Tag Archive: மருத்துவம்

இவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு

இவான் இல்யிச் எழுதிய ‘மருத்துவ இயலின் எல்லைகள்’ [Medical Nemesis] ன்ற நூல் 1975 ல் வெளிவந்தது. இந்நூலை நான் அது வந்து பத்தாண்டுகளுக்குப் பின் படித்தேன். அந்த இளம்வயதில் என் அடிப்படை ஐயங்களுக்கு அழுத்தமான விடையளிக்கக் கூடியதாகவும் மருத்துவம், உடல்நலம் பற்றிய ஓர் நிலைபாட்டை உருவாக்கக் கூடியதாகவும் இருந்தது அந்நூல். பலமுறை விரிவான குறிப்புகள் எடுத்துக் கொண்டு அதை கிட்டத்தட்ட கற்றிருக்கிறேன். இன்று இருபதுவருடங்கள் கழித்து இக்கட்டுரைக்காக அந்நூலை மீண்டும் புரட்டிப் பார்த்தபோது அவர் சொன்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3402/

அரதி

அன்புள்ள அண்ணணுக்கு, நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது. உங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது? அன்புடன் நடராஜன்   அன்புள்ள நடராஜன் எதிராஜ், நீங்கள் உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1245/

கைதோநி

தலையில் தேய்க்கும் எண்ணை விஷயத்தில் மலையாளிகளுக்கு உள்ள அதீதமான கவனம் ஒரு முக்கியமான பண்பாட்டுக் கருப்பொருள். தினமும் தலையில் எண்ணை தேய்த்துக் குளிப்பது அவர்களின் வழக்கம். பழைய கால ஆவணங்களில் ஒரு நபருக்கான குறைந்தபட்சச் செலவைக் குறிப்பிடும்போது இரண்டுநேர உணவு, தலைக்கு எண்ணை, வருடத்திற்கு இரு துணி என்று சொல்லும் வழக்கம் இருந்தது. பொதுவாக இது தேங்காய் எண்ணைதான். பச்சை எண்ணை தேய்க்கும் வழக்கம் அனேகமாக கேரளத்தில்  கிடையாது. தினமும் எண்ணைதேய்த்துக்குளிக்காத பிற மானுட விரிவை முழுக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1847/

மருந்தென வேண்டாவாம்!

டாக்டர் வீரமணி B.SC,M.B.B.S,FCGP அவர்களால் எழுதப்பட்டு, அறிவுலகம் 6,3 ஆவது அவின்யூ அசோக்நகர் சென்னை 600083 லிருந்து டிசம்பர் 2004ல் வெளியிடப்பட்ட ‘சித்தர்கள் போற்றிய சிறுநீர் சிகிச்சை’ என்ற நூலை என் நட்புக்குரிய வாசகர்களுக்கு திட்டவட்டமாகப் பரிந்துரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். காரணம் நான் இன்னும் அம்முறையை பரிசீலனைசெய்து பார்க்கவில்லை. வாசகர்கள் முயன்று விளைவுகளை அறிவித்தால் நல்லதென்பதே நோக்கம். நிற்க, இந்நூலை முதலில் அறிந்துகொள்வோம். ”டாக்டர் வீரமணி B.SC,M.B.B.S,FCGP அவர்கள் ஆங்கில முறை மருத்துவநிபுணர். சாதி மத இன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/303/

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

நான் நித்ய சைதன்ய யதியின் நூல்களில் பாதியையே வாசித்திருக்கிறேன்.கணிசமான பகுதி நான் அறியாத துறைகளைச் சார்ந்தவை. அவரது குருகுலத்திற்கு வருபவர்களில் மனநிபுணர்களும் மனநோயாளிகளுமே அதிகம் என்று சொல்வதுண்டு. இல்லை, மனநோய்க்கு வாய்ப்புள்ளவர்களே அதிகம் என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். ஏராளமான அளவில் ஆயுர்வேத மருத்துவர்களும் மாற்று மருத்துவ நிபுணர்களும் வருவதுண்டு. நித்யாவின் முதன்மை மாணவர்களில் ஒருவரும் இப்போது ஊட்டி நித்யாகுருகுலத்தின் பொறுப்பில் இருப்பவருமான ஸ்வாமி தன்மயா பூர்வாசிரமத்தில் ஓர் அலோபதி மருத்துவர் [டாக்டர் தம்பான்]. சென்ற இருபது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/382/

அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6

அயோத்திதாச பண்டிதரின் உரைகள் இந்தியமரபில் பொதுவாக ஓர் அறிஞனின் செயல்பாடு என்பது இரண்டு வகைப்பட்டதாக இருப்பதைக் காணலாம். ஒன்று உரை எழுதுதல்.  இன்னொன்று புராணம் எழுதுதல். நீண்ட மரபுள்ள ஒரு பண்பாட்டின் இரு இயல்பான அம்சங்கள் இவை.  உரை,செவ்வியல் மரபைக் கையாள்வது, புராணம்,நாட்டார் மரபைச் செவ்வியலாக்குவது. இரண்டுமே ஒன்றையொன்று நிரப்பும் செயல்பாடுகள். அயோத்திதாச பண்டிதருக்கு முந்தைய அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இவ்விரண்டையும்தான் செய்திருக்கிறார்கள். ஏன் என்பது முக்கியமான வினா. இங்கே மரபு பிரம்மாண்டமாகப் பின்னால் எழுந்து நிற்கிறது. நீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18504/

இயற்கை உணவு, கடிதம்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே நான் தங்களின் இயற்கை உணவு : என் அனுபவம் கட்டூரையை படித்தேன், நான் கடந்த 40 வருடகாலமாக இயற்கை உணவை பயன்படுத்துகின்றேன், மேலும் யோகாவில் முனைவர் பட்டம் பெற்று முழு நேர யோக பயிற்யாளராகவும், இயற்கை உணவு ஆராய்ச்சியாளராகவும் இருக்கின்றேன்.இயற்கை உணவு மற்றும் யோகா சார்ந்து சில புத்தகங்களும் எழுதியுள்ளேன். அந்த கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட சிவ சைலம் இராமகிருஷ்ணன் அவர்கள் தான் என் குரு. நான் அவருடன் கிட்டத்தட்ட 6 வருடங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17074/

டாக்டர் தம்பையா

ஷாஜியை ஒருமுறை சந்தித்தபோது அவருக்கு வந்த தோல் ஒவ்வாமை குறித்தும் அதற்காக அவர் சென்று பார்த்த டாக்டர் தம்பையா அவர்களைப்பற்றியும் உணர்ச்சிகரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். டாக்டர் தம்பையா பற்றி நான் கேள்விப்படுவது அதுவே முதல்முறை. டாக்டர் தம்பையா மரணமடைந்ததை ஒட்டி ஷாஜி எழுதியிருக்கும் அஞ்சலிக்கட்டுரை அவரது இணையதளத்தில்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/16863/

இயற்கை உணவு,நல்வாழ்வு ஆசிரமம்

அன்புள்ள ஜெயமோகன், சரவணன் என்பவருக்கு மே 13ல், சிவசைலம் நல்வாழ்வு ஆசிரமம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள்.  சில வருடங்களுக்கு முன் நான் அங்கு சென்று ஒரு வாரம் தங்கினேன்.  எனக்குப் பொதுவாக நவீன அறிவியலின் அடிப்படையில் நிரூபிக்கப்படாத மாற்று மருத்துவத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஒரு நண்பர் இந்த இடத்தைப் பற்றிக் கூறினார். உங்களது இயற்கை உணவு பற்றிய கட்டுரையையும் படித்திருந்தேன்.  நீங்கள் பழங்களை மட்டும் மாலை/இரவு உணவாகக்  கொள்வதால் அடைந்த பலன்களைப் படித்தது, இதை முயற்சிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16826/

கடிதங்கள்

Dear Sir, வணக்கம். நான் சில வருடங்களாக உங்களை வசிக்கும் ஒரு வாசகன். ஒரளவ வாசிப்பு பழக்கம் உள்ளவன் என்று சொல்லிக்கொள்ள முடியும். இது முதல் கடிதம். “இந்த இணையதளத்தின் வாசகர்கள்…” என்ற இந்த கட்டுரையைப் பார்த்தவுடன் உங்களுக்கு இதை எழுதுகிறேன். I am your reader through RSS Feed. – உனக்கு உங்களின் எழுத்துக்கள் ஒரு நம்பிக்கை தரும் விஷயமாக இருக்கிறது. நமது பண்பாட்டின் மீது உங்களுக்கு இருக்கும் புரிதலும் அதை பிறருக்கு புரியவைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9440/

Older posts «