Tag Archive: மன்னிக்கவும்…

மன்னிக்கவும்…

நேற்று முன்தினம் பேருந்தில் நாகர்கோயில் வந்து இறங்கினேன். பெட்டியையும் மடிக்கணினியையும் எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். அருண்மொழியிடம் அன்பாக நாலு வார்த்தை பேசிக்கொண்டிருந்தபோது ‘பாஸ்போர்ட் எல்லாம் எங்கே?” என்றாள். ‘பெட்டியில் இருக்கிறது’ என்றாள். ‘இப்பவே எடுத்து வச்சிடறேன்….அப்றம் மறந்திருவேன்’ என்று வந்து பார்த்தால் பெட்டி வேறு அதே நிறம்தான். ஆனால் என் பெட்டியில் ஏகப்பட்ட பயணவிழுப்புண்கள். என்னைமாதிரியே ஏராளமான லேபிள்கள். இது புத்தம்புதியதாக இருந்தது. பயணத்திற்கு இனி நாலைந்து நாட்கள்தான். பதறியடித்து வெளியே ஓட முயன்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75811