Tag Archive: பூரி

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68

சோமதத்தரின் தேர் விசைகொண்டு களமுகப்பு நோக்கி சென்றது. பூரி அதைத் தொடர்ந்து தன் தேர் செல்லும்படி ஆணையிட்டான். சோமதத்தரின் தேர் போரிட்டுக்கொண்டிருந்தவர்களை பிளந்து வகுந்தபடி சென்றது. பாம்புசென்ற புல்விரிவுத் தடம்போல தேரின் பாதை தெரிந்தது. அதனூடாக தன் தேரை விரையச்செய்தான் பூரி. சோமதத்தரின் தேரின் விரைவு பூரிக்கு வியப்பேற்படுத்தியது. தேரில் ஊர்பவரின் உளவிரைவை தேர்ச்சகடங்களும் கொள்கின்றன. ஒருகணம்கூட பிந்தக்கூடாதென்று ஏன் தோன்றுகிறது? ஒழுகும் கலத்தில் நீர் கொண்டுசெல்பவரைப்போல் ஏன் விரைவுகொள்கிறார்? சினமும் வஞ்சமும் அத்தனை விரைவாக ஒழுகிவிடக்கூடியவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118519

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67

பூரி குருக்ஷேத்ரத்திலிருந்து ஒருநாள் தொலைவிலிருக்கையில் சலன் களம்பட்ட செய்தியை முரசொலிகளிலிருந்து அறிந்துகொண்டான். குருக்ஷேத்ரத்தின் மையச்செய்திகள் அனைத்தும் முரசுத்தொடரொலி வழியாக பரவிப்பரவி நாடுகள்தோறும் சென்றுகொண்டிருந்தன. அந்த ஒலிகளுக்குமேல் பல்லாயிரம் பறவைகள் செய்திகளுடன் வானில் சென்றன. அவன் சலன் மறைந்த செய்தியைக் கேட்டு புரவியை இழுத்து நின்றுவிட்டான். அவனுடன் வந்துகொண்டிருந்த வீரர்கள் கடிவாளங்களை இழுத்து புரவிகளைத் திருப்பி அவனைச்சுற்றி ஒரு சுழலை அமைத்தனர். பூரி “மூத்தவர்!” என்றான். “பட்டத்து இளவரசர்!” என துணைப்படைத்தலைவன் திரிகரன் கூவினான். பூரி பெருமூச்சுடன் உடல்தளர்ந்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118513

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16

பால்ஹிகநகரியின் தெருக்கள் மிகக் குறுகியவையாக இருந்தன. ஒரு தேர் ஒரு திசைக்கு செல்லத்தக்கவை. அந்நகரை பூரிசிரவஸ் புதுப்பித்து அமைக்கும்போது கிழக்குக்கோட்டையிலிருந்து அரண்மனை வரைக்கும் நேராகச் செல்லும் நான்கு தேர்ப்பாதைகள் கொண்ட பெருஞ்சாலை ஒன்றை அமைத்தான். அஸ்தினபுரியில்கூட அத்தனை பெரிய அரசப்பாதை இல்லை என்று அவன் அறிந்திருந்தான். அவன் தந்தை “என்ன எண்ணுகிறாய் நீ? இங்கே என்ன சாலையிலேயே அங்காடிகளும் ஆட்டக்களங்களும் அமையவிருக்கின்றனவா?” என்றார். அவன் மறுமொழி சொல்லவில்லை. அவன் உள்ளத்தில் இருப்பது  இந்திரப்பிரஸ்தம் என்று அறிந்திருக்கவில்லை. அந்தப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110158

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 15

பூரிசிரவஸ் அஸ்தினபுரியிலிருந்து அரசரின் ஆணையை பெற்றுக்கொண்டு எல்லைக் காவலரண்கள் அனைத்திற்கும் சென்று படைநிலைகளை பார்வையிட்டு தன் அறிக்கையை பறவைத்தூதினூடாக அனுப்பிவிட்டு பால்ஹிகபுரிக்கு வந்தான். அஸ்தினபுரியிலிருந்த அந்த மாதங்களில் அவன் பால்ஹிகபுரியை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தான். பின்னால் திரும்பி நோக்க பொழுதில்லாமல் படைப் பணிகள். ஒவ்வொரு நாளும் அவன் திகைப்பூட்டும்படி புதிய ஒன்றை கற்றுக்கொண்டான். படை என்பது தனியுளங்கள் முற்றழிந்து பொதுவுளம் ஒன்று உருவாவது. உலோகத்துளிகளை உருக்கி ஒன்றாக்கி ஒற்றைப் பொறியாக்குவது. மலைக்குடிகளின் படை என்பது ஆட்டுமந்தைபோல. சேர்ந்து வழியும்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110151

இந்தியப்பயணம் 21, பூரி

செப்டெம்பர் 17 ஆம் தேதி நாளந்தாவிலிருந்து கிளம்பி பிகாரைத்தாண்டி ஜார்கண்ட் மாநிலத்துக்குள் நுழைந்தோம். ஜார்கண்ட் மாநிலம் பிகாரை விட மேலும் பின் தங்கியது என்று சொல்லலாம். போக்குவரத்து வசதி அனேகமாக கிடையாது, டிராக்டர் தவிர. கந்தலுடையுடன் புழுதிக்குள் நடமாடும் மெலிந்து வற்றிய மக்கள். ஒரு மாறுதல் இங்கே மீண்டும் சாலைகளில் அலையும் கொழுத்த மாடுகளைக் கண்டோம். டீ குடிக்க இறங்கியபோது கடையில் ஜார்கன்ட் வழியாக இரவில் பயணம்செய்வது சரியல்ல என்றார்கள். உதிரி கொள்ளைக் கூட்டத்தவர்கள் தாராளமாகச் செயல்படும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/669