Tag Archive: பேய்கள் தேவர்கள் தெய்வங்கள். 2

பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் – கடிதங்கள்

இனிய ஜெயம், ஜன்னல் இதழில் நீங்கள் எழுதிவரும் பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் தொடரை தவறாமல் வாசித்து வருகிறேன். உங்களின் தீவிரம் குறையாமல் வெகுஜன வாசிப்புக்கு உகந்த மிக முக்கியமான தொடரை எழுதி வருகிறீர்கள். இந்துமதம் எனும் விருட்சத்தின் கிளைகளின் மலர்களில் மணமாக வீசும், வேர் பற்றிய சேற்று நீரின் வாடையை , வெளித் தெரியும் விருட்சம் ஒன்றின் கட்புலனாகா ஆணிவேரின், அதன் பன்மைத்துவத்தை ஆழத்தை கதைகள் வழியே முன்வைக்கிறீர்கள். வைப்பு முறைப்படி இருபுராணமரபு கட்டுரைக்குப் பிறகு, வேர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77785

பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் – 3 வேர்களும் விருட்சங்களும்

திருவட்டாறு ஆதிகேசவ பேராலயத்திற்கு முன்பக்கம் அருகே நாகங்கள் பதிட்டை செய்யப்பட்ட அரச மரத்திற்கு அருகே என் தந்தைவழிப் பாட்டியின் வீடு இருக்கிறது. தன் 90 வயது வரையில் பாட்டி அங்கு தான் வாழ்ந்தாள். இளவயதில் அவ்வப்போது அங்கு சென்று பாட்டியிடம் தங்குவதுண்டு பாட்டியின் கை பிடித்துச் சென்று திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தை சுற்றி நோக்கி ஒவ்வொரு தூணாக நின்று சிற்பங்களையும் அலங்காரங்களையும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். பாட்டி என்னைக் கொண்டு சென்று முகப்பு மண்டபத்தின் மேலேற்றி சிறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76823

பேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 2,பேய் சொன்ன பேருண்மை

நான் வாழும் இடம் நாகர்கோவிலின் புறநகரான பார்வதிபுரம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி கள்ளியங்காடு என்று அழைக்கப்பட்டது. இதன் அருகே இருக்கும் கணியாகுளம் என்ற விவசாய கிராமம் தவிர இப்பகுதியில் மக்கள் வாழ்க்கை அன்று அனேகமாக இல்லை. பேச்சிப்பாறை அணைகட்டப்பட்டு இவ்வழியாக அதன் கால்வாய் வந்தபோது இந்நிலமெல்லாம் வயலாகியது. நகரம் வளர்ந்தபோது புறநகராகியது கள்ளியங்காடு அக்காலம் முதல் மனிதர் அணுக முடியாத ஒரு பகுதியாகவே இருந்தது. ஆனால் கள்ளியங்காட்டுக்கு அதற்கும் முன்னரே ஒரு நீண்ட வரலாறு உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76777

பேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 1, இரு புராண மரபுகள்

நான் சின்னப்பையனாக இருந்தபோது ஒரேசமயம் இரண்டு கதையுலகங்களில் வாழ்ந்தேன். என் பாட்டி லட்சுமிக்கு அப்போதே எண்பது வயது தாண்டியிருந்தது. பாட்டி ஒரு சம்ஸ்கிருத பண்டிதை , புராண கதைக்களஞ்சியம். அந்திக்கு விளக்கு கொளுத்தியதும் கைகால் கழுவி அமர்ந்து ராமநாம ஜபம் முடிந்தபின் என்னை மடியிலமர்த்தி என் தலையை கையால் மெல்ல தடவியபடி கதை சொல்லுவாள். தேவர்களும் கின்னர கிம்புருடர்களும் உலவும் மிகப்பெரிய கதைவெளி. அசுரர்கள், பாதாளநாகங்கள், அரக்கர் அவர்களை வதம் செய்ய பிறவியெடுக்கும் தெய்வங்கள். அவளுடைய கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76779