Tag Archive: மணிரத்னம்

மகாபாரதம் திரையில்…

1

மகாபாரதம் எந்த இந்திய சினிமா இயக்குநருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். நானறிந்து அத்தகைய பெருங்கனவு மணிரத்னத்திற்கும் கமல்ஹாசனுக்கும் உண்டு. அதன்மீதான தயக்கம் இருகாரணங்களால்தான். ஒன்று அதன் பிரம்மாண்டம், அதன் எப்பகுதியை எடுத்துக்கொண்டாலும் ஒரு சினிமாவாக சுருக்குவது பெரிய அறைகூவல். எப்படி சுருக்கினாலும் விடுபட்டவற்றைப்பற்றிப் பேசவே ஆளிருக்கும். இன்னொன்று அதன் செலவு. சரியாக எடுப்பதென்றால் அது கோடிகளின் ஆடல். என் கனவும் ஒரு மகாபாரதப்படத்தில் பணியாற்றவேண்டுமென்பதே. மணிரத்னத்திடம் அதைப்பற்றி பேசியிருக்கிறேன். கமலிடமும் சொல்லியிருக்கிறேன். இப்போது அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83834

மின்தமிழ் பேட்டி 4

download (1)

38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73137

சுஜாதாவை அடையாளம் காண்பது…

மணிரத்னமும் நானும் பொன்னியின் செல்வனுக்காகத் தஞ்சையில் இடம்பார்க்க அலைந்தோம். மணிரத்னம் கூட்டத்தை அஞ்சுபவர். ஆகவே பொதுவாக வெளியே வரமாட்டார். ஆனால் தஞ்சையில் அவரை யார் அடையாளம் காணப்போகிறார்கள் என்று நினைத்தேன். அவருடன் தெருக்களில் சுற்றியலைந்தபோது ஒன்று தெரிந்தது. பிரபலங்களை மக்கள் ஒரு குறிப்பிட்ட தோரணையில் கற்பனைசெய்திருக்கிறார்கள். வேறுமாதிரி இருந்தால் எளிதில் அடையாளம் காணமாட்டார்கள். கும்பகோணம் ராமசாமிகோயில் முன் கல்லில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இருவரில் ஒருவர் மணிரத்னம் என்று யாரால் சொல்லமுடியும்? ஆனால் பெண்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள். நேராக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34747

மணிரத்னம்,கடல்,நான்

அன்புள்ள ஜெ, கடல் நீங்கள் எழுதிய படம் என்று இப்போதுதான் அறிந்தேன். கடல்பற்றி எந்தச்செய்தியுமே இல்லாமல் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த நெஞ்சுக்குள்ளே என்ற பாட்டு மட்டும்தான் இதுவரை வெளிவந்துள்ளது. நான் சமீபத்தில் கேட்ட அற்புதமான பாடல் அது மணிரத்னம் என் ஆதர்ச இயக்குநர். அவருடன் நீங்கள் இணைந்து செயல்படவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அது இப்போது சாத்தியமானதில் மகிழ்ச்சி. படம் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன் சியாமளா பாலகிருஷ்ணன் அன்புள்ள சியாமளா, மணிரத்னத்துக்கும் எனக்குமான உறவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31627