Tag Archive: மரணம்

ஒரு மரணவிதி

என் எதிர்வீட்டுக்காரரும் நண்பருமான அனில்குமார் 27-6-2014 அன்று மரணமடைந்தார். வயது நாற்பத்தைந்துதான். மாரடைப்பு. அதிக நெருக்கமில்லை என்றாலும் அண்டைவீட்டாருடன் உள்ள நல்லுறவு எப்போதும் அவரிடம் இருந்தது. காலைநடை செல்லும்போது சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வோம். பொதுவாக பிள்ளைகளின் படிப்பு அல்லாமல் வேறு ஆர்வம் அவருக்கில்லை. அதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. ஆனாலும் மணிக்கணக்காகப் பேசமுடிந்தது. காரணம் அவர் நல்ல மனிதர். உயர்நிலைப்பள்ளி ஆசிரியர். மாலத்தீவில் அவரும் துணைவியும் பணியாற்றிய காலத்தில்தான் பதினைந்தாண்டுகளுக்கு முன் எதிரில் வீடு கட்டினார்கள். நானும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57157

கனிதல்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tx9AgSM6muk சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார், ‘சமவயதானவர்கள் இயற்கைமரணம் அடைய ஆரம்பிக்கும்போது நம் வாழ்க்கையின் இன்னொரு கட்டம் ஆரம்பிக்கிறது’ சமீபத்தில் என் அண்ணன்களில் ஒருவர் இறந்துபோனார். என் அம்மாவின் இரண்டாவது அக்காவின் மூத்தமகன் ரவி. மாரடைப்பு. சர்க்கரை நோயும் இருந்தது. இங்கே சகோதரிகளுக்குப் பிறந்த பிள்ளைகளை ஒரேகுடும்பத்துச் சகோதரர்கள் என்று சொல்வார்கள். ‘நீங்கள் எத்தனைபேர்?’ என்று கேட்டால் ‘நாங்கள் மூன்று அம்மாக்களுக்கு எட்டுபேர்’ என்று சொல்வார்கள் என் அம்மாவின் மூத்த அக்கா தாட்சாயணிக்கு ஒருமகன் ஒரு மகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41528

அகமும் ஆன்மீகமும்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் ஆன்மீகப்பயணத்தில் நான் தனித்தவனல்ல என்ற உணச்சி ஏற்படுகிறது. ஒரு கோரிக்கை, நம்முடைய கடலோரத்து தெய்வங்களைப்பற்றி ஏதாவது விரிவாக எழுதமுடியுமா? மற்ற இடங்களின் வழிபாட்டு மரபைப்பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் கடலோர மக்களின் ஆன்மீகம் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறது இதற்கான காரணம் ஏதாவது இருக்கமுடியுமா? செந்தில் வி அன்புள்ள செந்தில் தமிழகத்துக் கடலோர மீனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். நூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35458

மரணம்

அன்புள்ள ஜெயமோகன், இன்று கண்முன்னே ஒரு மரணத்தைக் கண்டேன். பக்கத்துக் கடையில் வேலை செய்யும் பாதுகாவலர், திடீர் என்று நின்ற இடத்திலேயே குப்புற விழுந்தார். சென்று பார்த்தபோது தவளை போல் கால்கள் மடங்கியிருக்க, முகம் தரையில் முட்டிக்கொண்டிருந்தது. தூக்கி உட்கார வைத்தோம், வலிப்பாக இருக்கும் என்று கையில் சாவியை ஒரு நிமிடம் கொடுத்துப்பார்த்தோம். ஒரு நிமிடத்தில், ‘ஹூம்’ என்ற சத்தத்தோடு உடம்பு லேசாய்த் தூக்கிப்போட்டது. அவர் கண்களைப் பார்த்தேன்… வாயெல்லாம் ரத்தமாக, கண்கள் செம்மண் நிறத்தில், வெடித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20647