Tag Archive: மழை

வரம்பெற்றாள்

ஞாயிறன்று காலை மூன்றுமணிக்கே எழுந்துவிட்டேன். மூன்றுமணிநேரமே தூங்கினாலும் மனம் துல்லியமாக விழித்திருந்தது. ஆறு மணிவரை எழுதிக்கொண்டிருந்தேன். கீழே சென்று டோராவுக்குச் சில பணிவிடைகள் செய்து குலாவிவிட்டு ஒரு காலைநடை கிளம்பினேன். இருபதடி தூரத்துக்கு அப்பால் தெரியாதபடி நல்ல இருட்டு. சிற்சில நீர்த்துளிகள் காற்றிலேறி வந்து விழுந்தன. மரங்கள் சலசலக்கும் ஒலி. காலையில் எழும் பறவைக்குரல்கள் குறைவாக இருந்தன. பார்வதிபுரம் கால்வாயில் நீர் இருட்டாக ஓடிக்கொண்டிருந்தது. ஏழெட்டுப்பேர் குளித்துக்கொண்டிருந்தனர். ஒரு பெண்மணி துணிதுவைத்தாள். கால்வாயை ஒட்டியே புதிதாக வந்துள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29389

மழை,மனிதர்கள்- கடலூர் சீனு

    இனிய ஜெயம், இன்று மதியம், இழந்த சில பொருட்களை மீண்டும் சீர் செய்து தர, கடலூர் துறைமுக தர்க்கா சென்றோம். எங்கெங்கிருந்தோ வசதி அற்ற குடும்பங்கள் தங்கள் மனநோய் கண்ட குடும்ப உறுப்பினரை  நாற்பது நாள் மந்திரிக்கவேண்டி அங்கே தங்க வைத்து அவர்களும் அங்கே கிடக்கிறார்கள். எந்த வசதியும் அற்ற ஒழுகும் கூரை கொண்ட  கட்டிடம். அதற்கு சற்று தள்ளி ஒரு சின்ன சாய்ப்பில் வரிசையாக கல் அடுப்புகள் கொண்ட சமையல்கட்டு. பின்பக்கம் ஏனோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81714

மழை கடிதங்கள்- 3

இனிய ஜெயம், நேற்றைய இரவு நிலவரப்படி, கடலூருக்கு உபரியாகவே நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்திருக்கிறது. இதில் ஒரு சின்ன சிக்கல். உடைகள் அதிகமாக குவிந்திருக்கிறது.  காய் கறிகள் வேறு சில அத்தியாவசிய பொருட்கள் இன்னும் குறைபாடாகவே இருக்கிறது. இடதுசாரி தோழர்கள் களமிறங்கி அனைத்தையும் வகை பிரித்து தனித் தனியாக அனைவருக்கும் கிட்டத்தட்ட எல்லாம் கிடைக்கும் வண்ணம்  பொட்டலம் கட்டி, சரியான வார்டுகளுக்கு ஒரு வீடு விட்டுவிடாமல் தன்னார்வலர்களைக் கொண்டு உதவிகளை கொண்டு சேர்க்கிறார்கள். கடலூர் மையத்தில் வள்ளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81641

நிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு -கடிதம்

இனிய ஜெயம், கட்சிகள் மற்றும் சில்லறை மக்களின் இடர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கிளம்பும் தன்னார்வலர் அனைவருக்கும் கடலூர் என்பதே முதல் இலக்காக இருக்கிறது. மாறாக கிளம்புகையில் சிதம்பரம், விழுப்புரம், குறிஞ்சிபாடி, பண்ருட்டி வட்டம் என சென்று சேரும் இலக்கை முன்பே முன்பே வகுத்துக் கொள்வது சிறப்பு. தானே சுனாமி என இரு இடர்களிலும் எதுவும் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்ட தலித் மக்கள் இப்போது குமுறிக் கிளம்பி இருக்கிறார்கள். தன்னார்வலர்களின் முதல் இலக்கு பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களாக இருப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81626

மழை கடிதங்கள்- 2

இனிய ஜெயம், சாதி, கட்சி, ஏழை, பணக்காரன் அனைவரும் கூடி பாகுபாடின்றி வரும் நிவாரணப் பொருட்களை நகருக்கே வெளியேலேயே கொள்ளை அடிக்கிறார்கள். ஒரு நிவாரண வண்டியை[வழியில் கட்டையை போட்டு பஞ்சர் ஆக்கி] டிரைவர், நிவாரண பணியாளரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு, அனைத்தையும் கொள்ளை அடித்து சென்று விட்டனர். இதில் மின்சார ஊழியர், அரசு வாத்தி போன்ற ஈனப் பிறவிகளும் அடங்குவர். நிவாரணப் பொருட்கள் வந்து தாங்கும் மண்டபங்களுக்கு யாதொரு பாதுகாப்பும் இல்லை. நிவாரண உதவிகள் புரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81611

மழை- கடிதங்கள்

ஜெ மொத்தம் நாற்பத்தி எட்டே மணி நேரம், அறுபத்தி ஐந்து விழுக்காடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மருந்து பாதுகாப்பு அடுத்த இரண்டு நாட்களுக்கு தயாரகி விட்டது. சுனாமி, தானே என அப்போது வந்த மனிதர்கள் யாவரும் இப்போதும் குழுமி விட்டனர். மக்கள் கடந்த இரு இடர்களில் கற்ற பாடத்தில் இயல்பாக எங்கெங்கு முகாம் வசதிகள் வழக்கமாக செய்யப்படுமோ அங்கே இயல்பாக வந்து சேர்ந்து விட்டனர், புதிதாக எங்கும் உதவி பணியில் வடநாட்டு இளைஞர்கள் இறங்கி அடிக்கிறார்கள். ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81602

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73750

பாரதி விவாதம்-7 – கநாசு

அன்புமிக்க ஜெயமோகன் தனக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களை பாரதி வாசித்ததிலோ அதில் குறிப்பிடத் தக்கவர்களின் தாக்கம் பெற்றதிலோ எவ்வித மாற்றுக் கருத்தும்இல்லை.அவனை சுத்த சுயம்பு என்றும் நான் சொல்லவில்லை. ஆவுடையக்காவின் சொற்செட்டுகள் மிகப்பழையவை.”சொல்புதிதாய் பொருள்புதிதாய்”நிற்கும் பாரதியின் வீச்சுக்கள் அவற்றில் இல்லை. அதேபோல மந்திர தீட்சை உபாசனை போன்றவற்றால் ஆவுடையக்காள் மொழிகளில் தென்படும் சரணாகதித் தன்மை பாரதியிடம் இல்லை. கண்ணன் பாட்டிலே கூட நாயகி பாவம் என்னும் உத்தியை புதிது என்றுநான் சொல்லவில்லை.கடவுளை உறவுபடுத்திப்பாடும் எந்தக் கவிதையிலும் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21558