Tag Archive: பேரா.நா.தர்மராஜன்

இரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி

  தல்ஸ்தோயின் பெரும்நாவல்களில் ‘அன்னா கரீனினா’ மட்டுமே வடிவநேர்த்தி கொண்ட படைப்பு என்று ஒரு பேச்சு உண்டு. அவரது கடைசிநாவலான புத்துயிர்ப்பு ஒரு வகையான சென்று தேய்ந்திறுதல் கொண்டது. ‘போரும் அமைதியும்’ வடிவமற்ற வடிவம் கொண்டது. ஹென்றி ஜேம்ஸ் அதை ஒரு மாபெரும் கதைமூட்டை என்று சொன்னார். ‘கொஸாக்குகள்’ போன்ற ஆரம்பகால நாவல்கள் நாவலுக்கான முயற்சிகளே. அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6217

தமிழில் வாசிப்பதற்கு…

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நலம், நலம் அறிய அவா. (இப்படி எழுதுகையில் எனது பள்ளி நாட்கள் நினைவிற்கு வந்து என்னைக் குதூகலப்படுத்தும்.) குற்றமும் தண்டனையும் அசடன் கரமசோவ் சகோதரர்கள் போரும் அமைதியும் இவைகளை வாசிக்க ஆசைப்படுகிறேன். தமிழில் இவைகளை வாசித்தால் ரஷ்ய எழுத்தாளர்கள் தாங்கள் ஒவ்வொரு வரியிலும் சொல்ல வந்த அசல் கருத்துக்களும், உணர்ச்சிகளும் மற்றும் பல விஷயங்களும் கிட்டுமா என்பதை எனக்குத் தெரியப்படுத்தவும். நீங்கள் கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் வாசித்திருப்பீர்கள். நான் வண்ணதாசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25938

பேரா.நா.தர்மராஜன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ   உங்கள் கட்டுரையை வாசிக்கும் வரை நா தர்மராஜன் அவர்களின் மறு பக்கங்களைப்பற்றிய எந்த சித்திரமும் என் மனதில் இல்லை. நான் அவரது மொழியாக்கங்களை படித்திருக்கிறேன். இன்னும் என்ன முக்கியம் என்றால் நான் என் P.U.C. படிப்பை RDM கல்லூரி சிவகங்கையில்தான் முடித்தேன். அங்கே எனக்கு ஆங்கிலம் சொல்லித்தந்த ஆசிரியர் பேராசிரியர் தர்மராஜனேதான்.   ராஜ சுந்தற்றாஜன்   அன்புள்ள ஜெயமோகன்,   நா.தர்மராஜன் அவர்களைப்பற்றிய உங்கள் கட்டுரை சோவியத் நூல்கள் கிடைத்த அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2261

பேரா.நா.தர்மராஜன்

முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு எளிய கிராமத்துச் சிறுவனுக்கு தமிழ் வழியாக என்ன வாசிக்க கிடைத்திருக்கும்? முதலில் ராணி, தேவி, கல்கண்டு. பின்னர் மெல்ல குமுதம், கல்கி, விகடன். அவற்றின் வழியாக சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான தொடர்கதைகள். அவற்றில் ஒரு பக்கத்துக்கு மிகாமல் வரும் கட்டுரைகள். அவற்றின் வழியாக தெரியவரும் உலகம் ஒரு உள்ளங்கைக் கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்த்துக்கொள்வது போன்றது. அவ்வளவுதான். அதற்குமேல் அவனை தற்செயல்கள் உந்திச்சென்று எங்காவது சேர்ப்பித்தால் ஒழிய அவனுக்கு இன்னொரு உலகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2139