Tag Archive: மகாபாரதம்

வெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை

நண்பர்களே, ஜெயமோகன் மகாபாரதத்தை மறுபடியும் எழுதப் போகிறேன் என்று அறிவித்தபோது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: தினமும் எழுதுவது என்பது தவம். மகாபாரதக் கதையை மறுபடியும் எழுவது பெருந்தவம். உங்களால்தான் இது முடியும். என்னைப் பொறுத்தவரையில் நமது இதிகாசங்களை அப்படியே பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவற்றை ஒப்பனையிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல மிகத் திறமையான ஒப்பனையாளராக இருந்தாலும்! ஜெயமோகனின் பதில் எனக்கு திருக்குறள் ஒன்றை நினைவிற்கு வரவழைத்தது. சொல்லுக சொல்லைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65750

இந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்

[தமிழ் ஹிந்து தீபாவளி மலருக்காக ஷங்கர்ராமசுப்ரமணியன் எடுத்த பேட்டி] படைப்பாளுமையும் செயலூக்கமும் இணைந்திருக்கும் அரிதான ஆளிமைகளில் ஒருவர் ஜெயமோகன். சிறுகதை, நாவல், விமர்சனம், தத்துவம், கேள்வி பதில், திரைக்கதை என அயராமல் எழுதிக் குவிக்கும் ஜெயமோகன் தான் எழுதும் ஒவ்வொரு விஷயத்திலும் தன் ஆளுமையை அழுத்தமாகப் பதிப்பவர். எழுத்துலகில் பலரும் நுழையத் தயங்கும் பிரதேசங்களுக்குள் இயல்பாகவும் அனாயாசமாகவும் நுழைந்து சஞ்சரிக்கும் இந்தக் கதைசொல்லி உலகின் மாபெரும் காவியமான மகாபாரதத்தைத் தன் பார்வையில் திருப்பி எழுதும் சாகசத்தில் இறங்கியுள்ளார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64722

மகாபாரதம் பற்றி ஜெயகாந்தன்

[embedyt]http://www.youtube.com/watch?v=hqwT6uU7KvQ[/embedyt] மகாபாரதம் பற்றி ஜெயகாந்தன் [EPSB] [/EPSB]

Permanent link to this article: https://www.jeyamohan.in/64699

பெரிதினும் பெரிது

மறைந்த மலையாள திரைக்கதை ஆசிரியர் லோகிததாஸ் எனக்கு அண்ணனின் இடத்தில் இருந்தவர். பெரும்புகழ்பெற்ற அவரது சினிமாக்கள் மீதெல்லாம் யாரேனும் அது தன் கதை என்று சொல்லி வழக்கு தொடுப்பதுண்டு. சமரசத்துக்கு வந்தால் பைசா கேட்கலாமே என்ற எண்ணம்தான். அப்படி ஒரு வழக்கு பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெற்றது. லோகிததாஸிடம் நீதிபதி கேட்டார் ‘இந்தக் கதை உங்களுடையதா?’ லோகிததாஸ் சொன்னார் ‘இல்லை’ நீதிமன்றத்தில் அதிர்ச்சி. ‘அப்படியென்றால் யாருடைய கதை?’ என்றார் நீதிபதி லோகிததாஸ் சொன்னார் ‘வியாசனின் கதை. நான் மகாபாரதத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62268

சமணமும் மகாபாரதமும்

சுகதேவர் உரை

[சுகப்பிரம்ம ரிஷி முனிவரிடையே தோற்றமளித்தல்] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் வெண்முரசு மற்றும் அது குறித்த விவாதங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இது மகாபாரதத்தில் சமணர்களை பற்றிய ஒரு கேள்வி. மகாபாரதத்தின் ஆஸ்வமேதிக பர்வத்திலும் இன்னும் சில பர்வங்களிலும் ‘யதி’க்களை பற்றிய குறிப்புகள் வருகின்றன. கிஸாரி மோகன் கங்குலி தன் விளக்கத்தில் யதிக்கள் சமணர்களாக இருக்க கூடும் என்கிறார். ஆஸ்வமேதிக பர்வத்தின் இந்த அத்தியாயத்திலும் ஒரு அத்வார்யுவுடன் யதி ஒருவரின் உரையாடலாக வரும் இந்த பகுதியும் யதிக்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62912

இலக்கியமும் சமூகமும்

ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது? தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள் உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா? நம் பாட்டி சாப்பிட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60840

வெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்

மகாபாரதத்தையும் வெண்முரசையும் ஒப்பிட்டு கேட்கப்படும் பொதுவான வினாக்களுக்கான விடைகள் இவை. 1. வியாச மகாபாரதத்தில் இருந்து வெண்முரசு வேறுபடும் இடங்கள் எவை? ஏன் அந்த வேறுபாடு? வியாசமகாபாரதம் என்ற மாபெரும் படைப்பை உண்மையில் முழுக்க வாசித்தவர்களுக்கு தெரியும் அது ஒரு பிரம்மாண்டமான தொகைநூல். பல அடுக்குகள் கொண்டது அது. வியாசரால் இயற்றப்பட்ட ஜய என்னும் காவியத்துக்குமேல் அவரது மாணவர்களால் எழுதப்பட்ட நான்கு நூல்கள் இணைக்கப்பட்டன. அதன்பின் தொடர்ந்து துணைக்கதைகள் உபரிக்கதைகள் மூலம் குறைந்தது ஆயிரம் வருடம் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58268

செவ்வியலும் வெண்முரசும்

அன்புள்ள ஜெமோ வெண்முரசுவை தவறாமல் வாசித்து வருகிறேன். மிகச்செறிவாக உள்ளது என்று தோன்றுகிறது. தேவைக்குமேல் செறிவாக உள்ளதா என்று தோன்றுவதனால்தான் இதை எழுதுகிறேன்.பலமுறை வாசித்தபின்புதான் ஓரளவேனும் பொருள்கொள்ளமுடிகிறது. உடனே உனக்கு இலக்கியம் தெரியாத காரணத்தால்தான் அப்படித் தோன்றுகிறது என்று சொல்லிவிடமாட்டீர்கள் என நினைக்கிறேன். நான் பதிமூன்று வருடங்களாக நவீன இலக்கியங்களை வாசித்துவருபவன். ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசிக்கிறேன். மிகச்சில இலக்கியங்கள் வாசிப்புக்கு அதிகமான தடையை அளிக்கக்கூடியவை. உதாரணமாக ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸை நான் வாசித்து முடிக்க ஆறுமாதம் ஆகியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57850

பாம்பும் புடவியும்

பேரன்புக்குரிய ஜெயமோஹன் அவர்களுக்கு, தங்களின் பேருழைப்பில் வளர்ந்துவரும் மகாபாரதம் என் நாளினை முழுமை செய்கிறது. அதற்கு முதற்கண் நன்றிகள். இதைப் படித்தேன்: http://www.jeyamohan.in/?p=47150 உங்களின் இந்தப்பகுதி வந்த நாளிலேயே என் முகநூல்பக்கத்தில் எழுதிய பதிவிது: https://www.facebook.com/java.kumar.10/posts/271254466361572 லெம்னிஸ்கத் என்ற இந்த முடிவிலியின் சின்னத்தை உலகெங்கும் பாகன்மார் தன் வாலையே விழுங்கியிருந்த பாம்பின் வடிவிலேயே குறித்தனர். முடிவிலியின் சின்னம் – உலகெங்கிலும்.. *** மேலும் தங்களின் எழுத்தால் தூண்டப்பட்டு ஜாவானிய மஹாபாரதத்திலிருந்து எடுத்தெழுதிய சிகண்டியின் கதையிது: http://www.tamilhindu.com/2014/01/srikandijava/ எப்போதாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47922

ஏன் தமிழ்ச்சொற்கள்?

அன்புள்ள ஜெமோ, வெண்முரசை தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் வரும் தூயதமிழ்ச் சொற்கள் பல நான் இதுவரை கேள்விப்படாதவை. அவை அகராதிகளிலும் இல்லை. நீங்கள் வேண்டுமென்றே இச்சொற்களைப்போட்டு எழுதுகிறீர்களா? இதனால் வாசிப்பு சரளமாக நடக்கவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். உதாரணமாக எரிகுளம், பிழையீடு, நிலைத்திகிரிக்களம்….இவற்றை எப்படித்தெரிந்துகொள்வது? நரசிம்மன் அன்புள்ள நரசிம்மன், நான் விஷ்ணுபுரம் எழுதியபோதும் இதே குற்றச்சாட்டு இருந்தது. விஷ்ணுபுரம் தத்துவம், சிற்பம் சார்ந்த கலைச்சொற்களை சம்ஸ்கிருதத்தில் முதலில் சொன்னபின் அவற்றின் தமிழ் வடிவங்களையே பின்னர் கையாண்டது. அவற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47576

Older posts «

» Newer posts