Tag Archive: மரபு இலக்கியம்

மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2

எழுத்தாளர் சுஜாதா நவீனமொழியில் புறநாநூறு உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களுக்கு உரைஎழுதி வெளியிட்ட நூல்கள் அவரது வாசக ஈர்ப்பின் காரணமாக புகழ்பெற்றன. இளைஞர்கள் நடுவே அந்நூல்கள் சென்று சேர வழிவகுத்தன. ஆனால் தன்னுடைய அவசரம், மேலோட்டமான இலக்கிய நோக்கு காரணமாக பெரும் பிழைகளுடன் சுஜாதா அந்த உரைகளை அமைத்திருந்தார். பலபிழைகள் அடுத்தடுத்த பதிப்புகளில் களையப்பட்டாலும் அந்நூல்கள் இன்னும் ஏராளமான பிழைகளுடனும் போதாமைகளுடனும்தான் உள்ளன. குறிப்பாக கவிதையை அதன் கவித்துவத்தை தவிர்த்து சுருக்கி ஒரு செய்தியாக அளிக்கும் அவரது முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8219

மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்

சுஜாதாவின் பிழைகள் மூன்று வகையானவை. ஒன்று, இலக்கியம் அல்லது கவிதை குறித்த அவரது புரிதல் உருவாக்கும் பிழை. ஒன்றை ரத்தினச்சுருக்கமாகச் சொன்னாலே அது கவிதை என அவர் நம்பினார்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/8217

கேள்வி பதில் – 12

தமிழ் நவீன இலக்கியச் சூழலின் தற்போதைய பிதாமகர்கள் (தங்களையும் சேர்த்து) மரபுத்தொடர்ச்சி இல்லாத இலக்கியம் இலக்கியமே இல்லை என்பதாகக் கொள்கின்றார்கள். அந்த மரபு என்பது என்ன? தலித் இலக்கியப் பிரிவுகளுக்கு எந்த வகை மரபுத் தொடர்ச்சி கிடைக்கும்? தலித் இலக்கியம் ஏகலைவனிடமிருந்தாகவோ அல்லது நந்தன் வழியாகவோ தொடர்வதுதான் சிறப்பா? அமெரிக்கக் கருப்பின இலக்கியங்களுடன் சகோதரத் தொடர்பு கொண்டு வளர்ந்தால் அது ஏதேனும் இழந்துவிடுகின்றதா? — ஜி.திராவிட். பிதாமகன் என்றதற்கு நன்றி. என் காதோர நரை இப்போது சற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40