Tag Archive: மதம்

இருவர்

மேரி மக்தலீன் குறித்து தேவாலயங்கள் வழியாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவளைப்பற்றி மதகுருக்கள் மேடையில் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அவளைப்பற்றிச் சொன்னவர் ஒரு மதகுரு. எங்களூரின் கத்தோலிக்க தேவாலயத்தில் அவர் சிறிதுகாலம் பணியாற்றினார். அந்த ஆலயத்தின் அத்தனை மதச்சடங்குகளுக்கும் அப்பால் நிற்பவராக தோன்றினார் அவர். கீழே லௌகீக லாபங்களுக்காக காணிக்கைகளுடன் வந்திருக்கும் மக்களுக்கு மேலே வானைத்தொட எழுந்து நிற்கும் சிலுவையின் தூரமும் தனிமையும் அவருக்கிருந்தது. அவர் பெயரை எழுதி அந்த தனிமையைக் கலைக்க விரும்பவில்லை என்றாலும் என்னுடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5434

ஆலயம் தொழுதல்

நகைச்சுவை தமிழ்நாடு ஆஸ்திக மண்டலி மற்றும் இருபத்தேழு [ஏழும் இரண்டும் ஒன்பது] துணை அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட ‘ஆலயவழிபாடு, அருமையும் பெருமையும் வழிமுறைகளும் சடங்காசாரங்களும் இன்னபிறவும்‘ என்ற தலைப்பில் அமைந்த சின்னஞ்சிறு பிரசுரம் ஆத்திகர்களுக்கு மிகமிக உதவிகரமானதாகையால் அதை இங்கே அளிக்கிறோம். சுருக்கமாக. ஆத்திகத்துக்குரிய அடாசு மொழி சற்றே நவீனப்படுத்தப்பட்டிருப்பதை ஆத்திக அன்பர்கள் மனமுவந்து மன்னிக்கவேண்டும். ஆலயம் என்பது இந்துப்பண்பாட்டின் அடிப்படையான அமைப்பாகும். ஆ+லயம் என்ற சொல்லாடியே ஆலயமானது என்று புராணகதாசாகரம் லட்சுமிகிருஷ்ணமாச்சாரியாரவர்கள் குறிப்பிட்டிருப்பதை இங்கே எடுத்துரைக்கிறோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/734

தமிழில் சிறுபான்மை இலக்கியம்

பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுதத் துணிகிறேன். வகைப் படுத்தாமல் இலக்கியத்தை அறிந்து கொள்ளுவது சிரமம் என்பதனால், வரலாற்றுப் பின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு, எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற பிரிவினையைச் செய்யலாமே ஒழியச் சாதாரணமாக இப்படி ஒரு பிரிவினையைச் செய்வது அபாயகரமான ஒன்று. வகுப்பு வாதத்தின் பிடியில், அழிவை நோக்கி செல்லும் இந்த தேசத்தில், அது மேலும் பிளவு உருவாகவே வழி வகுக்கும். விமரிசன தளத்துக்கு அப்பால் வாசக தளத்தில் இப்பிரிவினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/370

இந்துமதமும் தரப்படுத்தலும்

இட்டக்வேலி தேவியை பராசக்தியாக ஆக்கவேண்டுமா என்பதே சிக்கல். இதை இந்துமதத்துக்குள் உள்ள ஒரு சிக்கலாகவே காண்கிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6833

கடவுளின் மைந்தன்

  ஆயிரம் பல்லாயிரம் கைகள் கூடி ஆர்ப்பரித்து பாடி பரவசம் கொண்டு தேடித்துழாவும் வெளிக்கு அப்பால் மெல்லிய வருத்தப்புன்னகையுடன் நீ நின்றிருப்பதைக் காண்கிறேன்.     தனித்து, பசித்து, விழித்திருக்கும் ஒருவன் தனக்கு தான் மட்டுமே என தன் நெஞ்சில் கை வைக்கும்போது அந்தக்கை உன் பாதங்களில் படுவதையும் இனிய சிரிப்புடன் அவன் தலையை நீ வருடுவதையும் கண்டிருக்கிறேன்.     என்ன விளையாடுகிறாயா? நாங்கள் எளியமக்கள். வெள்ளத்தில் செல்லும்போது ஒன்றோடொன்றுபற்றிக்கொண்டு பந்தாக ஆகிவிடும் எறும்புகளைப்போன்றவர்கள். கூடி நிற்கையிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5985

ஓர் எளிய கூழாங்கல்

பதினான்குவருடம் காட்டில் உழன்றாலும் அவன் சக்ரவர்த்தித் திருமகன். இடையர்குடிலில் வளர்ந்தாலும் அவன் யாதவர்களின் மன்னன். அரசு துறந்து சென்றாலும் அவன் சாக்கிய குலத்தரசு. ஆம், மகதி கோசாலனும் வர்த்தமான மகாவீரனும் கூட பிறப்பால் மன்னர்களே. பெரும் ஜனக்ககூட்டங்களை ஆள்வதற்காகவே அவதரித்தவர்கள். கோடிக்கணக்கான மனிதர்கள் நடுவே கூழாங்கல்வெளியில் வைரமென ஒளிவிடுபவர்கள்…  காஜதான் தேவாலயம்,கோவா ஆனால் தச்சன்மகன் எளியவன். அவனை நெரிசலான சாலையில் ஒருவருமே அடையாளம் காணமுடியாமல் போகலாம். அவன் நம் வீட்டுவாசலில் வந்து நின்றானென்றால் நாம் ஒருவேளை அதிருப்தியுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5280

மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

தமிழகத்தின் மதமாற்ற தடைச் சட்டம் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இக்கருத்தரங்கில் கூறப் பட்ட காரணங்களை நான் வழி மொழிகிறேன். இந்தச் சட்டம், சமூகங்களுக்கு இடையே மனக் கசப்பையும் அவநம்பிக்கையையும் வளர்க்கக் கூடியதாக உள்ளது. நம்முடைய தேசத்தில் மதம் சில தளங்களை தவிர்த்துப் பார்த்தால் தனிப்பட்ட நம்பிக்கை என்ற தளத்தில் இயங்கவில்லை. தனிப்பட்ட நிலைபாடு என்ற தளம் அதற்கு முற்றிலும் இல்லை.இங்கே மதம் என்பது மத அடிப்படையிலான சமூகங்கள் என்றே பொருள் படுகிறது. ஆகவே மத விஷயங்களில் கூட்டாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/601

கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா

அன்புள்ள ஜெயமோகன், நான்  உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன. நான் சமீப காலங்களாக ஒரு விதமான மன உறுத்தலில் இருக்கிறேன். அதை உங்களிடம் கூறி உங்கள் ஆலோசனையை பெறலாம் என நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறினால் அது மிகவும் பயனுடையதாய் இருக்கும் என நம்புகிறேன். நான் படித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/637

மதங்களின் தொகுப்புத்தன்மை

  என் பெயர் கிரிதரன். சென்னையில் சாப்ட்வேர் எஞ்சினீயர் . நான் தங்களுடைய இந்திய ஞானம் படித்தேன். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு eye opener. நான் தங்களுடைய இணைய தளத்தில் வடகிழக்கு நோக்கி 9,ஒரு மாவீரரின் நினைவில் வாசித்தேன்.தங்களுடைய இந்தக் கட்டுரையில் பத்மசம்பவர் எப்படி திபெத்திய பௌத்தத்தை நிறுவினார் என்று எழுதியிருந்தீர்கள். ’இந்திய ஞானம்’நூலில் இந்து மதம் எப்படிக் காலத்திற்கேற்ப உருமாறித் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது என்பதை விளக்கி இருந்தீர்கள். இந்து மதம் ஆரம்பம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16866

3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!

சிலநாட்களுக்கு முன்னர் திருவையாறு  ஐயாறப்பன் ஆலயத்தில் சென்றுகோண்டிருந்தபோது வழிபாட்டுணர்வுடன் சென்றுகோண்டிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மலையாள இலக்கியத்திறனாய்வாளர் கல்பற்றா நாராயணன் என்னிடம் சொன்னார் ”பக்தியில் மட்டும்தான் ஒரு சிறப்பு உள்ளது, அதில் மூழ்கி மூழ்கிச் செல்வதற்கான இடம் இருக்கிறது” நான் சொன்னேன் ”பக்தி என்பது உண்மையில் ஒற்றைப்படையான ஓர் உணர்வே…பக்தியை இந்திய பக்தி இயக்கங்கள்தான் மூழ்கிச்செல்லவேண்டிய கடலாக மாற்றின. பக்தியை முழு வாழ்க்கையளவுக்கே பெரிதாக்கிக் கொண்டன அவை. பக்தியில் வாழ்க்கையின் எல்லா கூறுகளையும் கொண்டுவந்துசேர்த்துக் கொண்டன. நம்முடைய பக்தியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1337

Older posts «

» Newer posts