Tag Archive: ப.சிங்காரம்

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69818/

நாஞ்சில்நாடனின் ஆசிரியன்குரல்

இனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவம் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரியனின் குரல் ஓங்கி ஒலிப்பது, ஒரு பலவீனம் இல்லையா? நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் அளவுகோலாகக் கொள்கிறோம்? ஜெயகாந்தன் கதைகளில் அறத்தின் குரலாக ஆசிரியர் குரல் ஒலித்தாலும், வடிவம் மற்றும் கலை அமைதி இவற்றை அக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48709/

புயலிலே ஒரு தோணி – நவீன் விமர்சனம்

ஜெ, வணக்கம் நலம்தானே? புயலிலே ஒரு தோணி குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். உங்கள் பார்வைக்கு: அன்புடன், நவீன் அன்புள்ள நவீன், அழகான கட்டுரை. நுட்பமாக வாசித்திருக்கிறீர்கள். நீங்கள் இதுவரை எழுதிய இலக்கியக்கட்டுரைகளில் இதுவே சிறந்தது. குறிப்பாக முடிவு வரி. உண்மையில் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரிசனம் உடைய எவர் வரலாற்றை முன்வைத்து எழுதினாலும் இந்த மனநிலையே எஞ்சுகிறது. சோர்வூட்டுவதாக இளமையில் தோன்றும் இந்தத் தரிசனம் வாழ்க்கை முதிரும்தோறும், பாதி தாண்டும்போது குறிப்பாக, பிரகாசமானதாகவும் ஒளியூட்டுவதாகவும் ஆகிறது. குச்சி ஐஸ்கிரீமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26387/

பாரதி உரிமை

அன்புள்ள ஜெமோவுக்கு சமீபத்தில் ஒரு இணைய இதழில் பாரதியைப் பற்றிய ஒரு கட்டுரை படித்தேன். அதற்கான சுட்டி பாரதியும் ஏவிஎம்மும் — சில உண்மைகள் பகுதி 1 இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? அதே இதழில் ஏற்கனவே நீங்கள் பாராட்டியுள்ள பாலாசி என்பவரின் கதை ஒன்று வந்துள்ளது. அதற்கான சுட்டி வதம் உங்கள்  கருத்துகளை எதிர்பார்த்து சாரா அன்புள்ள சாரா இந்தக் கட்டுரையை திரு ஹரிகிருஷ்ணன் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் முன்னர் ’ஓடிப்போனானா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21173/

நகுலனும் சில்லறைப்பூசல்களும்

நகுலனைப்பற்றிய என் குறிப்புக்கு வந்த சில எதிர்வினைகள் குழுமத்தில் உள்ளன. அவை நான் நகுலனை அவரது ஆளுமைக்குறைபாடுகள் அல்லது நோயின் அடிப்படையில் மதிப்பிடுவதாகச் சொல்கின்றன. அவற்றுக்கு நான் அளித்த விளக்கம். ஒரு கட்டுரையை அல்லது குறிப்பை வாசித்ததுமே ஒரு வகைப் பதற்றத்துக்கு உள்ளாகி அதைப்பற்றிப் பேச ஆரம்பிப்பதன் சிக்கல்கள் என்றுதான் இந்த விவாதத்தைப் பார்க்கிறேன். என் கருத்துக்கள் மிக மிகத் தெளிவாகவே அக்குறிப்பில் உள்ளன. இங்கே பேசுபவர்களுக்குப் பெரும்பாலும் நகுலன் எழுத்துக்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21089/

ப.சிங்காரம்,ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நலம்தானே?. போன வாரம் வாங்கிய சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி”  புத்தகத்தை நேற்று இரவுதான் படித்து முடித்தேன். நீங்கள் கூறியிருப்பது போல, கவிதை தன்மை கொண்ட வரிகள் நிறைய உள்ளன. ஒரு சில இடங்களில் நான் இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப படித்தேன்.    இது உண்மை நாவலா என்ன, சில இடங்களில் நேதாஜி சர்வ சாதாரணமாக வந்து போகிறார். ஒரு தலைவர் என்பதற்காக எந்த ஒரு சிறப்பான வரியையும் வைக்கவில்லை. எத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6247/