Tag Archive: மரபு

வெய்யோன், எண்ணை, மரபு

வெண்முரசு நாவல்வரிசையின் ஒன்பதாவது நாவலான வெய்யோன் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எண்ணியவற்றை எண்ணாதவை வென்றுசெல்லும் புனைவுப்பெருக்கு இந்நாவலிலும் நிகழ்ந்ததை நிறைவுடன் எண்ணிக்கொள்கிறேன். பிறாநாவல்கள் எவற்றையும் விட உளவலியும் துயரமும் அளிப்பதாக இருந்தது வெய்யோன். கர்ணனுடன் என்னை அடையாளம் கண்டுகொண்டமையால் அவன் அடைந்த துயரனைத்தையும் நானும் அடைந்தேன். என்னைச்சூழ்ந்திருக்கும் நட்பும் உறவும் என் உணர்வுநிலைகளால் துன்பப்பட்டிருந்தால் மன்னிக்கும்படி கோருகிறேன் இந்நாவல் எழுதும்போது ஒன்றைக் கவனித்தேன். சம்பந்தமில்லாத விஷயம்தான், ஆனாலும் பதிவுசெய்யவேண்டுமெனத் தோன்றியது. நாவல் அளிக்கும் கொந்தளிப்புகளால் தலைசூடாவதும் துயில்மறப்பதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85293

வெண்முரசு – இந்தியா டுடே பேட்டி

உங்களுடைய இருபத்தைந்து ஆண்டு காலக் கனவு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் வெண் முரசை.மிக நீண்ட கால உழைப்பும் அதை ஆரம்பிக்க தேவைப் பட்டிருக்கிறது.முழுமையாக அதை முடிக்க இன்னமும் தேவைப் படும்.இவ்வளவு நீண்ட உழைப்பு ஒரு இதிகாசத்தை செவ்விலக்கியமாக மறு ஆக்கம் செய்யும் முயற்சியாக அமைவது,தமிழ் இலக்கியத்தை பின்னோக்கி நகர்த்தும் செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு அல்லது இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பக் கூடிய மனநிலைக்கு எதிராகத்தான் இந்த நாவல் எழுத பட்டிருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66259

மரபிலிருந்து நவீன எழுத்து

அன்புள்ள ஜெ, நீலம் பரவலாக அனைவருக்கும் பிடித்திருப்பது ஆச்சரியம் அளித்தது. அதன் நடையையும் அமைப்பையும் வாசித்தபோது தீவிர இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்றுதான் நினைத்தேன். அத்தனை செறிவானதும் பூடகமானதுமான எழுத்து. ஆனால் கடிதங்களை வாசித்தபிறகு ஆச்சரியம்தான் நான் நீலம் நாவலை என் அம்மாவிடம் கொடுத்தேன். அம்மாவுக்கு பக்த விஜயம், பாகவதம் ரேஞ்சுதான். ஆனால் குந்தி இருந்து மூன்றுநாளில் கம்ப்யூட்டரிலேயே வாசித்துவிட்டார்கள். நல்லா இருக்குடா…அற்புதமா இருக்கு’ என்றார்கள் பேசிப்பார்த்தால் பெரும்பாலும் அவர்களுக்குப்புரிந்திருக்கிறது. என்னைவிட சில நுட்பங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63035

கருணா

திருவண்ணாமலையில் ஒரு பொறியியல் கல்லூரியின் பொறுப்பாளரான எஸ்.கெ.பி கருணா,பவா செல்லத்துரையின் நண்பராக எனக்கும் அறிமுகமானவர். சென்றமுறை நாஞ்சில்நாடன் பாராட்டுவிழாவுக்காகத் திருவண்ணாமலை சென்றிருந்தபோது அவரது கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தேன். நல்ல இலக்கியவாசகர். மிகப்பெரிய அக்கல்லூரியின் ஒரு திறந்தவெளி அரங்கு மிக அழகானது. கருணா எழுதும் அனுபவக்குறிப்புகளை இணையத்தில் வாசித்தேன். பேருந்தில் முதியவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் எழுந்து இடம் கொடுப்பது பற்றிய இரு அனுபவங்களை எழுதியிருக்கிறார். இரண்டு எல்லைகளில் உள்ள இரு அனுபவங்களைக் கோர்த்திருப்பதில் நுட்பம் தெரிகிறது. இரண்டுவகையான பண்பாட்டுச்சூழல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19566