ஹூப்ளியில் இருந்து காலை ஐந்தரைக்கே கிளம்ப எண்ணியிருந்தோம். கிளம்பும்போது ஏழரை மணி. இன்று முழுக்க பயணம் மட்டுமே. நேராக சதாரா அருகே உள்ள மலர்வெளிக்குச் செல்லவேண்டும். எனென்றால் எங்களுக்கு அங்கே தங்குவதற்கு வெள்ளிக்கிழமைதான் இடம் கிடைத்திருந்தது. பகல் முழுக்கப் பயணம் செய்து மதியம் ஒருமணிக்குள் சென்றுசேரலாம் என்ற திட்டம். ஆனால் செல்லும்வழியில் முதலில் வண்டியின் டயர் ஓட்டை ஆகியது. அதை கழற்றி மாற்றிவிட்டு பெல்காம் எல்லைக்குள் சென்று ஓட்டையை அடைத்து வைத்துக்கொண்டோம். அதற்கு ஒரு மணிநேரம் ஆகியது. …
Tag Archive: பெல்காம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/79784
அருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்
காலையில் பெல்காமில் தூங்கி எழுந்தோம். முந்தைய இரவு பெல்காமில் உள்ள கமல் பஸதியைப் பற்றி வாசித்தபோது அதனருகே பெல்காம் ராமகிருஷ்ண மடம் இருக்கும் தகவல் தெரிந்தது. அங்கே தங்கலாமென முடிவெடுத்துப் போய் விசாரித்தோம். மிகப்பெரிய கோயிலும், கட்டிடங்களும் கொண்ட அமைப்பு அது. ஆனால் உள்ளே இருந்த சாமியார் தேனொழுகப் பேசி கிட்டத்தட்டத் துரத்தியடித்தார். ராமகிருஷ்ண மடம் அல்லது அதற்கு நன்கொடை அளிப்பவர்களின் சிபாரிசுக் கடிதத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே இடம் என்று சொல்லிவிட்டார். வேண்டுமானால் காலையில் வாருங்கள் ஒரு வாய் சோறு போடுகிறேன் என்றார். நண்பர்கள் பேசிய எதையுமே அவர் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/24207