Tag Archive: மறுபதிப்பு

இன்றில் எஞ்சியவை

அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. ஒரு முகம் சிதறிய பல பொருட்களில் பிரதிபலிப்பதுபோல. எல்லாருக்கும் உரியவைதான் அவை. ஆனால் எழுத்தாளன் அவற்றை மொழியாக ஆக்கத்தெரிந்தவன். ஆகவே எங்கும் பதிவாகாமல் காற்றில் கலந்து மறையக்கூடும் அனுபவங்கள் மொழியில் கல்வெட்டாக மாறுகின்றன. சமகாலப் பதிவுகள் இவை. எண்ணங்கள் , எதிர்வினைகள். சென்ற சில ஆண்டுகளின் உணர்வுகளையும் நிகழ்வுகளையும் அவற்றில் திறக்கும் புதிய கோணங்களையும் காட்டுபவை என்பதனால் முக்கியமானவை. இவற்றை முதலில் தொகுப்பாக வெளியிட்ட உயிர்மை மனுஷ்யபுத்திரனுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79406

என்றுமுள கண்ணீர்

கிறிஸ்துவை என் பத்துவயதில் அறிந்தேன் என நினைக்கிறேன். நான் கண்ட முதல் மரணத்தின் இரவில். தனிமையில், துயரில். அன்றுமுதல் பைபிளின் சொற்களாக கனவுகனிந்த விழிகளாக அவர் என்னுடன் என்றும் இருக்கிறார். தனித்தவன், தனியர்களின் தெய்வம். எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன என் கிறிஸ்துவை சொற்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79377

அழியாத சாட்சி

அரசியல் விவகாரங்களில் உடனடியாகக் கருத்து சொல்லக்கூடாது என்பது எனக்கு நானே இட்டுக்கொண்ட விதி. ஏனென்றால் அவ்விவாதம் சூடாக இருக்கையில் கருத்துக்கள் பல்லாயிரம் எதிர்கருத்துக்களை மட்டுமே உருவாக்குகின்றன. பிற எதையும் பேசமுடியாமலாகிறது. நம்மூரில் அரசியல் நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓயாது நிகழ்கின்றன ​ஓர் அரசியல்நிகழ்வில் அதன் உடனடிப்பெறுமானத்திற்கும் அப்பால் சென்று எப்போதைக்குமென சொல்வதற்கு ஏதேனும் உள்ளது என்றால், எழுத்தாளனாக பிறர் குறிப்பிடாத எதையாவது என்னால் சொல்லமுடியும் என உணர்ந்தால் மட்டுமே நான் கருத்துச் சொல்லியிருக்கிறேன் என்னை ஓர் அரசியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79374

புதியவற்றின் வாசலில்

உருவாகி வரும் இலக்கியம் குறித்து ஆர்வமில்லாத எழுத்தாளர்கள் குறைவு.அந்தப்புதிய காலம் அவனுடைய முகத்தை அவனுக்குக் காட்டும் கண்ணாடி. அவன் சொற்கள் எப்படி அடுத்தடுத்த கால அலைகளில் எதிரொளிக்கின்றன என்று அவன் பார்க்கமுடிகிறது. அத்துடன் அவன் நின்றுபேசும் சூழலின் மாற்றத்தையும் அறியமுடிகிறது என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகை கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ள்ளேன் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79370

புதியவிழிகள்

ஒருநாட்டில் வாழ்ந்து உணர்ந்து அதை அறிவதற்கும் ஓரிருநாட்களில் அங்குசென்று அதை அறிவதற்கும் பெரும் வேறுபாடுண்டு. உண்மையில் அங்கே வாழ்பவர்கள் அறியாத பலவற்றை சிலநாட்கள் வந்துசெல்பவர் அறியமுடியும். காரணம் அவரது பார்வை பழகாமலிருப்பதுதான். தேவை தேவையின்மை, நன்று தீது என அது பகுக்கப்படாமலிருக்கிறது. இவ்வியல்பையே கலைகள் செய்கின்றன. ஒவ்வொரு நாளும் காணும் ஒரு பொருளை ஓவியத்தின் சட்டகத்திற்குள் காணும்போது அறிமுகம் அழிப்பு ஒன்று நிகழ்கிறது. அப்பொருள் புதியகோணத்தில் தென்படத்தொடங்குகிறது. பயணக்கட்டுரைகளின் பயன்மதிப்பு இதுவே. நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் நூல்வடிவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79367