Tag Archive: போகன்

சொற்களை தழுவிச்செல்லும் நதி

கவிதைகளில் சொற்களின் நடுவே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு கூற்று உண்டு. இளம் வயதில் அந்த வரியை வாசிக்கையில் நான் நேரடியாகவே அந்தக் காட்சியை கற்பனைசெய்துகொண்டேன். ஒவ்வொரு சொல்லும் ஒரு பாறை. இன்னொரு பாறை தாவிக்கடக்கலாம் என்று ஆர்வத்தையும் விழுந்துவிடுவோமோ என்னும் அச்சத்தையும் ஒருங்கே உருவாக்கும் தொலைவில். நடுவே பெருநதி. நுரையுடன் ஆவேசமாக கொந்தளித்துச் செல்வது. அந்த வரி நெடுங்காலம் நினைவில் நின்றதனால்போலும் கவிதை நாம் அர்த்தப்படுத்திக் கொள்வது என்னும் கூற்று எப்போதுமே எனக்கு அபத்தமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118594

போகனுக்கு அன்புடன்

போகன் சங்கர் கவிதைகள் பற்றி எழுதிய குறிப்புக்கு அவர் வழக்கமான சாணிபூசும் மொழியில் பதிலளித்திருக்கிறார். நான் அவரை முன்பு பாராட்டினேன், இப்போது வசைபாடுகிறேன் என்பது அவரது புரிதல். அவரது கதையைப்பாராட்டி இந்த இணைய தளத்தில்தான் வெளியிட்டேன். அறிமுக எழுத்தாளராக. இப்போதும் ஓர் எழுத்தாளராக அவர் தன்னுடைய இடத்தைக் கண்டடையமுடியும் என்றும் நினைக்கிறேன். அவருக்கு எழுதுவதற்குரிய அடிப்படையான அவதானிப்புகள் உள்ளன அவர் உயிர்மை இதழில் எழுதிய மீட்பு என்ற சிறுகதை சமீபத்தில் வாசித்ததில் குறிப்பிடத்தக்கது என்று தோன்றியது.அழகியல் ரீதியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74574

பூ, பரிசுத்தவான்கள் – கடிதங்கள்

அண்ணன்! விவாதத்தின் ஆரம்பமே அனல். எனினும் கற்றுக்கொள்ளுவதற்கு அதிகம் இருப்பதால் பொறுத்துக்கொள்ளலாம். உண்மைதான், பல வகைகளில் எழுத்து நமக்கு அறிமுகமான மொழியிலும் நடையிலும் களத்திலும் இருப்பது நமக்கு ஒரு அருகாமையைக் கொடுக்கும். உங்களோடு நான் ஒட்டிக்கொள்ளுவதற்கு அது ஒரு சிறப்புக் காரணம். எனினும் கொற்றவையின் தூய தமிழும், குமரி வட்டார வழக்குகள் தாண்டி உங்கள் எழுத்துக்கள் பயணம் செய்யும்போதும் பெற்றோருடன் வேகமாக நடக்க இயலாத குழந்தை ஓடி வந்து சேர்ந்துகொள்ளும் பரபரப்புடனே இருக்கிறேன். இம்மொழி கேட்டிராத ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40978

கதைகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், புதியவர்களின் கதை “பூ” கதை படித்தேன். படித்தேன் என்பதை விட பார்த்தேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். கதையை படிக்கப் படிக்க, என் கண்ணில் காட்சிகளாக விரிந்து கொண்டே இருந்தது. படித்து மூன்று நாட்கள் கழித்தும், கிருஷ்ணனின் அம்மா கண் முன்னே நிற்கிற மாதிரியும், ஆலமரத்தின் பின்னால் நின்று கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. வைத்தியரைப் பார்க்கும்பொழுதும், கிருஷ்ணனின் அம்மா இறந்த காட்சிகளிலும், உங்கள் முகம் வந்து போனது. நாகலிங்கப்பூவின் வாசனை தரும் மயக்கத்தைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40875

பூ – கடிதங்கள் மேலும்

போகனின் பூ கதையை இன்றுதான் வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. சில இயக்குனர்களின் படங்களை நாம் தியேட்டரில் அமர்ந்து பார்க்கும்பொழுது எந்தத் தவறும் தெரியாது. விறுவிறுப்பாகவும் நமக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். உள்ளே நம்மை கட்டிப்போட்டு விடுவார்கள். வெளியே வந்து டீ கீ குடித்து இரவு சாப்பாடும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கொஞ்சம் கொஞ்சம் நெருடும். அது போலத்தான் “பூ” எனக்கு பட்டது. வெகுநேரம் கழித்து மீண்டும் கதையை யோசிக்கையில் கதை பழையதாகவும், அடுத்தடுத்து நடப்பது யூகிக்கக்கூடியதாகவும் முடிவில் பெரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40871

பூ- கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். போகனை தொடர்ந்து கூகிள் பிளசில் படித்து வருகின்றேன். நல்ல மொழி. பெண்ணில் தெய்வம் காணும் கதை. போகன் மனிதர்களை சித்தரிப்பதில் நுட்பம் காட்டுபவர், இந்த க்கதையிலும் ஒவ்வொரு பாத்திரமும் தனி இயல்போடு இருக்கின்றது. போகன் விரிவான பின்புலக் காட்சிகளின் நடுவே கதை மொழியை சொல்கிறார். நாகலிங்க பூ, கொன்றை பூ , நிஷாகாந்தி பூ போன்றவை ஏதேனும் குறியீடுகளா என தெரியவில்லை. கனவுகளில் இருந்து எழுந்த உக்கிரமும் தோய்ந்த குல தெய்வங்கள் குறித்து அ.கா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40838

புதியவர்களின் இருகதைகள் – கடிதம்

ஜெ போகன் எழுதிய பூ வாசித்தேன். முதலில் நான் பார்ப்பது அது நல்ல புனைவா இல்லையா என்பதைத்தான். பூ நல்ல புனைவு. வாழ்க்கையை தீவிரமாக அனுபவிக்க வைப்பதுதான் நல்ல புனைவு இல்லையா? போகனின் கதை அந்தவகையிலே நான் சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த படைப்பு. மிகமுக்கியமான அறிமுகம் அவர். வாழ்த்துக்கள். கதைமுழுக்க வரக்கூடிய உறவின் சிடுக்குகள்தான் இந்தக்கதையை ஆழமான கதையாக மாற்றுகின்றன. முதலில் வாசிக்கையில் ஒரு எளிய பழிபாவக் கதையாகத்தான் தெரிகிறது. ஆனால் இரண்டு அம்சங்களைக் கருத்தில்கொள்ளவேண்டும். கதைசொல்லியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40805

1. பூ – போகன்

[மீண்டும் புதியவர்களின் கதைகள்] கிருஷ்ணன் சரியாக அவனும் லலிதாவும் எல்லா வேலைகளையும் அரைகுறையாக அவசரமாக முடித்துவிட்டு ஆபிஸ் கிளம்பும்போது ஊரிலிருந்து கக்கத்தில் ஒரு பெரிய பலாப் பிள்ளை போல தொங்கும் பையோடு அவர் வந்தார். ”நான் கேசவன். உங்க அப்பா ஊர்ல இருந்து வரேன். உங்களுக்கு உறவும் கூட. உங்க கிட்டே பேசணும்” லலிதா எரிச்சலை மறைத்துக் கொள்ளாத கண்ணுடன் அவனைப் பார்த்தாள். அவளுக்கு ஏழே முக்காலுக்கு பஸ். அங்கிருந்து ஒரு மணிநேரம் பயணம் செய்து ஆபிஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40451