Tag Archive: போ

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 32

[ 10 ] வாருணம் என்று அழைக்கப்பட்ட அந்நிலத்திற்குச் செல்வதற்கு பாதைகளென எதுவும் இருக்கவில்லை. விண்ணிலிருந்து விழுந்து நான்காகப் பிளந்து சரிந்ததுபோல் கிடந்த வெண்ணிற பாறைக்கூட்டங்களின் அருகே வணிகர் குழு வந்தபோது பீதர் தலைவர்  போ அர்ஜுனனிடம் தொலைவில் வானில் எழுந்து தெரிந்த வெண்ணிற ஒளியை சுட்டிக்காட்டி “அங்குதான் என்று ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் எவரேனும் சொல்வதுண்டு. அந்நிலத்தைப் பற்றிய கதைகளன்றி வேறெந்த செய்தியும் நானறிந்திருக்கவில்லை” என்றார். அர்ஜுனன் புன்னகைத்து “நன்று, நான் மீள்வேன்” என்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92446

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 31

[ 7 ] பீதர் வணிகர்களுடன் அர்ஜுனன் பிங்கலத்தில் இருந்து எலிமயிரின் நிறம் கொண்டிருந்த தூசரம் என்னும் பாலையை கடந்தான். மரவுரியின் நிறம் கொண்டிருந்த கபிலத்தையும் பூர்ஜப் பட்டை என வெளிறிய பாண்டகத்தையும் கடந்தான். வெயில் என்பது நிலத்திற்கு ஒன்று என்று உணர்ந்தான். மரப்பட்டைகளை உலர்த்திவெடிக்கவைக்கும் வெயிலை அவன் அறிந்திருந்தான். கற்பாறைகளை விரிசலிடச்செய்யும் வெயிலை அங்கு கண்டான். நீர் என்பது தேக்கமென பெருக்கென அதுவரை அறிந்திருந்தான். அது துளிகள் மட்டுமே என உணர்ந்தான். கழுதைகளில் ஏற்றப்பட்ட தோற்பைகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92394