Tag Archive: பெண் எழுத்தாளர்கள் விவாதம்

அம்பையின் ஊடக தந்திரம்

அம்பை தி இண்டு தமிழில் எழுதிய இந்தக்கட்டுரை பெண்எழுத்தாளர்கள் எந்த எல்லை வரை செல்வார்கள் என்பதற்கான ஆதாரம். முதலில் இக்கட்டுரை என்னைப்பற்றி பேசத்தொடங்குகிறது. என் படத்தைப் போட்டு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. ஆனால் நான் பெண் எழுத்துப்பற்றி என்ன சொன்னேன் என அக்கட்டுரை பொருட்படுத்தவே இல்லை. நான் முதன்மையான பெண் எழுத்தாளர்களை புகழ்ந்து, விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்களை முன்வைத்து அந்தத் தரத்தில் எழுதும் எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்றும் ஆனால் எதுவுமே எழுதாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56832/

எங்கே நிற்கிறார்கள்?

ஜெ நீங்கள் சுட்டிகொடுத்தமையால் நான் திருமதி கொற்றவை என்பவரது இணையதளத்துக்குச் சென்று அங்கே இருந்த உங்களைப்பற்றிய வசைகளை வாசித்தேன். அதிர்ச்சியும் அருவருப்பும் ஏற்பட்டது. இவர்கள் எந்த உலகில் வாழ்கிறார்கள் என்று திகைத்தேன். அதன்பின் அங்குள்ள சில கட்டுரைகளை வாசித்தேன். உண்மையில் மலக்குழிக்குள் இறங்கி நின்ற உணர்வு. அற்பச்சண்டைகள். நீங்கள் குழாயடிச்சண்டை என்கிறீர்கள். தமிழ்நாட்டில் எந்தப்பெண்ணும் இந்தத் தரத்திலான குழாயடிச்சண்டைகளைப்போடுவதில்லை. உங்கள் இணையதளமும் நீங்களும் செயல்படும் தளம் என்ன, நீங்கள்வெளியிடும் கட்டுரைகளின் தரம் என்ன என்று ஓரளவு வாசிப்பவர்களுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56771/

பெண்களின் அறிக்கை

பெண்களின் எழுத்து பற்றிய என்னுடைய விரிவான கருத்துக்களுக்கு பதிலாக பெண் எழுத்தாளர்கள் என சிலர் எழுதிய கூட்டறிக்கை ஒன்றை வாசித்தேன். அவர்களில் நாலைந்துபேரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்பது என் எண்ணம். கேள்விப்படாதவர்கள் இவர்களை விட சிறப்பாக எழுதியிருப்பார்கள் என நம்பலாமா என யோசிக்கிறேன். வருத்தம் அளித்த அறிக்கை இது. இதில் உள்ள வசைகள், அவதூறுகள், திரிபுகளுக்காக அல்ல. அவற்றை நான் புதியதாகச் சந்திக்கவில்லை. என் படைப்புகளை, கட்டுரைகளை வாசித்தவர்களிடமே நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56732/

கமலா தாஸ் கட்டுரைகள்

கமலா தாஸ் பற்றி நான் எழுதிய அஞ்சலிக்கட்டுரையையும் அதை ஒட்டி உருவான வந்த எதிர்வினைகளுக்கு அளித்த விரிவான பதில்களையும் இங்கே காணலாம். இவை வெறும் அக்கப்போர்கள் அல்ல. ஓர் எழுத்தாளரின் அந்தரங்கம் எந்த அளவுக்கு விவாதிக்கப்படலாம், அவரே அதை முன்வைக்கும்போது எந்த அளவுக்கு விவாதிக்கலாம் என்னும் தளத்தில் விரியும் விவாதம் அது. கமலாதாஸின் கதைகளுக்கும் அவரது மனநிலைகளுக்கும் உள்ள தொடர்பையும் அவரது கட்டற்ற மனநிலையாலேயே அவர் ஒரு முக்கியமான படைப்பாளியாக ஆனதையும் விரிவாகப்பேசுபவை இக்கட்டுரைகள். இதே அளவுகோலையெ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56739/

பெண்ணிய வசை

இன்று தினமலரில் இச்செய்தி வெளிவந்துள்ளது. பலரும் இதைப்பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட விஷயத்தை வாசகர்கள் கவனிக்கவேண்டுமென நினைக்கிறேன். ஓர் எழுத்தாளனாக பொதுவெளியில் பெண்கள் மதிப்புக்குறைவாக நடத்தப்படுவதற்கு எதிராக மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றிவருபவன் நான். அது அவர்களின் குரல் எழாமலாக்கிவிடும் என பல முறை வலுவாக எழுதியிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் சு.சமுத்திரம் இன்னொரு பெண் எழுத்தாளரைப்பற்றிய விமர்சனத்தில் ‘இன்றைய பெண் எழுத்தாளர்கள் தலைப்பிலேயே முந்தானை விரிப்பவர்கள்’ என எழுதியபோது இண்டியா டுடே இதழில் மிகக்கடுமையான கண்டனக்கட்டுரையை நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56554/

பெண்களின் எழுத்து…

அன்புள்ள ஜெ, பெண்களின் சாதனைகளை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் என்று இங்கே பலபேர் சொல்கிறார்கள். பெண்கள் வெற்றிபெறுவதெல்லாம் பாலியல் அடையாளம் மூலம் பெறும் வெற்றி மட்டும் என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தவற்றை எந்த அளவுக்கு புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. தங்களை பெண்ணிய ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பெண்கள் எழுதவே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்றுகூட சிலர் எழுதியதை வாசித்தேன். நீங்கள் சொன்னதென்ன என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56437/

நாஞ்சில்நாடன் பட்டியல்

ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள். இதில் அடிமுதல் முடிவரை அசட்டுத்தனம் என்று சொல்லத்தக்க வினாக்கள் இரண்டு. எந்த இலக்கிய விவாதத்திலும் நாலைந்து கோயிந்துக்கள் கிளம்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56339/