Tag Archive: மனுஷ்யபுத்திரன்

இரு சந்தேகங்கள்

ஜெமோ இரண்டு சந்தேகங்கள். முதல்சந்தேகம் மாதொரு பாகன் நாவலுக்கு எழுந்த எதிர்ப்பை நீங்கள் சரியாகவே கண்டித்திருக்கிறீர்கள். உங்கள் ஆணித்தரமான குரல் வரவேற்புக்குரியது. ஆனால் சில மாதங்களுக்கு முன் உங்கள் கட்டுரையின் ஒரு வரி இதேபோன்ற எதிர்ப்பைச் சந்தித்தது. உங்கள் சொந்த ஊரிலேயே. அதுவும் முழுக்கமுழுக்க இதேபோன்ற நிகழ்வுதான். இதேபோல சாதியக்குழுக்களும் உதிரி இந்த்துவக் குழுக்களும்தான் அதைச் செய்தார்கள். நீங்கள் மிரட்டப்பட்டதாக எழுதியிருந்தீர்கள். நீங்கள் மிரட்டப்பட்டபோது அதை ஃபேஸ்புக்கில் பலர் எழுதியிருந்தனர். சொல்லப்போனால் சில இந்துத்துவர்கள் கண்டித்திருந்தனர். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69051

ஞானக்கூத்தன் பற்றி மனுஷ்யபுத்திரன்

http://www.youtube.com/watch?v=AVldzS9OHsg விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிஞர் மனுஷ்யபுத்திரன் வாழ்த்து. கே.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றித் தயாரித்து இயக்கும் என்ற ‘இலைமேல் எழுத்து’ ஆவணப்படத்திற்காக எடுக்கப்பட்ட பேட்டியில் இருந்து

Permanent link to this article: https://www.jeyamohan.in/68306

வெண்முரசு வாசகர்கள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ., இந்தக் கடிதம் உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்தல்ல… (ஞாநி மற்றும் மனுஷ்யபுத்திரன்)… எங்கள் (வாசகர்கள் மீதான) விமர்சனம்… ஏதோ விசிலடிச்சான் குஞ்சுகள் போல எங்களை ஞானி கற்பனை செய்கிறார்… மனுஷ்யபுத்திரன் வெண்முரசு படித்துவிட்டு நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் படையில் சேர்ந்துவிடுவோம் என்று பயப்படுகிறார்… இதை எல்லாம் படிக்க மிகவும் வருத்தமாக உள்ளது… பதில் 1) நாங்கள் வெண்முரசு படிப்பது உங்களுக்காகவே, படைப்பின் தரத்திற்காக அல்ல – என்று நேரடியாக வாசகர்களாகிய எங்களைத் தாக்குகிறார்.. கடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65881

மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு

மகாபாரதம் ஒரு மகத்தான காப்பியம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைக்கு இந்தியா முழுக்க அது சோப்பு விளம்பரம்மாதிரி எல்லா மொழிகளிலும் எராளமான தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மகாபாரதத்தின் ஆன்மீக சாரம் என்ன ஆன்மீக விழிப்பை இந்தியர்களுக்கு ஏற்ப்படுத்தியது? ராமாயணமும் மகாபாரதமும் இந்தியாவில் கடந்த இருபதாண்டுகளில் அரசியல்ரீதியாக இந்துத்துவா எழுச்சிக்கு எப்படியெல்லாம் பயன்பட்டன என்பதை மறைக்க முடியுமா? நவீன சிந்தனா முறையின் வழியே நமது தொன்மங்களை கேள்விக்குள்ளாக்குவதும் அவற்றை மறுகட்டுமானம் செய்வதும்தான் ஒரு பழைய இலக்கிய பிரதி ஒரு புதிய எழுத்தாளனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65626

பெண் எழுத்தாளர்கள் – மனுஷ்யபுத்திரன்

ஜெ இது மனுஷ்யபுத்திரன் அவரது ஃபேஸ்புக்கில் இன்று எழுதியது. …………………………………………………………………….. ’’இந்த இரண்டு வருஷங்களில் இருபது நாடுகளுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். இதில் ஒன்றுகூட இலக்கிய நிகழ்ச்சியில்லை. எல்லாமே ஃபிலிம் ஃபெஸ்டிவல் சம்பந்தப்பட்டது. எனது வளர்ச்சி குறித்து மனுஷ்ய புத்திரன் ‘ஒரேயொரு நாவல்தான் இவர் எழுதியிருக்கிறார். யார் இந்த வாய்ப்புக்களை உருவாக்கித்தருகிறார்கள்’ என சந்தேகம் எழுப்பியிருந்தார். ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நியாயமான அங்கீகாரத்தைக்கூட அந்தரங்க சலுகையாகப் பார்க்கும் ஆண் எழுத்தாளர்களின் பொதுப்புத்தியால் இப்படியே யோசிக்க முடியும். அவர்களுக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57657

மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்களை நீங்கள் கண்டித்திருப்பதைக் கண்டேன். இந்தத் தருணத்தில் மனுஷ்யபுத்திரனின் குரலுக்கு எந்தவகையான விளைவுகள் இருக்குமென நினைக்கிறீர்கள்? கே.ராமச்சந்திரன் அன்புள்ள ராமச்சந்திரன், எல்லா மதங்களிலும் இரு வகையான தேக்கங்கள் உருவாகும். அதன் உலகியல் ஒழுக்க அடிப்படைகள் காலப்போக்கில் பழமையானவையாக ஆகும். அதன் ஆன்மீகத்துக்கான விளக்கங்கள் பொருந்தாமல் போகும். அந்நிலையில் அவற்றை மாற்றுவதற்கு எதிரான குரல்கள் எழும். மதச்சீர்திருத்தம் என நாம் சொல்வது அதையே மதத்தின் ஆன்மீக உள்ளடக்கத்தையும் அதன் உலகியல் நடைமுறைகளையும் பிரித்தறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34262

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

இலங்கையைச்சேர்ந்த சிறுமி ரிஷானா நஃபீக் சவூதி அரேபியாவில் முறையான விசாரணை இல்லாமல் கொடூரமான முறையில் கொல்லப்பட்டமைக்கு எதிராக மனுஷ்யபுத்திரன் நக்கீரனில் எதிர்வினையாற்றியிருந்தை இப்போதுதான் வாசித்தேன். ரிஷானா சவூதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் கழுத்துவெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரிஷானா செய்த குற்றம் ஒரு குழந்தையின் மரணத்துக்குக் காரணமாக அமைந்தது. அக்குற்றத்துக்கு ஆதாரமாகச் சொல்லப்பட்டது அவரே அளித்ததாக முன்வைக்கப்பட்ட ஒரு வாக்குமூலம். அந்த வாக்குமூலம் அவருக்குத் தெரியாத மொழியில் இருந்தது, அவர் அதில் கையெழுத்திடச்செய்யப்பட்டிருக்கிறார். தன்னந்தனியாக சவூதியரேபியா சென்ற ,படிப்பறிவில்லாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34193

பெரியார் விருதுகள்

இவ்வருடத்தைய பெரியார் விருதுகள் பெறுபவர்களில் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் இயக்குநர் சீனு ராமசாமியும் இருக்கிறார்கள். இருவருமே நான் அணுகி அறிந்தவர்கள். இருவருக்குமே ஈ.வே.ரா அவர்கள் ஆதர்ச சிந்தனையாளர். இவ்விருதுகள் அவர்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருக்குமென நினைக்கிறேன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/34188

கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ, மனுஷ்யபுத்திரன் -கடிதம் படித்தேன். நான் இலக்கியத்திற்குப் புதியவன் என்பதால், இதற்கு முன் என்ன நடந்தது என்று தெரியாது. அதனால் இந்தக் கடிதம் அது குறித்து அல்ல, பொதுவாக இப்படிப்பட்ட சர்ச்சைகளைப் பற்றியது. பொதுவாக அவதூறுகளையும் வசைகளையும் கேட்கும்போது எனக்கு எழும் கேள்வி இது: ஏன் இதுபோன்ற கருத்துக்களை பொதுவில் சொல்லவேண்டும், ஏன் அதைத் தனியாக அந்த மனிதனிடம் சொல்லக்கூடாது? ஒருவனிடம் அவனைப் பற்றிய விமர்சனங்களை நேரடியாகச் சொல்லும்போது, அது குறித்து அவன் தன்னுடைய பார்வையைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8973

மனுஷ்யபுத்திரன் -கடிதம்

அன்புள்ள ஜெ, உயிர்மையில் உங்களைப் பற்றி மனுஷ்யபுத்திரன் ஏளனம் பண்ணி எழுதியிருந்த கட்டுரை என்னை வருத்தத்துக்கு உள்ளாக்கியது. நீங்கள் உயிர்மை என்ற பத்திரிக்கை உருவாகவும் நடக்கவும் என்ன பங்களிப்பு செய்திருக்கிறீகள் என்று உங்கள் வாசகர்களுக்கெல்லாமே தெரியும். பல வருடம் நீங்கள் அதிலே எழுதியிருக்கிறீர்கள். மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறீர்கள். எதற்குமே உங்களுக்கு பணம் ஏதும் வந்திருக்காது. சிறுபத்திரிக்கை வளரட்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். இப்படி எழுத்தாளர்களை பயன்படுத்தி வளர்ந்த பின்னர் அவர்கள் மேலேயே அவதூறு செய்யவும் வசை பாடவும் அதே இதழைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8945

Older posts «

» Newer posts