Tag Archive: மகாகவி

பாரதி மகாகவியே

என்னிடம் பல நண்பர்கள் கடிதம் மூலம் ஒரு வினாவைக் கேட்டார்கள். பாரதி மகாகவியா என வாதித்த தரப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என. ஜடாயு, மரபின்மைந்தன், எம்.டி.முத்துக்குமாரசாமி மூவருமே தங்கள் தரப்பைத் தீவிரமாக எடுத்துச்சொன்னார்கள் என்றும், இந்த விவாதம் தீவிரமாக முன்னகர அவர்கள் காரணம் என்றும் சொன்னேன். இதை நான் விவாதமாகவே பார்க்கிறேன், முடிவுகட்டலாக அல்ல. ஆகவே விவாதத்தின் வலுவான எல்லாத் தரப்புக்குமே இணையான மதிப்புதான். சரி, அந்த எதிர்விவாதங்களில் உங்களுக்குத் திருப்தியா என்று கேட்டார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22092

மகாகவி விவாதம்

இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம் நேரிலும் நிகழ்த்திய விவாதங்களே என்னளவில் முக்கியமானவை. இந்த மொத்த விவாதத்திலும் நான் பேசவேண்டியதைப் பேசிவிட்டேன், கேட்க வேண்டிய எதிர்வினைகளைக் கேட்டும்விட்டேன் என்பதனால் இதை இங்கே முடித்துக்கொள்ளவிருக்கிறேன். ஆகவே எல்லா வாசகர்களுக்குமாக என் தரப்பைத் தொகுத்துச்சொல்ல விரும்புகிறேன். உலக இலக்கியம், தேசிய இலக்கியம், மகாகவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22089

பாரதி-கடிதங்கள்

ஜெயமோகன், பாரதியார் மகாகவி இல்லை என்று நீங்கள் எழுதிவரும் அபத்தமான குறிப்புகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். முதல் விஷயம் பாரதி பற்றிபேச நீங்கள் யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நீ இதுவரை எவ்வளவு கவிதை எழுதியிருக்கிறாய்? ஐம்பது கவிதை எழுதியிருப்பாயா? அதிலே ஒரு பதுக்கவிதை தேறுமா? சினிமாவுக்கு வசனம் எழுதுபவன்தானே நீ? உனக்கு என்ன கொழுப்பு இருந்தால் பாரதி கவிஞனே இல்லை என்று சொல்வாய்? உனக்கு பிரபலமடையவேண்டுமென்றால் அண்ணாசாலையிலே துணியில்லாமல் அரைமணிநேரம் நில்லு. அதைவிட்டுவிட்டு பாரதியை வம்புக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21820