Tag Archive: மனனம்

மனப்பாடம் – கடிதம்

அன்புள்ள ஜெ தங்களின் மனப்பாடம் பற்றிய பதிவை பார்த்தேன். எனக்கு மனனம் செய்வதில் சிறு தயக்கம் இருந்தது. அது இப்பொழுது நீங்கியது. சென்ற ஆண்டு நானும் எனது நண்பரும் நாளும் ஒரு திருக்குறள் கற்க வேண்டும் என்று முடிவு செய்து, அக்குறளை பற்றிச் சற்று ஆராய்ந்து, அதற்கு ஒரு உதாரணம் கண்டுக்கொண்டு எங்களது வலைப்பூவில் பதிவு செய்துவந்தோம் (மேற்படிப்பின் காரணமாக இடைவேளை ஆனால் வெண்முரசுவிற்கு அல்ல). துவக்க காலத்தில் நான் எல்லா குறள்களையும் மனனம் செய்து வந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71144

மனப்பாடம்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா?சமீபத்தில் புகழ்பெற்ற இலக்கியப்பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை கேட்டேன்.மடைதிறந்த வெள்ளமென பாடல்களை கொட்டினார்.தங்கு தடையற்ற வார்த்தைகள்.அதற்கு தகுந்த பாடல் மேற்கோள்கள்.இவ்வளவு பாடல்களையும் மனனம் செய்ய அவருக்கு எத்தனை காலம் ஆகியிருக்கும்.இதற்கு எவ்வளவு மெனக்கிடல்.அப்படியே படித்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல்… இப்படி பாடல்களையும்,மேற்கோள்களையும் நினைவில் வைத்திருக்க தனி ஆற்றல் வேண்டுமா?தெரிந்தாலும் அதனை சபையில் தடையின்றி எடுத்துச்சொல்லும் தனித்திறன் எது? ஏன் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை?நானும் பேச்சாளன் என்கிற முறையில் உங்களின் கருத்து மதிப்புவாய்ந்ததென கருதுகிறேன்! அன்புடன், எம்.எஸ்.ராஜேந்திரன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70835