Tag Archive: ’மனிதர்கள் நல்லவர்கள்’

தெளிவத்தை ஜோசப்பின் ‘மனிதர்கள் நல்லவர்கள்’ -முருகபூபதி

இந்த ஆண்டு தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும் தெளிவத்தை ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர். இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள். வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார். அவரது எழுத்துக்களும் சுவாரஸ்யமானவை. மனிதர்கள் நல்லவர்கள் என்ற சிறுகதையை அவர் மல்லிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறார். காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வெவ்வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால் காலத்தை வென்றும் வாழும் கதையாக என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43330

’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்

நாளைக்குத் தீபாவளி பண்டிகை நெரிசலில் பஸ் திணறியது. கை நிறைந்த பைகளும், பை நிறைந்த சாமான்களுமாய், ஆட்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். உத்தியோகம் என்று பிரித்துவிட்ட பிறகு பெற்றவர் பிள்ளைகளுடன் கணவன் மனைவி மக்களுடனும் – உற்றார் உறவினருடனும் ஒன்றாகிக் களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. “இந்த பஸ்சை விட்டாச்சுன்னா அடுத்தது அஞ்சுக்குத்தான்” என்றபடி தனது முழுப்பலத்தையும் காட்டி ஒருவர் முண்டி முன்னேறுகிறார். பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41396