Tag Archive: பெரியம்மாவின் சொற்கள்

பெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3

தாமரைஇலை ஏந்திய நீர்த்துளி, சொல் ஏந்தும் பொருள்.. [மகாபாரதம்]   இனிய ஜெயம் பெரியம்மாவின் சொற்கள் வாசித்தேன் ரமண மாலை தொகுப்பில் ஒரு குழந்தை இறைவனடி இளையராஜாவசம் ரமணர் யார் என கேட்கும். ராஜா ”ரமணர் நம் எல்லோருக்கும் தந்தை” என்பார். குழந்தைகளால் மட்டுமே கேட்க முடிந்த எளிய கேள்வி. மௌனத்தை அறிந்தவரால் மட்டுமே சொல்ல முடிந்த பதில். தந்தை. நம் எல்லோருக்கும் தந்தை . மௌனமான தந்தை. ரமணரின் தனிமையையும் மௌனத்தையும் ஜெக்கேவின் சுய தரிசனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75162

பெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1

அன்பின் ஜெ, எனக்கு பிடித்த வடிவம் எப்பொழுதும் சிறுகதை.பெரியம்மாவின் சொற்கள் நல்ல வாசிப்பனுபவம்.பொதுவாக எல்லா எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வாசித்திருப்பேன். உங்களின் படுகை,கிடா,வெண்கடல்,தாயார் பாதம் ,மயில்கழுத்து ,போதி உச்சவழு போன்றவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவை. பெரியம்மாவின் சொற்கள் அந்த வரிசையில் முதலில் வரும்.சொற்களின் அர்த்தத்தைக் கூறுவது போல வரும் ஒவ்வொரு வார்த்தையின் நுட்பமும் உணர்ந்து வாசிக்கக்கூடியவை.kind ஆன ோழியும்,அருஞ்சுனையும்,பக்கீரும்.,அவர்களே beautifulஆக பெரியம்மைக்குத் தெரிவதும் classic touch. பொதுவாக வட்டார வழக்குகளிலும்,மொழிகளிலும் எனக்கு ஈர்ப்பு ,எனவே பெரும்பாலான சொற்களுக்கு நானறிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75156

கரடி-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்களது ஏழாம் உலகம் நாவலால் ஈர்க்கப்பட்டு jeyamohan.in வலை தளத்திலுள்ள அனைத்து சிறு கதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசையை படித்து வருகின்ற ஆரம்ப நிலை வாசகன் நான் .உங்களது சிறு கதைகளில் உச்சவழு ,முடிவின்மைக்கு அப்பால் ,கடைசி முகம் போன்றவை எனக்கு மிகவும் நெருக்கமானவை .பல முறை உங்களுக்கு மெயில் அனுப்ப நினைத்து பயத்தினால் அனுப்ப முடியாமல் தவிர்த்திருக்கிறேன் ..சில மெயில்களை ஒரு சில வரிகள் மட்டும் தட்டச்சு செய்து அனுப்பி இருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75232

மத்திம மார்க்கம்

ஆசிரியருக்கு, ஒருகணத்துக்கு அப்பால், பெரியம்மாவின் சொற்கள் மற்றும் கரடி இம்மூன்று கதைகளின் பொது அம்சம் என்பது மத்திய மார்க்கம். குழைந்தும் இல்லாத திடமாகவும் இல்லாத ஒரு கரைசல், ஆனால் விளைவுகள் வேறு வேறு. எல்விஸ் ப்ரெஸ்லி ஒன்றும் உன்னத கலை வடிவம் அல்ல. உயர் கலையின் சற்று மட்டுப் படுத்தப் பட்ட கேளிக்கை வடிவம். கிருஷ்ணாபுர சிற்பங்கள் வெறும் நிர்வாண பொம்மைகள் அல்ல, மேம்படுத்தப் பதட்ட கலைப் படைப்பு. பெரியவர் இதில் இரண்டிலும் சென்று வருகிறார், இரண்டிற்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75151

பெரியம்மாவின் சொற்கள் [சிறுகதை]

வா,போ,நில்,சாப்பாடு, துணி,மகன், மகள், சாலை,வீடு, வானம், பூமி, ராத்திரி, பகல் எல்லாம் ஓரளவு எளிதாகவே வந்துவிட்டது. நான் தமிழில் அச்சொற்களைச் சொன்னால் பெரியம்மா அவற்றுக்கான ஆங்கிலச் சொற்களைச் சொல்வாள். நான் சொல்வதில் ஓர் ஒழுங்கு இருப்பது நான் பூ என்று சொல்வதற்குள்ளாகவே பெரியம்மா cat என்று சொன்னபோது எனக்குத் தெரிந்தது. ஆகவே அடுக்கை மாற்றினேன். ஆனால் பெரியம்மா என் கண்களைபார்த்தே சொல்லத் தொடங்கினார்கள். நான் அம்மிருகங்களைச் சுட்டிக்காட்டி அவை என்ன என்று கேட்டேன். பெரியம்மா தமிழில் நாய், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74736