Tag Archive: பெங்களூர் சந்திப்பு

பெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம்

நேற்று காலை எட்டு மணிக்கு குளிர்ந்த பெங்களூர் நகருக்கு வந்து சேர்ந்தேன்.  நண்பர் ஷிமோகா ரவி வந்து அழைத்துச் சென்றார். அவர் இல்லத்தில்தான் வாசகர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலேயே பெங்களூர் நண்பர்கள் வந்து சேர ஆரம்பித்து விட்டனர் . மொத்தம் 47 பேர் வந்தனர் என்றார்கள் . பலர் புதியவர்கள்.   லா.ச.ராவின் மகன் ல.ரா.சப்தரிஷி வந்திருந்தார். சில நண்பர்கள் சென்னையில் இருந்து இதற்காகவே வந்திருந்தனர் என்பது ஆச்சரியம் அளித்தது. பொதுவாக பேசிக்கொண்டிருக்கலாம் என்பதே திட்டம். ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39244

பெங்களூரில் சந்திப்போம்

பெங்களூரில் ஒரு வாசகர் சந்திப்பை நண்பர்கள் ஒழுங்குசெய்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 25 அன்று நான் பெங்களூர் வருகிறேன். காலைமுதல் இரவு வரை பெங்களூரில் இருப்பேன். நண்பர்கள் வந்து சந்திக்கலாம். அறிமுகம் செய்துகொள்வதற்கும் பொதுவாக உரையாடுவதற்குமான நிகழ்ச்சி இது. சம்பிரதாயங்களேதும் இல்லை தொடர்புக்கு [email protected] [ஷிமோகா ரவி 09843258744] [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/38802