Tag Archive: பெண்ணெழுத்து

பெண்ணெழுத்து -நவீன்

இங்கு வழக்கமாக எழும் கேள்வி , “எங்க படைப்புகளைத் தரம் பிரிக்க நீ யாருலா?” என்பதுதான். நான் ஒரு வாசகன் . கொடுக்கப்படும் நூல்களை பொருட்படுத்தி வாசிக்கிறேன். அதன் மூலம் சமகால இலக்கியம் குறித்த எனது அபிப்பிராயத்தோடு ஒப்பிடுகிறேன். அதன் வழி ஒரு படைப்பு எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அதை சொல்கிறேன். என் அபிப்பிராயத்தை யாரும் நிராகரிக்கலாம். ஏன், நாளை மறுவாசிப்புக்குப் பின் நானே கூட நிராகரிக்கலாம். ஆனால், இன்றுவரை உள்ள வாசிப்பு அனுபவத்தில் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57731

வலியெழுத்து

கீதாவை நான் சந்தித்ததுமே நான் கவனித்தது அவருடைய மழலையைத்தான். மலையாளக்கவிஞரும் என் குருநாதருமான ஆற்றூர் ரவிவர்மாவின் இல்லத்தில். என்னைக் கண்டதுமே சிறுமிகளுக்குரிய ஆர்வத்துடன் என்னை நோக்கி வந்து படபடப்பும் சிரிப்புமாகத் தனக்குப் பிடித்தமான எழுத்தாளர் நான்தான் என்று சொன்னார். ‘என் ஆதர்சம்…என்னுடைய சொந்த எழுத்தாளன்!’ என்று விசித்திரமான மழலையில் குழறினார் ஆனால் கீதா ஒரு சாதாரண வாசகி அல்ல. ‘இது கீதா ஹிரண்யன்’ என ஆற்றூர் அறிமுகம் செய்தபோது நான் ஆச்சரியத்துடன் ‘அப்படியா? நீங்களா அது?’ என்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31741

கீதா ஹிரண்யன்- இருகடிதங்கள்

என் மகள் ஜீன்ஸ் போடும் வயது ஆகவில்லை….அவள் ஜீன்ஸ் அணிந்து குதிரைபோல நடப்பதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்’ அவரது வலிகளில் மிகப்பெரிய வலி இது போன்ற நினைவுகளாகத்தான் இருக்கும்… வலியை விட மரணம் வலியதுதான் இல்லையா… நன்றி ரத்தன் அன்புள்ள ஜெ கீதா ஹிரண்யன் பற்றிய கட்டுரை நெகிழச்செய்தது. நீங்கள் சமீபமாக இரு பெண் எழுத்தாளர்களைப்பற்றி எழுதினீர்கள். சுகந்தி சுப்ரமணியன், கீதா இருவரையுமே வலியின் எழுத்தாளர்கள் என்று சொல்லிவிடமுடியும் அல்லவா? விஸ்வநாதன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/34474