Tag Archive: மலேசியா

சிற்றிதழ் என்பது…

வழக்கமாக தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கங்களே பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையங்களாக இருக்கும். அவை மாலையுணவு, அரட்டை, சினிமா, சில்லறை கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே பண்பாட்டுச் செயல்பாடுகளாகக் கொண்டிருக்கும். இலக்கியம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை பரவலாக உள்ள அரசியல் செயல்பாடுகளின் பகுதியாக ஒலிக்கும் கூக்குரல் உற்பத்தி மட்டுமே. அவற்றுக்கு அப்பால் உள்ள இலக்கியம் சிந்தனை ஏதும் அவர்களுக்கு தெரிந்ததாகவே இருக்காது. விதிவிலக்காக, மலேசியாவில் நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு தொடக்கம் நிகழ்கிறது என்பதை பலவகையாகப் பதிவு செய்திருக்கிறேன். நவீன், யுவராஜ்,பாலமுருகன் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79870/

பாலமுருகனின் நாவல்

வணக்கம் ஜெ. நலமா? பாலமுருகன் அண்மையில் நாவல் வெளியிட்டிருந்தார். மலேசியாவில் வந்த நாவல்களில் வாசிக்க வேண்டிய படைப்பு. அந்நாவல் குறித்து எழுதியுள்ளேன். நன்றி, நவீன் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்: அறங்களை மீறிய வாழ்வு!

Permanent link to this article: https://www.jeyamohan.in/27298/

மலேசியா ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்களின் மலேசிய வருகை எனக்கு மிகுந்த உவப்பளித்தது. நீங்கள் கூறியிருப்பது போல இன்னும் பல ஆண்டுகளுக்குத்தேவையான இலக்கியப்படிப்பினையை மலேசிய தீவிர இலக்கியவாதிக்கு உவந்தளித்து விட்டுச்சென்றிருக்கிறீர்கள் என்ற உங்கள் குறிப்பை நான் ஆமோதிக்கிறேன்.. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஒரு கழுகுப்பார்வை உங்களுக்குக் கிட்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற தீவிர இலக்கியப் பதிவிலிருந்து மலேசிய இலக்கியப்போக்கை அறிந்திருப்பீர்கள். உங்கள் அபிப்பிராயத்தையும் சில கூட்டங்களில் கூறிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். ஒரு சிலர் மட்டுமே அதனைக்கேட்டுவிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8270/

கடிதங்கள்

அன்புள்ள நவீன் ஊர்புகுதல் நான் எழுதிய அசோகவனம் நாவலின் தொடக்க அத்தியாயம். அதுவே ஒரு சிறுகதை. ஆனால் மூன்றாம் பகுதி அழிந்துவிட்டது. மலேசியாவில் இருந்தமையால் என்னால் அதை மறுபடியும் பிரசுரிக்க முடியவில்லை. நாளை வெளிவரும் ஜெ அன்புள்ள ஜெயமோகன், ஊர்புகுதலில் காட்சி வருணனைகள் அருமையாக உள்ளன. உரையாடல்கள் சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்தன. கதையின் முடிச்சிற்காக காத்திருக்கிறேன். நவீன் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இரண்டாம் முறையாகத் தங்களை மலேசியாவில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இம்முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8233/

சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்

எழுத்தாளர் ஜெயமோகன் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதிய “போரும் அமைதியும்” என்கிற நாவலின் மூலம் அவருக்கு உருவான மனநிலையைப் பகிர்ந்து கொண்டார். அந்த நாவல் அவருக்குள் ஏற்படுத்திய வெற்றிடத்தையும் தனிமையையும், வெறுமையையும் சுட்டிக்காட்டி ஒரு நாவல் படித்து முடித்தவுடன் காலத்தின் மிக நீண்ட தனிமையையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிக்கிவிட்டிருக்க வேண்டும் மேலும் வாசிக்க: சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும் : ஜெயமோகனுடன் கழிந்த விடுமுறையும் வெறுமையும் http://bala-balamurugan.blogspot.com/2010/09/blog-post_13.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/8188/

மலேசியாவில் இருந்து திரும்பினேன்

ஒன்பதாம் தேதி சுங்கைப்பட்டாணி எழுத்தாளர் சங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. சங்கத்தினர் ஓர் எழுத்தாளராக என்னை அறிந்திருக்கவில்லை. ஆகவே நானே என்னை விரிவாக அறிமுகம் செய்துகோண்டேன். நவீன இலக்கியத்தின் தோற்றம், இயல்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசினேன். மரபிலக்கியம் மற்றும் பின் நவீனத்துவம் குறித்து பல வினாக்கள் எழுந்தன. அவற்றுக்குப் பதில் சொன்னேன். பொதுவாக சங்க அமைப்பாளர்களுக்கு மலேசிய இலக்கியம் குறித்த என்னுடைய கருத்துக்கள் மீது மனவருத்தம் இருந்தமை அவர்களின் உரையில் தெரிந்தது. மலேசிய-சுங்கைப்பட்டாணி தமிழ் இலக்கியவாதிகளின் ஒரு நீண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8180/

பினாங்கில் நான்காம்நாள்..

இன்றும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ஆசிரமத்தில் இருக்கிறேன். இங்குள்ளவர்களுக்கு தேவையான ஓர் ஆன்மீகச்சூழல் இங்கே உள்ளது என நினைக்கிறேன். ஒரு அன்னிய தேசத்தில் தங்கள் கலாச்சாரம் மதம் மொழி ஆகிய மூன்றையுமே ஒன்றாகவே எண்ணி பாதுக்காக்கவேண்டிய நிலை இம்மக்களுக்கு இருக்கிறது. இங்கே இந்துமதம் தமிழ் தமிழர் வாழ்க்கை மூன்றையும் பிரித்துப்பார்க்க எவரும் முயல்வதில்லை என்று பட்டது நேற்று மாலை கீதையும் யோகமும் என்ற தலைப்பில் பேசினேன். குருகுலத்தில் கிட்டத்தட்ட 200 பேர் வந்திருந்தார்கள். வியாழக்கிழமை தோறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8164/

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்: உள் முரண்களும் உலக அரசியலும் இவையனைத்திலும் சோழர் காலத்தின் நாகரிகமும் கலை வளர்ச்சியும் சிறிதும் வெளிப்படவில்லை எனவும் மறுத்தார். பெரும்பாலான சிலைகளிலும் தொல்லியல் பொருட்களிலும் வெளிப்படும் நேர்த்தியற்ற கலை வேலைப்பாடுகள் கிபி.1 அல்லது கி.மு 1 என்கிற நூற்றாண்டைச் சேர்ந்த அடையாளங்களாகக் குறிக்கப்படுகிறது எனக் கூறினார். .. மேலும் வாசிக்க: ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்-3: உள் முரண்களும் உலக அரசியலும் http://bala-balamurugan.blogspot.com/2010/09/3.html கே.பாலமுருகன் சுங்கைப்பட்டாணி, மலேசியா

Permanent link to this article: https://www.jeyamohan.in/8160/

கெடா

பினாங்கு நகருக்கு வெளியே சுவாமி பிரம்மானந்த சரச்வதி அவர்களின் குருகுலத்தில் இருக்கிறேன். இயற்கையான சூழலில் நல்ல அறைகள் கொண்ட கட்டிடம். அனேகமாக தினமும் சுவாமியின் இலக்கிய நண்பர்கள் வந்துவிடுகிறார்கள். இங்கே அவர் வாரந்தோறும் கீதை வகுப்பு ஒன்றை நிகழ்த்துகிறார். நண்பர்களுடன் நவீன இலக்கியக் கூடல் ஒன்றையும் நடத்துகிறார். நேற்று காலை நண்பர்களுடன் கெடா என்ற இடத்தில் உள்ள புஜாங் சமவெளிக்கு போய் பழைய வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கச் சென்றேன். கெடாதான் கடாரம் என்று இங்கே பலர் நினைக்கிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8144/

ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2

பெரும்பாலும் வசதியற்றவர்கள்தான் நகர்ப்பகுதியில் வாழ்கிறார்கள், அவர்கள்தான் நகர்ப்பகுதியை தங்களின் வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனவும், வசதியுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் எப்பொழுதும் நகரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ள நிலப்பகுதியில் தங்களின் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் எனவும் கூறினார். மேலும் வாசிக்க: ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2 : உலக இலக்கியமும் சமரசமற்ற எழுத்தும் http://bala-balamurugan.blogspot.com/2010/09/blog-post_09.html கே.பாலமுருகன் சுங்கைப்பட்டாணி, மலேசியா

Permanent link to this article: https://www.jeyamohan.in/8132/

Older posts «