுழைந்து பன்னிரண்டுநாட்கள் சிறுபடகுகளில் பயணம் செய்து உஜ்ஜயினியை அடைந்தனர். அங்கிருந்து முப்பதுநாட்கள் நிலப்பயணத்தொலைவில் இருந்தது துவாரகை. அவள் அந்நகரை அதைப்போல எத்தனையோ முறை சென்றடைந்திருந்தாள். துவாரகைக்குக் கிளம்பும் செய்தியை ராகினி வந்து சொன்னபோது அவள் உவகையை உணரவில்லை. அச்செய்தியை முன்னரே அறிந்திருப்பதாகவே எண்ணினாள். கிளம்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75918

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12

பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 1 யமுனையின் படகுத்துறையில் வண்ணக்கொடிகள் பறக்கும் ஏழு அணிப்படகுகள் அணைந்ததை சத்யபாமையின் தோழி ராகினிதான் முதலில் பார்த்தாள். “யாரது படித்துறையில்?” என்று நீண்ட கழுத்தை நீட்டி நோக்கியபோது அவை வணிகப்படகுகள் அல்ல என்று அறிந்தாள். வியப்புடன் “அவை அணிப்படகுகள் அல்லவா?” என்றாள். மஹதி எட்டிப்பார்த்து “மரங்கொத்திக் கொடிகள். அவை பார்ஸ்வ குலத்தவருக்குரியவை அல்லவா? எங்கு வருகிறார்கள்?” என்று சொன்னதுமே அவளுக்கு புலப்பட்டுவிட்டது. “ஏடி, உள்ளே சென்று அரசியிடம் சொல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75857

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11

பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 5 ஏழு காலடிகளுக்கு அப்பால் இருந்தது இளநீலம். புன்னகைக்கும் நீலம். புவியளந்த நீலம். அவள் நெடுந்தொலைவில் தனிமையில் நின்றிருந்தாள். சூழச்செறிந்த ஒலிகள் உதிர்ந்தழிந்தன. ஒளியும் காற்றும் கலந்த வெளி அவளைச் சுற்றி இறுக்கியது. அவள் கால்களுக்கு முன்னால் அடியின்மை என ஆழம் வெளித்திருந்தது. தயங்கித் தயங்கி யுகயுகங்களாக நின்றிருந்தாள். முள்முனையில் தவம்செய்தாள். ஐந்நெருப்பு அவளை சூழ்ந்திருந்தது. கருதுசொல்லெல்லாம் உதிர்ந்து எஞ்சிய ஒற்றைச்சொல் திறந்து எழுந்த பாதையில் முதல்காலடி எடுத்துவைத்தாள். அவள்முன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75850

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10

பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 4 தொலைவில் ஊர்மன்றின் ஒலியெழக்கேட்டதுமே பாமா கால்தளர்ந்து நின்றுவிட மஹதி திரும்பி நோக்கி “என்னடி? ஏன் நின்றுவிட்டாய்?” என்றாள். “ஒன்றுமில்லை அன்னையே” என்றாள் பாமா. “காலில் முள்குத்திவிட்டதா?” என்றாள் மஹதி. “இல்லை…” என்று பாமா தலையசைக்க மஹதி “என்னாயிற்று உனக்கு? ஏன் காலையிலிருந்தே முகம் தணிந்திருக்கிறாய்?” என்றாள். பாமா ஒன்றும் சொல்லாமல் விழி தாழ்த்தி நீள்மூச்செறிந்தபின் நடந்தாள். பாலமுதுப்பானையை சுமந்துவந்த ஆய்ச்சி சிரித்தபடி “நீள்மூச்சிடும் பெண்ணிடம் ஏன் என்று கேட்கலாகாது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75809

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8

பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 2 சிறு ஊற்று விழிகொண்டு சுரந்து நிறைவதுபோல் ஒவ்வொரு நாளும் எனத் திரண்டு அவளில் உருவானவை. அவளை அவளென ஒவ்வொரு கணமும் நினைவுறுத்துபவை. தனிமையிலோ நீராழத்திலோ கூட அவளே தொட்டுநோக்க தயங்கினாள். அவற்றுக்கென ஓர் நிலையும் உணர்வும் உண்டு என்பவை போல அவை அசைந்தன, குழைந்தன, தனித்து விழிபுதைந்தன, எழுந்து துடித்தன. என்றோ ஒருமுறை அவற்றைத் தீண்டுகையில் அவள் உடல் உவகையுடன் நடுங்கியது. எலும்புகளே இல்லாமல் ஓர் உறுப்பு. மென்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75766

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7

பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 1 புலரிமழையின் நிறம். அது விண்நீலமா, நிறமின்மையின் விழிமயக்கா என்று அறியமுடியாமல் குளிரக்குளிர பெய்துகொண்டிருக்கும். மயிற்தோகைக்குவியல்கள் அறைந்து அறைந்து விலக இலைக்குவைகள் தத்தளிக்க மரங்கள் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும். நீர்ப்பரப்புகள் புல்லரித்து அலைமறந்திருக்கும். புலரி மழை விண்ணின் கை என நீண்டு மண்ணின் தலைகோதும் பரிவு. இதழ்களிலிருந்து நேரடியாக செவிக்குச் செல்லும் ஒரு சொல். புலரிமழைக்கென ஏங்கியபடிதான் சத்யபாமை ஒவ்வொருநாளும் கண்விழிப்பாள். இளங்காற்று கடந்தோடும் ஒலியோ பனித்துளிகள் சொட்டும் தாளமோ அதுவென …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75724

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 2 ] கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி வெய்யநீராக கொதித்து ஆவியெழுந்துகொண்டிருந்தது. சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட பொதிப்படகுகளின் அறைகளுக்குள் சில கணங்கள் கூட இருக்கமுடியவில்லை. வெளியே வந்து தெற்கிலிருந்து அலையலையாக வீசிக்கொண்டிருந்த காற்றை வாங்கிக்கொண்டு பாய்மரக்கயிற்றைப் பற்றிக்கொண்டு நிற்கையில் மட்டுமே உடலில் வியர்வை கொட்டுவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45619

» Newer posts