Tag Archive: மலேசியா வாசுதேவன்

மலேசியா வாசுதேவன்- அஞ்சலி

முந்தாநாள் சென்னையில் இருந்தபோது ஷாஜி ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மலேசியா வாசு அண்ணா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருப்பதாகவும், கவலைக்கிடம் என்றும். சிறிதுநேரத்தில் பாலாவைப் பார்க்கச்சென்றேன். பாலாவுக்கும் சொல்லியிருந்தார். பாலா யாரையோ அனுப்பி விசாரிக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அன்று மதியமே விமானத்தில் நாகர்கோயில் திரும்ப வேண்டியிருந்தது. நேற்று காலை மலேசியா வாசுதேவன் இறந்த செய்தியை அறிந்தேன். நடுவயதில் இளமை கனவுத்தோற்றம் கொண்டு பின்னுக்குச் சென்றபடியே உள்ளது. என் இளமையின் ஒளிகளுடன் பின்னியது அவரது குரல். நெகிழ்வும் கம்பீரமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12737