Tag Archive: மதம்

2.மறைந்து கிடப்பது என்ன?

சாந்தோக்ய உபநிடதத்தில் ஆருணியாகிய உத்தாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொல்கிறான், மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன. ஐநூறுவருடத்துக்கு மேல் காலப்பழக்கமுள்ள  ஏதாவது ஒரு மதத்தில், ஒரு தத்துவசிந்தனைமரபில் இதற்கிணையான ஒரு முழுமைநோக்கு பதிவாகியிருக்கின்றதா? உலகசிந்தனைகளை இன்று நாம் இணையம் மூலம் எளிதாக தொட்டுச்செல்லமுடிகிறது. நீங்களே இதற்கான விடையைத்தேடிக்கொள்ளலாம். என் எளிய வாசிப்பில் நான் அபப்டி எதையுமே கண்டதில்லை. மனிதசிந்தனை வெளியில் இந்தியஞானமரபுடன் இணைநோக்கத்தகுதியான சிந்தனைமரபுகள் இரண்டே. தொன்மையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1333

1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகத்துக்கு நாகரீகத்திலும் மேலாதிக்கத்திலும் மேல்நிலை காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகம் இன்றுவரை அதற்கு இருக்கும் உயர்பண்பாட்டையும் வணிகமேலாதிக்கத்தையும் அடைந்தது. அதற்கு முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை நாம் காண்கிறோம். அதற்கு முன் கிரேக்கர்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இந்தியா பண்பட்டிலும் செல்வத்திலும் ஓங்கியிருந்த ஒரு நாடு என நாம் அறிவோம். உலகமே இந்தியாவை கல்விக்காகவும் வணிகத்துக்காகவும் தேடிவந்த ஒருகாலகட்டம் இருந்தது. இந்தியா என்பது ஒரு பொற்கனவாக உலகமனத்தில் இருந்தது. இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1327

வேதமூலம்

கரிய மெலிந்த உடலில் ஏராளமான ரத்தக்குழாய்களுடன், ஒட்டிய கன்னங்கள் மீது நான்குநாள் தாடியும், கூர்மையாக முறுக்கப்பட்ட அடியில் நிக்கோடின் பழுப்பு படிந்த வெள்ளை மீசையும் பச்சைநிறத்தில் முண்டாசுக்கட்டுமாக ஒரு மனிதர் தேடிவந்தார். ”அய்யா வணக்கமாக்கும்” என்றார்.”வாங்க”’ என்றேன்.”அஞ்சு நிமிஷம் கிட்டுமா?” என்றார் பணிவுடன். ”எதுக்கு?” என்றேன், என்ன விற்கிறார் என்று குழம்பி.”சதுர்வேதங்களைக் குறிச்சு ஒரு குறெ வர்த்தமானம் சொல்லணும்” என் திகிலை அனுமதியாகப் பெற்று உள்ளே வந்து அமர்ந்தவர் ”சாய வேண்டா, நான் பால் குடிக்குக இல்ல” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/379

மலரிலிருந்து மணத்துக்கு…

அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் அவ்வப்போது பழைய பாடல்களுக்கு அளிக்கும் விளக்கங்களை வாசிக்கிறேன். ஆனால் நம் பக்தி மரபில் பெரும்பாலும் தோத்திரப்பாடல்கள்தானே உள்ளன. முருகா உனக்கு அதைத்தருகிறேன் இதைத்தருகிறேன், எனக்கு நீ இதையெல்லாம் தரமாட்டாயா என்ற மாதிரியான பேரம்பேசல்கள். நீ அப்படிப்பட்டவன் அல்லவா, இன்னாருக்கு மருமகன் அல்லவா, இன்னாருக்கு பிள்ளை அல்லவா, இத்தனைபெண்களுக்கு  கணவன் அல்லவா, என்பதுபோன்ற துதிகள். இவற்றை ஒருவன் மனப்பாடம்செய்து தினமும் சொல்லிக்கொள்ண்டிருப்பதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது? எங்கள் அப்பா முருக பக்தர். சின்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4003

சாலியமங்கலம் பாகவத நிகழ்ச்சி

அன்புள்ள ஜெ நண்பர் ஒருவரின் அறிமுகத்தில், தஞ்சாவூர் அருகில் உள்ள பாகவத நிகழ்ச்சி சென்றேன். பிரஹலாத சரிதம் – அந்த ஊரில் உள்ள குடும்பங்களில் உள்ளவர்கள் பாத்திரமேற்று நடத்து ஒரு இசை நாடகம். இரவு 1030க்கு ஆரம்பித்து காலை 330 வரை. குளித்து விட்டு பின் 4லிருந்து 6 வரை. 530 மணிக்கு நரசிம்ம அவதாரம். முழுவதும் ‘சுந்தர’ தெலுங்கினில் – மிகவும் ரசித்தேன். அனைவரும் ஆண்களே- லீலாவதி முதல். பல சுவாரசியமான துணுக்குகள் – கிட்டத்தட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75183

மதம் – கடிதம்

ஜெ, வணக்கம். இன்று தங்கள் வலைத்தளத்தில் அழியும் பாரம்பரியம் பதிவில் இன்னும் 50 ஆண்டுகளில் இந்து மதம் அழியவோ செயலற்ற நிலையை அடையவோ வாய்ப்புண்டு என்று சொல்லி இருந்தீர்கள். இது குறித்த என்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மார்க்ஸியம் பற்றிய எந்தப்புரிதலும் எனக்கில்லை. மதம் மாற்றும் முறைகள் பற்றியும் நானறியேன். என்னைச் சுற்றி மதம் மாறியவர்கள் பெரும்பாலும் வறுமையும் இக்கட்டான கட்டுப்பாடுகளினாலுமே மதம் மாறினார்கள். என் வரையில் நாம் வழி வழியாகக் கைக்கொண்டு வரும் மதத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75023

மதமெனும் வலை

(2011 ல் எழுதப்பட்டது,மறுபிரசுரம்) ஜெ.எம், இந்து மதம் சார்ந்த குறிப்பிட்ட ஏதோ ஒரு சாதியில் பிறந்து விட்டாலும் – மதம்,சாதி ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாகவே என் பெற்றோர் காலத்திலிருந்து எங்கள் குடும்பச் சூழல் இருந்து வந்திருக்கிறது.கோயில்களுக்குச் சென்றாலும்,விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடினாலும் -மத , சாதி முத்திரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வெளியில் இருந்து அவற்றைப் பார்க்கும் நோக்கும் , சடங்குகளுக்கு முதலிடம் தராத மனப்போக்கும் இயல்பானதொரு நடப்பாகவே எங்கள் வீட்டில் இருந்து வந்தது. பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11930

உள்ளான்

ஓயாமல் ஒவ்வொரு கணமும் எண்ணிக்கொண்டிருப்பவர்களின் உள்ளே இருந்துகொண்டிருக்கும் உள்ளே ஆனவனை, உள்ளவனை, தொலைவிலிருப்பவனை, அருகிலிருந்து அனைத்துக்கும் உதவும் சேவகனை, தென்னன் பெருந்துறையில் கோயில்கொண்டவனை வேதங்களாக ஆனவனை, பெண்ணை உடலில்பாதியாக்கியவனை, எளியவனாகிய என்னை ஆட்கொண்ட நாயகனை, தாய்வடிவமாக ஆன தத்துவத்தை, ஏழுலகும் தானே ஆனவனை, அவ்வுலகங்களை ஆள்பவனை பாடியபடி ஆடுவோம் அம்மானை! சொல்லிச்சொல்லி எஞ்சும் ஒன்றின் முன் வைக்கப்பட்ட சொற்கள். உள்ளமெல்லாம் கனிய எண்ணுபவர்களின் உள்ளே குடிகொள்பவன். அனைத்துக்கும் உள் ஆக ஆனவன். உள்ளவன். உள்ளுவதும் ஆனவன். உள்ளல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1887

மந்திர மாம்பழம்

”சாவான பாவம் மேலே வாழ்வெனக்கு வந்ததடீ நோவான நோவெடுத்து நொந்துமனம் வாடுறண்டீ” நான் இருபத்தேழு வருடம் முன்பு திருவண்ணாமலையில் பார்த்த ஒரு பண்டாரம் பாடிய வரி இது. இதை நான் ஏழாம் உலகம் நாவலின் மகுடவரியாகக் கொடுத்திருக்கிறேன் அவர் விசித்திரமான மனிதர். சிக்குபிடித்த தலைமயிரும் அழுக்குடையுமாக பித்தர் கோலம். பேசுவதேயில்லை, பாடுவதுடன் சரி. எங்காவதுபோய் எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்து கோயிலின் பின்பக்க கோபுரவாசலில் படுத்துக் கொள்வார். நானும் அன்று கிட்டத்தட்ட அதே வாழ்க்கைதான். அவர் பகல்களில் பாடுவதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/509

குரு என்னும் உறவு

திரு ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். நன்றி மற்றும்  வாழ்த்துக்கள் நல்ல ஒரு படத்தை  தந்தமைக்கு . இது நான் கடவுள் படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அகோரிகளை பற்றி தெளிந்திட ஒரு வினா. ருத்ரன் என்ற அகோரி   குரு என்ற உறவுக்கு ஆட்பட்டவனாய் இருப்பது எல்லா உறவும்  துறக்க வேண்டி வாழ்பவன் என்பதற்கு முரணாக இருக்கின்றது. சற்று தெளிவு படுத்த வேண்டுகிறேன். நன்றி, நரேந்திர பிரபு. அன்புள்ள நரேந்திரன், உங்கள் கேள்வி இயல்பானது. ஆனால் நாம் நம்முடைய அடிபப்டையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1892

Older posts «

» Newer posts