Tag Archive: மணிபூரகம்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 26

பகுதி மூன்று : முதல்நடம் – 9 துணை அமைச்சர் அவள் அமரவேண்டிய மூங்கில் இருக்கையை காட்ட ஃபால்குனை அதில் ஆடை சீரமைத்து அமர்ந்தாள். மேலாடையை கையால் சுழற்றிப் பற்றி மடிமீது அமைத்துக்கொண்டு, தன் குழலை சற்றே தலை சரித்து முன்னால் கொண்டு வந்து தோளில் போட்டுக்கொண்டு, கால்களை ஒடுக்கி உடல் ஒசித்து அமர்ந்து அவையை நோக்கி புன்னகைத்தாள். அந்த அவையில் அவள் மட்டுமே இருப்பதுபோல் விழிகள் அனைத்தும் அவளை நோக்கி நிலைத்திருந்தன. சித்ராங்கதன் மட்டும் அவளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79493/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25

பகுதி மூன்று : முதல்நடம் – 8 மணிபுரத்தின் அரசர் சித்ரபாணனின் அரண்மனைக்குச் செல்வதற்கான அழைப்பு முந்தைய நாள் மாலைதான் ஃபால்குனையிடம் அளிக்கப்பட்டது. குறும்படகில் விருந்தினருக்கான மூங்கில்மாளிகையை அடைந்து மென்சுருள் கொடிகளில் மிதித்து ஏறி உள்ளே சென்றாள். அத்தீவு காற்றில் மெல்ல கிழக்கு நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர்ந்து அவ்விந்தையை எண்ணி புன்னகைத்தாள். அங்கிருந்த ஏவலர் தலைவன் தலைவணங்கி “தாங்கள் இன்று இரவு இங்கு தங்கி இளைப்பாறவேண்டும் என்றும், நாளை காலை கதிர் எழுந்து, மந்தண மன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79447/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23

பகுதி மூன்று : முதல்நடம் – 6 இரண்டுநாட்கள் முற்றிலும் ஆழ்துயிலிலேயே இருந்த சித்ராங்கதன் மூன்றாம் நாள் மணிபுரநகரிக்கு திரும்பிச்சென்றான். கீழ்நாகர்கள் மீண்டும் படைகொண்டு வரக்கூடும் என்ற ஐயம் இருந்ததால் சித்ராங்கதனுடன் வந்த புரவிப்படை அவ்வூரிலேயே மேலும் பதினைந்துநாள் தங்கியது. அவர்களுடன் ஃபால்குனையும் இருக்கவேண்டும் என்று சித்ராங்கதன் ஆணையிட்டான். அதை தலைவணங்கி அவள் ஏற்றுக்கொண்டாள். அரிசிமது சித்ராங்கதன் மூச்சை சீர்படுத்தியிருந்தது. சிவமூலி அவனை அவனறியாத இடங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்று மீட்டுக்கொண்டு வந்திருந்தது. மயக்கில் இருந்து விழித்த சித்ராங்கதன் கையூன்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79310/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21

பகுதி மூன்று : முதல்நடம் – 4 மூள்மூங்கில் படல்கதவை நான்கு வீரர்கள் வடங்களைப் பற்றி இழுத்து தள்ளித் திறந்தனர். கோட்டை முகப்பில் கட்டப்பட்டிருந்த ஆழ்ந்த குழிக்கு மேல் மூங்கில் பாலத்தை இறக்கி வைத்தனர். முகப்பில் நின்ற மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த காவல் பரணில் இருந்த இரு வீரர்களும் தங்கள் குறுமுழவுகளை விரைந்த தாளத்தில் ஒலிக்கத் தொடங்கினர். அந்த ஒலியில் ஊரின் அனைத்துக் குடில்களும் அதிர்ந்ததுபோல தோன்றியது. எக்குடியிலும் மானுடர் இருப்பதற்கான சான்றுகளே இல்லை என்பதுபோல அசைவின்மை இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79217/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20

பகுதி மூன்று : முதல்நடம் – 3 ஃபால்குனையின் இரு கைகளையும் பற்றி இழுத்துச் சென்று சித்ராங்கதனின் முன் நிறுத்தினர் வீரர். தலைமுதல் கால்விரல்வரை அவளை கூர்ந்து நோக்கியபடி சித்ராங்கதன் மாளிகையின் முகப்பில் இருந்து இரும்புக்குறடு மரப்படிகளில் ஒலிக்க மெதுவாக இறங்கி வந்து இடைவாள் பிடிக்குமிழில் கையை வைத்தபடி அவள் அருகே நின்றான். அப்பார்வையை உணர்ந்து தலைகுனிந்து, விழிசரித்து, இடை நெளிய கால்கட்டை விரலால் மண்ணை நெருடினாள் ஃபால்குனை. மெல்லிய குரலில் “இவள் எங்கிருந்து வந்தாள்?” என்றான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79203/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19

பகுதி மூன்று : முதல்நடம் – 2 மணிபுரத்தின் எல்லைக்குள் நுழையும்போது அர்ஜுனன் ஃபால்குனை என்னும் பெண்ணாக இருந்தான். மலைகளினூடாக செய்யும் பயணத்தில் ஆண் என்றும் பெண் என்றும் உருவெடுக்கும் கலையை கற்று மிகத் தேர்ந்திருந்தான். உருமாறும் கலை என்பது வண்ணங்களோ வடிவங்களோ மாறுவதல்ல, அசைவுகள் மாறுவதே என அறிந்திருந்தான். விழிதொடும் முதல்அசைவு ஆண் என்றோ பெண் என்றோ நல்லவர் என்றோ தீயவர் என்றோ தம்மவர் என்றோ அயலவர் என்றோ சித்தத்திற்கு காட்டவேண்டும். அவ்வெண்ணத்தையே பார்ப்பவரின் சித்தம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79184/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18

பகுதி 3 : முதல்நடம் – 1 “கதைகளின் தெய்வமாகிய புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள் என்று முதுசூதர் பிருஹத்வர் எழுதிய காவியமாகிய ப்ரஸ்ன சம்ப்ரதீகம் சொல்கிறது” என்றாள் மாலினி. “ஒலியற்றவள். கதைகளுக்கு முன்பும் பின்பும் மட்டுமே அவள் இருப்பை உணர முடியும்.” சுபகை முடிந்த கதையின் மீட்டலில் இருந்து மெல்லிய உடலசைவு வழியாக மீண்டாள். “முதற்சொல் எழுகையிலேயே அவள் கதைகளுக்குள் புகுந்து கொள்கிறாள். கதைகளின் ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும் ஒவ்வொரு சொல்லுக்கு இடையிலும் அவள் இருக்கிறாள். நீள்மூச்சுகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79173/