Tag Archive: பெண் எழுத்தாளர்கள்

பெண் எழுத்தாளர்கள் – மனுஷ்யபுத்திரன்

ஜெ இது மனுஷ்யபுத்திரன் அவரது ஃபேஸ்புக்கில் இன்று எழுதியது. …………………………………………………………………….. ’’இந்த இரண்டு வருஷங்களில் இருபது நாடுகளுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். இதில் ஒன்றுகூட இலக்கிய நிகழ்ச்சியில்லை. எல்லாமே ஃபிலிம் ஃபெஸ்டிவல் சம்பந்தப்பட்டது. எனது வளர்ச்சி குறித்து மனுஷ்ய புத்திரன் ‘ஒரேயொரு நாவல்தான் இவர் எழுதியிருக்கிறார். யார் இந்த வாய்ப்புக்களை உருவாக்கித்தருகிறார்கள்’ என சந்தேகம் எழுப்பியிருந்தார். ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நியாயமான அங்கீகாரத்தைக்கூட அந்தரங்க சலுகையாகப் பார்க்கும் ஆண் எழுத்தாளர்களின் பொதுப்புத்தியால் இப்படியே யோசிக்க முடியும். அவர்களுக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57657

உடலிலக்கியம்

  அன்புள்ள நண்பர்களே, இனிய தோழி ஒருத்தியை நினைவுகூரும்வகையில் இங்கே நாம் கூடியிருக்கிறோம். கீதா ஹிரண்யன் தன் இரண்டு குழந்தைகளையும் அறிவுலகிலும் தோழனாக அமைந்த கணவரையும் இளம் வயதிலேயே பிரிந்து மறுகரைக்குச் சென்றுவிட்டிருக்கிறார். அவருடைய பிரியத்துக்குரிய எழுத்தாளன் என்ற வகையில் நான் இங்கே பேச அழைக்கப்பட்டிருக்கிறேன். கீதாவை நான் சந்தித்தது ஆற்றூர் ரவிவர்மாவின் இல்லத்தில். என்னைக் கண்டதுமே சிறுமிகளுக்குரிய ஆர்வத்துடன் என்னை நோக்கி வந்து படபடப்பும் சிரிப்புமாக தனக்குப் பிடித்தமான எழுத்தாளர் நான்தான் என்று சொன்னார். மலையாளத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/866

பெண்கள்- கடிதங்கள்

தங்களுடைய பெண் படைப்பாளிகள் (?!) குறித்த கருத்துகளுக்கு பதிலாக எழுதபடிருக்கும் கூட்டறிக்கையை வாசித்தேன் .நான் சமூக ஊடகங்களில் பங்கு கொள்ளாத காரணத்தினால் எனக்கு இந்த சம்பவங்கள் குறித்த விவாதங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று தெரியாது .அனால் ஒரு வாசகனாக சில விஷயங்களை கூற விரும்புகிறேன் .அதனை இந்த சிறு பதிவின் வாயிலாக செய்கிறேன் . சொல்லெறிந்து கொல்வதற்கு முன் எத்தகைய விவாதங்களும் நல்லது தான் .விவாதங்கள் ஒரு வகையான உயிரசைவை உருவாக்குகின்றன .அனால் எந்த ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56773

இரண்டு பெண் எழுத்தாளர்கள்

திலீப்குமாரிடம் இன்று பேசிக்கொண்டிருந்தேன். திலீப் தமிழின் முக்கியமான 85 கதைகளைத் திரட்டி ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு தொகுப்பு கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்போது இரு முக்கியமான படைப்பாளிகளை கண்டெடுத்ததாகச் சொன்னார். இருவரும் தமிழ் இலக்கியத்தின் மிகத்தொடக்க காலத்தில் எழுதியவர்கள். முன்னோடிகள். ஆனால் எந்த இலக்கியநூலிலும் அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அம்மணி அம்மாள் 1913-இல் அக்காலத்து மாதஇதழ் ஒன்றில் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். வடிவம் மொழி ஆகியவற்றைக்கொண்டு பார்த்தால் அவர்தான் தமிழின் முதல் சிறுகதையாசிரியர் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56527