Tag Archive: பௌத்தம்

சமணத்தில் பெண்கள்

சமணம்,சாதிகள்-கடிதம் அன்புள்ள ஐயா சமீபத்தில் ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் உள்ள “சந்திரப்பிரபா தீர்த்தங்கர்” ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு தூணிலிருந்த சிற்பத்தைப் பற்றி விளக்கம் கேட்ட போது,அது “புல்லப்பை” என்ற பெண் துறவியின் சிற்பம் என்றார் கோயிலைப் பராமரிக்கும் முதியவர். மேலும் அதைப் பற்றி தேடிய போது, ஈரோடு புலவர் ராசுவின் ஒலிக்குறிப்பு ஒன்றைக் கேட்கமுடிந்தது. “பெண்களுக்கு சமண மதத்தில் வீடுபேறு என்பதில்லை. அதனால் பெண்கள் உண்ணாநோன்புற்று மறுபிறப்பில் ஆணாகப் பிறந்து துறவு பூண்டு வீடுபேறடைய வேண்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118686

மங்காப் புகழ் புத்தர்

வரைகலை நாவல்கள் [graphic novel] மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். காட்சிக் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நான் வாசிக்கையில் ஒவ்வொரு வாசிப்புக்கும் புனைவுகள் அளிக்கும் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.   வரைகலை நாவல்கள் அவற்றை நம் சார்பில் தாங்களே முற்றாக வகுத்து முடிவெடுத்துவிடுகின்றன. நாம் செய்வதற்கொன்றுமில்லை. ஆனால் பிறிதொரு தருணத்தில் எனக்கு வரைகலைநாவல்கள் தேவைப்பட்டன. மூளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117100

இந்துமதத்தைக் காப்பது…

ஒருதெய்வ வழிபாடு அன்பு ஜெ, சில நாட்களுக்கு முன்பு எனது அரேபிய நண்பர்களுடன் பேசும்போது பேச்சுவாக்கில் ஜப்பான், ஜெர்மன் போன்ற  தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினை மக்கள் தொகைதான். ஒன்று நிறைய இருப்பதினால் மற்றொன்று இல்லாததினால் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  அப்போது ஒரு அரேபிய நண்பன் உடன் சொன்னான் “இப்போது இஸ்லாமியர்” ஆப்ரிக்கா மற்றும் சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயர்கிறார்கள். கூடிய விரைவில் அங்கும் மக்கள் தொகை பெருகி இஸ்லாமியர்களால் நிரம்பும் என்றான். இத்தகைய “இஸ்லாமிய உலக” கனவு அன்று மட்டும் அல்ல மேலும் பல சந்தர்ப்பங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117063

பௌத்தம்,நேரு -கடிதங்கள்

அன்பு ஜெமோ, நலம்தானே? அருண்மொழி அவர்கள், அஜிதன், சைதன்யா அனைவரும் நலமா? சில நாட்களுக்கு முன்பு டாக்டர். வின்பீல்ட் அவர்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம் ( பௌத்தத்தின் படிமங்கள், உருவங்கள் பற்றி உயராய்வு செய்து புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பேராசிரியர். நீங்கள் வந்திருந்தபோது பேரார்வத்துடன் வந்து சந்தித்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தவர்). அவர் வீட்டு வரவேற்பறையில் தாய்லாந்து ஓவியங்களை மாட்டியிருந்தார். நான் திருவாரூரில் கோயில்களில் பார்த்த சிற்பங்களைப்போன்ற ஓவியம்! அப்போது அவர் 20 வருடங்களுக்கும் முன்னர் பரம்பனான், போராப்புதூர் ஆலயங்களுக்கு நேரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81416

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9

இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும் யுனெஸ்கோவாலும் பேணப்படுகின்றன [போராப்புதூர் தூபி 1882ல் பழுபார்க்கப்படுகிறது] இந்து ஆலயங்கள் பெரும்பாலும் அறநிலையத்துறை, மாநிலத் தொல்பொருட்துறை கையில் உள்ளன. ஆகவே இஷ்டத்துக்கு சூறையாடப்படுகின்றன. ஆலயங்களில் செய்யக்கூடாத சில உண்டு. திரும்பத்திரும்ப அதை எழுதிவருகிறேன் 1. அவற்றின் கட்டுமான அமைப்புக்கு அன்னியமான புறக்கட்டுமானங்களைச் செய்யக்கூடாது 2. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80821

தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்

அன்புள்ள ஜெயமோகன், விரிவான பதிலுக்கு மிக்க நன்றி. ‘பல கோயில்கள் இன்று உள்ளூர் தெய்வங்களின் ஆலயங்களாக உள்ளன. அப்படி ஏராளமான சமண ஆலயங்கள் தமிழகத்தில் உருமாறிய வடிவில் உள்ளன’. நீங்கள் பிரசுரித்த புகைப்படங்களைப் பார்த்தபின் எனக்குத் தோன்றியது எப்படி சற்றும் மாறாமல் இந்துக் கோயில்கள் போலவே அவை உள்ளன என்பதே! என்னைப் போல இந்தியாவை நேசிக்கும் ஆனால் இந்தியாவை முழுக்க அறியாத பலருக்கு உங்கள் பல கட்டுரைகள் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றன. நம் சிற்பக்கலையில் சமணர்களின் பங்களிப்பின் அளவிற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25131

மதங்களின் தொகுப்புத்தன்மை

  என் பெயர் கிரிதரன். சென்னையில் சாப்ட்வேர் எஞ்சினீயர் . நான் தங்களுடைய இந்திய ஞானம் படித்தேன். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு eye opener. நான் தங்களுடைய இணைய தளத்தில் வடகிழக்கு நோக்கி 9,ஒரு மாவீரரின் நினைவில் வாசித்தேன்.தங்களுடைய இந்தக் கட்டுரையில் பத்மசம்பவர் எப்படி திபெத்திய பௌத்தத்தை நிறுவினார் என்று எழுதியிருந்தீர்கள். ’இந்திய ஞானம்’நூலில் இந்து மதம் எப்படிக் காலத்திற்கேற்ப உருமாறித் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது என்பதை விளக்கி இருந்தீர்கள். இந்து மதம் ஆரம்பம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16866

பிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள்

மதிப்புக்குரிய ஜெ: “பிரமிள்” ஒரு கவிஞர், என்ற பிரமை “வரலாற்றுச் சலனங்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பின் வாயிலாக மாறியது. குறிப்பாக “பௌத்தமும், இந்து இயக்கமும்” என்ற தலைப்பில் இந்துத்துவ ஜாதீய நிர்ணயத்தை புத்தர் அழிவடையச் செய்ததை சுட்டுகிறார். அதன் பிறகு, சீரிய தொகுத்த அமைப்பு வாயிலாக, இந்துத்துவ பிராமணீய எழுச்சிகள் புத்தத்தை இழிவுபடுத்தி விரட்டியடித்தன. ஆயினும், ஜைனம் தங்கிய காரணத்தையும், பௌத்தம் இங்கு மறைந்து பிற மேலை நாடுகளில் தங்கிய காரணத்தையும் அளிக்கிறார். தங்களது சமீபமான ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/49035

பௌத்தமே உண்மை -ஒருகடிதம்

அன்புக்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம். பௌத்தத்தில் நான் கொண்டுள்ள பேரார்வத்தையும் ஈடுபாட்டையும் கண்டு எனது இனிய நண்பர் திரு. முரளி கிருஷ்ணன் அவர்கள் உங்களுடைய ‘‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’’ மற்றும் ‘‘இந்திய ஞானம்-தேடல்கள்,புரிதல்கள் ‘’ஆகிய இரண்டு நூல்களையும், ‘‘நீங்கள் இவற்றைப்படித்துப் பார்க்க வேண்டும்’’ என்று எனக்குக் கொடுத்தார். இவற்றைப் படித்து நான் பெரிதும் வியப்பில் ஆழ்ந்தேன். ஆஹா! தத்துவத்திலும் இலக்கியத்திலும் அறிவியல்துறைகள் பலவற்றிலும் எவ்வளவு அகலமாகவும் விரிவாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது உங்களது அறிவு, எவ்வளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42960

பௌத்தம் கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார் உங்களின் பௌத்தமும் அகிம்சையும் என்கிற அற்புதமான கட்டுரையைப் படித்து உள்வாங்கினேன். மிகப்பெரிய விவரத்தை இவ்வளவு எளிமையான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. சமணத்தைப் பற்றியும் சொல்லுங்களேன். சமணம் இந்து மதத்தோடு சேர்த்தியில்லையா? சமணத்தில் வர்க்கப்பிரிவுகள் இல்லையா? தமிழில் சமணர்களின் பங்களிப்பு என்னென்ன? சமண மதத்தைப் பற்றி நினைக்கையில், பெரியபுராணத்தில் நாயன்மார்கள் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகளே நிழலாடுகின்றன. யார் சமணர்கள்? நன்றி சார் ஸ்ரீவிஜி மலேசியா. அன்புள்ள விஜயலட்சுமி நன்றி சமணத்தைப்பற்றி முன்னரே கொஞ்சம் எழுதியிருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27254

Older posts «