Tag Archive: போரும் அமைதியும்

செவ்விலக்கியங்களும் செந்திலும்

தமிழில் சென்ற சில ஆண்டுகளில் சீரிய இலக்கிய வாசிப்பாளனுக்கு இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், நோக்கம் ஆகியவற்றை தெளிவாக்கும் சில பேரிலக்கியங்கள் மொழியாக்கங்களில் கிடைத்தன. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் டி எஸ் சொக்கலிங்கத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு முன்னரே வெளிவந்திருந்தாலும் சமீபமாகத்தான் மறு அச்சு வெளிவந்தது. தஸ்தோயின் அன்னா கரீனினா க.சந்தானத்தின் சுருக்கமான மொழியாக்கமே முன்னர் இருந்தது. இப்போது முழுமையாகக்கிடைக்கிறது. அன்னா கரீனினா [நா தர்மராஜன்],  தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் [எம்.ஏ சுசீலா] ,அசடன் [எம். ஏ சுசீலா] ஆகியவை வெளிவந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83439/

வாழ்க்கையின் விசுவரூபம்

ஒருமுறை கல்பற்றா நாராயணனும் நானும் விவாதித்துக்கொண்டே பேருந்தில் சென்றுகொண்டிருந்தோம். தகழி சிவசங்கரப்பிள்ளையின் ‘கயறு’ என்ற பெருநாவல் பற்றிப் பேச்சுவந்தது. ஞானபீட விருது பெற்ற இந்நாவல் தமிழில் சி.ஏ.பாலன் மொழியாக்கத்தில் சாகித்ய அக்காதமி வெளியீடாக வந்திருக்கிறது. நான் சொன்னேன்,  ‘தகழி சிவசங்கரப்பிள்ளையின் நாவல்களில் என்ன பிரச்சினை என்றால் அத்தனை பக்கங்களைத் தூக்கிக் கொண்டுசெல்லக்கூடிய தனக்கான வரலாற்றுத்தரிசனம் இல்லை. அவருக்கு மக்களைக் கூர்ந்து பார்க்கத் தெரிகிறது. அவர்களை மனமார நேசிக்கிறார்.வாழ்க்கையின் ஒட்டுமொத்த அசைவைக்கூட அவரால் பார்த்துவிடமுடிகிறது. அதனால்தான் நாம் அவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17958/

போரும் அமைதியும் வாசிப்பும்

அன்புள்ள ஜெமோவிற்கு , செந்தூர் கொச்சினிலிருந்து.. தற்சமயம் ‘போரும் அமைதியும்‘ ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எங்கும் ரஷ்யாவும் அதன் மனிதர்களுமே நிறைந்திருக்கிறார்கள். தற்செயலாக நூலகத்தில் ராதுகா பதிப்பகத்தின் ‘ கொசச்குகள் மற்றும செவேச்தபோல் கதைகள் கிடைக்க , ஒருபக்கம் கிழவன் டோல்ஸ்டோயிடம் பெருங்கதை கேட்டுக்கொண்டே இளைஞன் லேவுடன் இலட்சியக்கனவுகளில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். பியர் ஆக சில சமயங்களிலும் ஆந்த்ரேவாக சில சமயங்களிலும் உணர்ந்து கொள்கிறேன். மனம் நான் பியர் என்று ஒப்ப மறுக்கிறது. ஆந்த்ரே முழுமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74788/

வரலாறும் இலக்கியமும்

அன்புள்ள ஜெ சார், புனைவெழுத்தாளனை வரலாற்றாசிரியனாக காணக் கூடாது என்கிற உங்களது வரி சற்று ஆச்சரியமளிக்கிறது. காலம், வெளி ஆகியவற்றின் தடைகளை மீறி மற்ற வாழ்க்கைகள் எப்படி இருந்திருக்கும், அம்மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்றறிய எம் போன்ற வாசகர்களுக்கு இருப்பது சீரிய இலக்கியம் மட்டும் தானே. உதாரணமாக நான் தமிழ் சினிமா பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன், உண்மையில் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று என்றுமே தமிழ் திரைப்படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாதென்று. அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71324/

தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்

டியர் ஜெ.மோ , தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி இவர்களின் நூல்களின் நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு எந்த பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இவர்களின் நூல்களை வாசிக்கத் துவங்குபவர்கள் எங்கிருந்து தொடங்க வேண்டும். எந்தெந்த நூல்களை வாசிக்க வேண்டும். கொஞ்சம் வழிகாட்ட முடியுமா?ஏற்கனவே நீங்கள் இது பற்றி குறிப்பிட்டிருந்தால், அந்த லிங்கை கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும். இப்படிக்கு, கார்த்திக். அன்புள்ள கார்த்திக் தாஸ்தயேவ்ஸ்கி குற்றமும் தண்டனையும் – எம் ஏ சுசீலா மொழியாக்கம்- பாரதி புத்தக நிலையம்,மதுரை அசடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70318/

சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு

பிளஸ்டூ விடுமுறையில் சைதன்யா வாசித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறாள். ஆங்கில இலக்கியத்தில்தான் பட்டப்படிப்பு என அவளே முடிவு எடுத்துவிட்டதனால் போட்டித்தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் இல்லை. ஒரு பதின்பருவ வாசகி இலக்கியத்துக்குள் நுழைவதை அருகிருந்து பார்ப்பதென்பது நுண்ணிய அவதானிப்புகள் சிலவற்றை சாத்தியமாக்குகிறது. நம் வாசிப்பின் பரிணாமமும் அதன் இடர்களும் தெளிவாகப் பிடிகிடைக்கின்றன. நித்ய சைதன்ய யதியின் வழிகாட்டல் ஒன்று உண்டு. குழந்தைகள் குழந்தை இலக்கியத்தையும், இளமைக்கால எழுத்துக்களையும் தாண்டிவிட்டால் அவர்கள் வணிக இலக்கியத்துக்குள் நுழைவதற்குள் தரமான இலக்கியங்களை, நடை நேரடியாக இருக்கக்கூடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/53963/

மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…

அன்புள்ள ஜெமோ, நான் இலக்கியத்தில் ஒரு ஆரம்பவாசகன். எனக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் ஒரு மூத்த நண்பர். அவருக்கும் எனக்கும் இலக்கியத்தைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம். அவர் கதைகளில் கொஞ்சம் உணர்ச்சி இருந்தாலும் அதை ‘sentimental’ என்று சொல்லிவிடுவார். ஒரு படைப்பை வாசித்துவிட்டு நாம் மனம் கலங்கும்படி இருந்தால் அதை ‘melodrama’ என்று சொல்வார். அதேபோல அவரை நான் கூர்ந்து பார்க்கிறேன். அவர் இருபதாண்டுகாலமாக வாசிக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு கதையில் உள்ள earthly யான விசயங்கள்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47588/

ஜோ.டி.குரூஸுக்கு பாராட்டு விழா

பிப்ரவரி 2014 ஒன்றாம்தேதி மாலையில் ஜோ.டி குரூஸுக்கு பாராட்டுவிழா சிறில் அலெக்ஸ் மற்றும் நண்பர்களால் சென்னை லயோலா கல்லூரியில் ஒருங்கிணைக்கப்பட்டது. விழாவுக்கு முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் தலைமை ஏற்று நடத்திவைத்தார். அரங்குநிறைய நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர். விழாவின் மிகச்சிறப்பான உரையாக அமைந்தது வறீதையா கன்ஸ்டண்டீன் ஆற்றியது. பெரும்பாலும் மீனவச் சமுதாயத்தை நோக்கியதாக அமைந்த உரை. அம்மக்கள் பேதங்களை மறந்து ஒன்றுபடுவதற்கான அழைப்பு. தங்கள் பண்பாட்டை அடையாளம் காணவும் அதை எழுத்தில் ஆவணப்படுத்தவும் விடப்பட்ட அறைகூவல். இந்திரா பார்த்தசாரதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45893/

தமிழில் வாசிப்பதற்கு…

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நலம், நலம் அறிய அவா. (இப்படி எழுதுகையில் எனது பள்ளி நாட்கள் நினைவிற்கு வந்து என்னைக் குதூகலப்படுத்தும்.) குற்றமும் தண்டனையும் அசடன் கரமசோவ் சகோதரர்கள் போரும் அமைதியும் இவைகளை வாசிக்க ஆசைப்படுகிறேன். தமிழில் இவைகளை வாசித்தால் ரஷ்ய எழுத்தாளர்கள் தாங்கள் ஒவ்வொரு வரியிலும் சொல்ல வந்த அசல் கருத்துக்களும், உணர்ச்சிகளும் மற்றும் பல விஷயங்களும் கிட்டுமா என்பதை எனக்குத் தெரியப்படுத்தவும். நீங்கள் கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் வாசித்திருப்பீர்கள். நான் வண்ணதாசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25938/