Tag Archive: மக்கள் இயக்கம்

கூடங்குளம் அனுபவப்பதிவு

21-09-2011 காலை மீண்டும் கூடங்குளம் செல்வதாக முடிவெடுத்தேன். சென்றமுறை சென்றபோது கூடங்குளத்தில் இருந்து இடிந்தகரைக்குப் பேருந்து விடப்படுவதில்லை என அறிந்து வெயிலில் வெந்து நடந்துசெல்ல நேரிட்டது. ஆகையால் பார்வதிபுரத்தில் இருந்து ஒரு டாக்ஸி பிடித்துச் செல்ல முடிவெடுத்தேன்.டாக்ஸி இருப்பதனால் அ.கா.பெருமாளை அழைத்துப்பார்த்தேன். அவர் சென்னையில் இருப்பதாகச் சொன்னார். வேதசகாயகுமார் வருவதாகச் சொன்னார். இருவருமாகக் கிளம்பினோம்.   பத்துமணிக்கு கூடங்குளம் தாண்டிச்சென்றோம். கூடங்குளத்தில் வழக்கத்தைவிட அதிகமான போலீஸ்பாதுகாப்பு. படைபடையாக சீருடையணிந்த காவலர்கள் இறக்கப்பட்டிருந்தார்கள். எங்கள் வண்டியை அவர்கள் ஒன்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21154