Tag Archive: மணிமேகலை

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9

இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும் யுனெஸ்கோவாலும் பேணப்படுகின்றன [போராப்புதூர் தூபி 1882ல் பழுபார்க்கப்படுகிறது] இந்து ஆலயங்கள் பெரும்பாலும் அறநிலையத்துறை, மாநிலத் தொல்பொருட்துறை கையில் உள்ளன. ஆகவே இஷ்டத்துக்கு சூறையாடப்படுகின்றன. ஆலயங்களில் செய்யக்கூடாத சில உண்டு. திரும்பத்திரும்ப அதை எழுதிவருகிறேன் 1. அவற்றின் கட்டுமான அமைப்புக்கு அன்னியமான புறக்கட்டுமானங்களைச் செய்யக்கூடாது 2. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80821

பளிங்கறை பிம்பங்கள்

மணிமேகலை தமிழில் அதிகமாக விவாதிக்கப்படாத ஒரு காவியம். அஸ்வகோஷரின் புத்தசரிதம் காவியமாக கொள்ளப்பட்டாலும் அது வரலாற்றுநூலே. மணிமேகலைதான் பௌத்தமரபில் எஞ்சியிருக்கும் ஒரே சுதந்திரமான முழுமையான காவியம். இருந்தும் அது அதிகமாக விவாதிக்கப்படாமைக்கு முக்கியமான காரணத்தை அதைச் சிலம்புடன் ஒப்பிட்டால் அறியலாம். சிலம்பு பாட்டிடையிட்ட உரையுடைச்செய்யுள் என்னும் வடிவத்தில் அமைந்தது. அதிலுள்ள அழகான பகுதிகள் எல்லாமே கானல்வரி, வேட்டுவர் வரி, ஆய்ச்சியர் குரவை போன்ற பாடல்கள்தான். மணிமேகலை முழுக்க முழுக்க ஆசிரியப்பாவில் அமைந்தது, கிட்டத்தட்ட உரைநடைபோன்றது அந்த யாப்பு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26472

பளிங்கறை – கடிதங்கள்

ஜெயமோகன் ஐயா ! பளிங்கறை பிம்பங்கள் படித்தேன். எவ்வளவு உணர்ச்சிகரமானது மணிமேகலையின் கதை. பிரேமின் வாசிப்பாக நீங்கள் குறிப்பிட்டது வாசிப்பைத் தூக்கி உயரே கொண்டு சென்றது. மதுரையை எரித்த கண்ணகி மலைமேல் அமர்ந்த சேதி அறிந்து மாதவியும் மணிமேகலையும் துறவறம் ஏற்பது உச்சகட்டம். இரண்டே வரிகளில் குறிப்பிட்டிருந்தீர்கள் அதில் உள்ள இடைவெளியோ இட்டு நிரப்ப முடியாமல் மனதில் சிந்தனைகளும் கற்பனைகளும் குவிந்தபடியே இருக்கின்றன. நன்றி. ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதுவதற்கான நேரம் இது என்று தோன்றவில்லையா உங்களுக்கு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26573

மணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா?

திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தமிழ் எழுத்தின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் அயராமல் ஈடுபட்டுவரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். 1985 இல் அமுதசுரபி இதழில் வெளிவந்த குறுநாவல் (தலைப்பு “மணிகர்ணிகா” என்று நினைக்கிறேன்) வாரணாசியின் காட்சிகளை என் இளமனதில் விதைத்து, அங்கு செல்லவேண்டும் என்ற நீங்காத ஆசையையும் என்னுள் ஏற்படுத்தியது. கடந்த வருடம், என் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு போகக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியது. கங்கையின் கரைகளைக் காணும் பொழுது “மணிகர்ணிகா” வே எனது ஞாபகத்தில் நின்றது. 1989 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20614