Tag Archive: பெருமாள் முருகன்

பெருமாள் முருகன் தீர்ப்புக்குப்பின்…

உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு பெருமாள் முருகன் அறிக்கை. நண்பர்களே, வணக்கம். தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது. ‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ என்னும் இறுதி வாசகத்தின் ஒளியைப் பற்றிப் பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன். ஒன்றுமில்லை, மகிழ்ச்சிப் பரவசம் காரணமாக இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்கிறது மனம். துணைநின்ற நண்பர்களுக்கு நன்றி. எதிர்நின்ற நண்பர்களுக்கும் நன்றி. பூ   பெருவெடிப்புக்குப் பின் ஒரு பூ மலர்கிறது கூர்மணம் நறுந்தோற்றம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88780/

மின் தமிழ் இதழ் 3

சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துள்ள மின்தமிழ் இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாக அமைந்திருக்கிறது. பலகோணங்களில் பெருமாள்முருகனைப்பற்றிய் ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன. மாதொரு பாகன் பற்றிய சரவணக்கார்த்திகேயன் கட்டுரையும் நிழல்முற்றம் பற்றிய லேகா ராமசுப்ரமணியம் கட்டுரையும் கூளமாதாரி பற்றி கிருஷ்ணப்பிரபு கட்டுரையும் தெளிவான நோக்குகளை முன்வைக்கக்கூடியவையாக இருந்தன. ஒரு படைப்பாளியைப்பற்றிய இந்த விரிவான ஆய்வுக்கோவை முக்கியமான முயற்சி. ஆனால் புனைவுகளும் கவிதைகளும் பெரும் சோர்வையே அளித்தன. விபச்சாரியைப்பற்றி கவிதை எழுதுவதெல்லாம் எண்பதுகளிலேயே சிறுபத்திரிகைகளில் சலித்துப்போன விஷயங்கள். கதைகளை எழுதியவர்கள் இலக்கிய அறிமுகமில்லாதவர்களாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78427/

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். பெருமாள் முருகனுக்கான கருத்து சுதந்திரம் வேறு,யாரோ சிலருக்கு ஏதாவது ஒரு மூலையில் தெரியும் படத்தினால் வரும் மனஉளைச்சல் தவிர்க்க விரும்பும் கருத்து சுதந்திரம் வேறு. மேலும் தமிழ் இந்துவின் கருத்து சுதந்திரம் வேறு, ஆங்கில இந்துவின் கருத்து சுதந்திரம் வேறு. ஆக கருத்து சுதந்திரம் என்பது ஆளுக்காள், இடத்துக்கிடம், எழுத்தாளருக்கு எழுத்தாளர் வேறுபடும். அதை உணர்ந்தவர்கள் மட்டுமே கருத்து சுதந்திரம் பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71309/

இரு முனைகளுக்கு நடுவே.

இனிய ஜெயம், நாளை ‘ பெருமாள் முருகனுக்கு ஆதரவாக’ போராட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறீர்கள். வேறு எந்த சந்தர்ப்பத்திலும் இல்லாத வகையில் எழுத்தாளர்கள் [கார்னர்] மூலையில் மடக்கப்பட்டது இது முதல் முறை என நினைக்கிறேன். ரசனை அடிப்படையில் மாதொரு பாகன் எந்த தனித்தன்மையும் நுண்மைகளும் அற்ற நாவல். இதில் சர்ச்சைக்குரிய பகுதிகள் ஆவணப் பதிவு என்றே ஆசிரியர் சொல்கிறார். எனில் ‘குறிப்பிட்ட’ விஷயத்திற்கு வாய்மொழி , இலக்கியம், கல்வெட்டு, அரசு ஆவணம் என அனைத்து சான்றுகளையும் ஆசிரியர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70579/

பெருமாள் முருகன் – விடாமல்…

இது போன்ற உள்ளூர் விடயங்கள் எனக்கு கொஞ்சமும் தெரியாதவை. சும்மா ஒரு யூகத்தில் தேடிக்கண்டுபிடித்தது. இதில் பெருமாள் முருகனின் பெயரும், திருச்செங்கோடு,மற்றும் நிதிவிபரமும் இருக்கிறது. மேல் விபரங்கள் இந்த தளத்தில் கிடைக்கும் ஆண்டு அறிக்கையில் இருக்கக்கூடும். http://www.indiaifa.org/grants-and-projects.html?keys=murugan&tid=All&tid_1=All&date%5Bvalue%5D%5Byear%5D=&=Apply வேணு சார் , விமர்சனத்திற்கும் கேவலப்படுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு . நீங்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நக்கீரன் வகையறாவை ஆதரிக்கிறீர்கள். ராதாகிருஷ்ணன் அன்புள்ள வேணு, ராதா சமகாலப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்லக்கூடாது என்றிருப்பது இதனால்தான். ஜனநாயகம் பேணிப்பேணி என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70399/

பெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்!

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, திருச்செங்கோடு http://www.jeyamohan.in/69674 – இந்த பக்கத்தினை கடைசியாக படித்தேன். மாதொருபாகனை பற்றி உங்களது கருத்துக்களை(!) தொடர்ந்து கண்டு வருகிறேன். இந்நிலையில் ஒரு ஐயத்தின் காரணமாக கேட்கிறேன், நீங்கள் மாதொருபாகன் நாவலை படித்துவிட்டீர்களா? மாதொருபாகனில் காட்டப்பட்டுள்ள கதைக்களம் – புவியியல் – சமுதாயம் – சம்பவம் – விழாக்கள் – நம்பிக்கைகள் பெரும்பாலானவை நிதர்சனம். உள்ளூர் மக்களுக்கு பிரசித்தமானவை. இந்த மெய்யுடன் (வாழைப்பழத்தில் ஊசி போல) பொய்யை பிணைத்து இப்படித்தான் நடந்தது என்று சரித்திர நிகழ்வாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70398/

பெருமாள் முருகனை ஆதரித்து கண்டனக் கூட்டம்

பெருமாள் முருகனை ஆதரித்து கண்டனக் கூட்டம் இடம் . தமிழர்திடல்,A -4A 100அடிசாலை,அசோக்நகர்,லக்ஷ்மண் ஸ்ருதி அருகில்.வடபழனி,சென்னை நேரம்- 25-01-2015 மாலை நான்கு மணிமுதல். நான் கலந்துகொள்கிறேன். அனைவரும் வருக

Permanent link to this article: https://www.jeyamohan.in/70123/

பெருமாள் முருகன் – 12 [கடைசியாக]

ஜெமோ தெளிவான சுருக்கமான கேள்வி. பெருமாள் முருகன் திருச்செங்கோடு மக்களைப்பற்றி எழுதியதை அவர்கள் இலக்கியமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும், மதநிந்தனையாக எடுத்துக்கொள்ளக் கூடாது, எதிர்ப்பு தெரிவிப்பது காட்டுமிராண்டித்தனம் என்கிறீர்கள், சரியா? இஸ்லாமியர் அவர்களின் நபியின் படத்தை யார் வரைந்தாலும், குர்ஆனை எவர் விமர்சித்தாலும், நபியின் வாழ்க்கையை யார் ஆராய்ந்தாலும் அதை மதநிந்தனையாகக் கொள்கிறார்கள். தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதைக் கண்டிப்பீர்களா? கருத்துச்சுதந்திரம் இருசாராருக்கும் உண்டா? [இதை அ.மார்க்ஸ் அல்லது ஞாநி அல்லது மனுஷ்யபுத்திரனிடம் கேட்க முடியாது. அவர்களுக்கெல்லாம் தெளிவாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69922/

பெருமாள் முருகன் கடிதம் 11

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்தது வருத்தத்திற்குரியதுதான் என்றாலும் இதில் கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கிறது என்றே கருதுகிறேன்.. கூர் உணர்வு உள்ள பிரச்சனைகளை கையாளும்போது எழுத்தாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது. இது சரியா தவறா என்பது பிரச்சனை இல்லை. இதுதான் எதார்த்தம். இஸ்லாமியர்களை பொறுத்தவரை அல்லா, இறைதூதர், குரான் குறித்த விமர்சனங்களை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அதனை உயிரினும் மேலாக கருதுவார்கள். இதனை தெரிந்திருந்தும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவர்களைக்காயப்படுத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69930/

பெருமாள் முருகன் கடிதங்கள் 10

நேற்று சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பொங்கல் விடுமுறை என்பதால் வாசகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு கவனித்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அனைத்து முக்கிய அரங்குகளிலும் எழுத்தாளர்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விஷயம், சமீபத்தில் தனது எழுத்து பணியை, சில வட்டார சாதி அரசியல் கட்சிகள் கொடுத்த இடையூறுகளினால் நிறுத்திக் கொண்ட பெருமாள் முருகனைப்பற்றித்தான். சக எழுத்தாளர்களும், வாசகர்களும் தங்களது முழு ஆதரவை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அதே நேரத்தில், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69915/

Older posts «