Tag Archive: மலையாளத் திரைப்படப் பாடல்

பாபு நந்தன்கோடு

இணையத்தில் பழைய மலையாளப்பாட்டுகளுக்காக தேடிக்கொண்டிருந்தபோது நினைவில் மறைந்த ஒரு பாடலை கேட்டேன், இல்லை கண்டேன். ஸ்வப்னம் படத்துக்காக சலீல் சௌதிரி இசையமைத்து வாணி ஜெயராம்பாடிய பாடல். கறுப்புவெள்ளை சித்தரிப்பு. நந்திதா போஸ் என் இளமையில் நினைவில் இருந்த முகம். வங்க புதிய அலைப் படங்களின் நாயகி. அக்காலத்தில் நல்ல இயக்குநர்கள் பலருக்கும் அவர்தான் பிரிய முகம்.. பாடலின் தொடக்கமே சட்டென்று வசீகரித்தது. நந்திதா மிக இயல்பாக பாடுகிறார். கைகளின் அசைவில் அவருடைய இனிய பதற்றம் தெரிகிறது. உடலசைவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11222

கஸ்தூரி மணம்

இணையத்தின் அபார வசதிகளில் ஒன்று நினைவுகளில் மூழ்க அது அளிக்கும் வசதி. நேற்று எனக்குப் பிரியமான பழைய மலையாள மெல்லிசைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். யூ டியூபில் பல படங்களின் பாடல்காட்சிகள் உள்ளன. சட்டென்று இந்தப்பாடலைக் கண்டேன். 1975ல் நானும் என் நண்பன் ராதாகிருஷ்ணனும் குழித்துறை திரையரங்கில் இந்த படத்தை பார்த்தோம். பிக்னிக் என்ற பாடாவதி படம். அப்போதே படம் எங்களுக்கு கேனத்தனமாக இருப்பதாகப் பட்டது. நசீர் ஒரு காட்டிலாகா அதிகாரி. காட்டில் ஒரு விடுதியில் தங்கியிருக்கிறார். ஆதிவாசிப்பெண் லட்சுமியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11076