Tag Archive: மகதம்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43

[ 16 ] புலரி எழும் முதற்பொழுதிலேயே மகதமக்கள் ராஜகிருஹத்தின் பெரிய செண்டுவெளி நோக்கி வரத்தொடங்கினர். அன்று கருக்கிருட்டிலேயே பன்னிருநாட்களாக சரடறாது பெய்த மழை ஓய்ந்து காற்று வீசத்தொடங்கியது. கிளை சுழன்ற மரங்கள் இறுதித் துளிகளையும் உதிர்த்து தழைகொப்பளிக்க சீறின. விடியலில் இறுதிக் காற்றொன்று வந்து நகரை சுழற்றி எஞ்சிய நீர்த்துளிகளையும் அள்ளிச் சென்றது. தேன் நிறத்தில் விடிந்தது. நெடுநாட்களுக்குப்பிறகு பறவை ஒலிகளால் காலை விழவு கொண்டது. மழை நின்றபோது தாங்கள் இருந்த கனவிலிருந்து அறுபட்டு ஒவ்வொருவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87593

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40

[ 10 ] ஜராசந்தன் மகதத்தின் செங்கோலை  ஏந்தி அருகமைந்த நாடுகள்மேல் மேல்கோன்மை கொண்டபின்னர் ஒருநாள் தன் படைக்கலப்பயிற்சிநிலையில் அரசுத்துணைவர்களான விதர்பத்தின் ருக்மியும், சேதியின் சிசுபாலனும், பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனும்,  புண்டரத்தின் வாசுதேவனும் சூழ கதை சுழற்றிக்கொண்டிருக்கையில் பெருந்தோளராகிய பகதத்தன் தன் கதையைச் சுழற்றி நெடுந்தொலைவுக்கு வீசினார். பின் ஒவ்வொருவரும் கதையை சுழற்றிவீசி விளையாடினர். “உங்கள் முறை மகதரே” என்றான் சிசுபாலன். ஜராசந்தன் தன் கதையைத் தூக்கி வீச அது பெருமதிலைக் கடந்து அப்பால் சென்று குறுங்காட்டில் விழுந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87511

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 38

[ 6 ] ஜராசந்தன் மழைவிழவுக்கென முழுதணிக்கோலத்தில் கிளம்பும்போதே நகர் ஒற்றன் ஏழு முரசுகளும் கிழிக்கப்பட்ட செய்தியுடன் அரண்மனையை வந்தடைந்திருந்தான். அமைச்சர் காமிகர் அதை அவனிடம் அறிவிப்பதற்காக அணுகி சற்று அப்பால் நின்றபடி தலைவணங்கினார். அவர் முகக்குறியிலிருந்தே தீய செய்தி என்று அறிந்து கொண்ட ஜராசந்தன் “ம்” என்றான். அவர் மேலும் தயங்கி அவன் உடலை நோக்கினார். பின்பு துணிந்து “அரசே, நம் குலத்தின் பெருமைக்குறிகளான ஏழு ஏறுமுரசுகளும் இன்று அயலவர் இருவரால் கிழிக்கப்பட்டுள்ளன” என்றார். ஜராசந்தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87477

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 37

[ 4 ] இந்திரப்பிரஸ்தத்திலிருந்து இளைய யாதவரும் பீமனும் கிளம்பியபோது நகரம் மழை சரித்த பல்லாயிரம் பட்டுத்திரைகளால் மூடப்பட்டிருந்தது. நகரின் அரசப்பெருஞ்சாலையில் அவர்களுடைய தேர் சென்றதை அதற்கு முன்னும் பின்னும் சென்ற தேர்கள்கூட அறியவில்லை.  யமுனை முழுமையாக மறைந்துவிட்டிருந்தது. அதற்குள் நின்றிருந்த கலங்களின் விளக்கொளிகள் மட்டும் நீர்த்திரைமீது கலங்கி அசைந்து கொண்டிருந்தன. மழையில் நனைந்தபடியே தேரிலிருந்து இறங்கி சிறிய படகில் ஏறிக்கொண்டதும் இளைய யாதவர் அது கிளம்பலாம் என்று கையசைவால் ஆணையிட்டார். அர்ஜுனன் தலைகுனிந்தபடி அவரைத் தொடர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87457

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 21

[ 4 ] அஸ்தினபுர நகரமே நோயில் கருமைகொண்டிருந்தது. கண்களில் பீளை திரண்டிருந்த கன்றுகள் தலைதாழ்த்தி உலர்ந்த மூக்குடன் நின்றன. அன்னைப்பசுக்களின் நீலநாக்கு நீரின்றி வெளியே தொங்கியது. புரவிகள் அடிக்கொருமுறை நின்று உடல்சிலிர்த்து பெருமூச்சுவிட்டன. நிலையழிந்த யானைகள் ஓயாது துதிக்கை சுழற்றின. குழந்தைகள் பெருத்த வயிறும் உலர்ந்த கன்னங்களும் வெளுத்த விழிகளுமாக இல்லங்களின் திண்ணைகளில் அமர்ந்து நீர் சொட்டும் கூரைக்கு அப்பால் தெரிந்த தெருவில் வண்ணக்கரைசல்கள் என அசைந்த மரங்களையும் மானுடரையும் நோக்கிக்கொண்டிருந்தனர். நீலப்பாசியில் ஊறிவழிந்த மழைநீரையோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86986

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16

[ 15 ] மேற்கு எல்லையிலிருந்த காவல்நிலையிலிருந்து தேர்களை பெற்றுக்கொண்டு குறுங்காடுவழியாகத் தப்பி கங்கைக்கு மறுபக்கமிருந்த கிருஷ்ணபாகம் என்னும் சிறுநகரை சென்றடைந்தனர் பிருஹத்ரதனும் அரசியரும் மைந்தரும். செல்லும் வழியெல்லாம் கிருதி வசைபாடிக்கொண்டே வந்தான். “நான் அப்போதே சொன்னேன், தொடக்கத்திலேயே அக்கீழ்மகனை எளிதில் வென்றிருக்கலாம். எதையும் ஒரு கொள்கையென்றாக்காமல் உங்களால் செயல்பட முடியாது… வாளால் வெட்டப்படவேண்டியவனை சொல்லால் வருடிக்கொண்டிருந்தீர்கள்.” பத்மர் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. தொலைவிலிருந்து நோக்கியபோது ராஜகிருஹம் மழைபெய்யும் குளம்போல கொந்தளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. பல இடங்களில் புகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86738

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15

[ 13 ] அவ்விரவில் ஜராசந்தன் எங்கு தங்குகிறான் என்பதை நோக்கிவர பத்மர் தன் ஒற்றர்களை அனுப்பியிருந்தார். அவன் ஐங்குலத்தலைவர்களில் வல்லமைமிக்கவர் எவரோ அவருடன்தான் தங்குவான் என்று கணித்தார். மகதம் மருதநிலத்தவர்களின் நாடு. வேளிர்களின் தலைவரான உரகர் அரசருக்கு நிகரானவராகவே அவர்களால் மதிக்கப்பட்டார். அவரது வீட்டுக்கு அவன் சென்று தங்கினால் அவர் அவனை ஆதரிக்காமலிருக்க முடியாது. அதை பயன்படுத்தி பிற குலத்தலைவர்கள் ஓரிருவரை தன்பால் இழுக்கமுடியும் என அவர் எண்ணினார். ஆனால் ஒற்றர்கள் வந்து ஜராசந்தன் நகர்மன்றிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86728

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14

[ 11 ]  ஜரையன்னை தன் மைந்தனுக்கு அணிகளை அளித்தபின்னர் அன்றே உயிர்துறந்தாள். காட்டின் எல்லையாகிய சிற்றோடையின் கரையில் அவள் அவன் கையால் இறுதிநீர் பெற்று அடங்கினாள். அவள் உடலை கையேந்தியபடி ஜராசந்தன் தன்னந்தனியாக நடந்தான். சற்று தள்ளி அவனை பின்தொடர்ந்த ஜரர்கள் அவன் வரமாதாவின் குகைக்குள் சென்று மறைந்தபோது வெளியே நின்றுவிட்டனர். பன்னிருநாட்கள் அவர்கள் அங்கே காத்திருந்தனர். எருதன் திரும்பிவரப்போவதில்லை என்னும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டு திரும்ப முடிவுசெய்த அன்று அவன் குகைக்குள் இருந்து திரும்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86667

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13

[ 9 ] ஜரையன்னையின் இளையமைந்தன் அவன் குடியினரால் பாதியுடல்கொண்டவன் என்றழைக்கப்பட்டான்.  சுட்டுவிரலில் பாதியை கட்டைவிரலால் தொட்டு அவனை அவர்கள் குறிப்பிட்டனர். குழவியென அவன் குடிக்கு வந்தபோது தன் உடன்பிறந்தானின் உடலை ஒட்டி ஒற்றைக்கையால் கவ்வி அவன் புண்ணில் வாய்பொருத்தி உறிஞ்சிக்கொண்டிருந்தான். வாயிலும் மார்பிலும் செங்குருதி வழிந்தது. அவன் புலிக்குருளை போன்றவன் என்று முதுஜரை ஒருத்தி சொன்னாள். அவனை அவர்கள் அஞ்சினர். ஜரர்களில் எவருமே அவனை தங்கள் கைகளால் தொடவில்லை. இரவெல்லாம் தன் உடன்பிறந்தவனை கவ்வி உறிஞ்சிக்கொண்டிருந்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86639

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 9

பகுதி இரண்டு: வைகாசி [ 1 ] மகதத்துக்கு கிழக்கே, கங்கையின் கரையில், ஜராவனம் என்னும் காட்டில் வாழ்ந்த தொல்குடியினர் ஜரர்கள் என்றழைக்கப்பட்டனர். எப்போதும் மழைபொழியும் அக்காடு இலையும் கிளையும் செறிந்து செம்போத்துகளும் ஊடுருவிப் பறக்கமுடியாததாக இருந்தது. அதனூடாக குனிந்தும் தவழ்ந்தும் அலைந்தமையால் ஜரர்கள் குறிய உடல்கொண்டனர். சிறுவளைகளிலும் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் உடல்சுருட்டி ஒடுங்கி வாழ்ந்தனர். மழையீரம் ஒழியாத அவர்களின் உடலின் தோல் இளமையிலேயே வரிசெறிந்து வற்றிச் சுருங்கியது. முடிநரைத்து விழிகள் மங்கின. இளமையிலாதவர் எனும்பொருளில் அவர்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86431

Older posts «