Tag Archive: பூமணி

விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை

அன்புள்ள நண்பர்களுக்கு, மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம். இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இது.வழக்கமாக பரிசுபெறுபவர் பற்றி ஒரு நூல் வெளியிடப்படும். இம்முறை நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றி தயாரிக்கும் ஆவணப்படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67272/

அஞ்ஞாடி மதிப்புரை

‘அஞ்ஞாடி’யைப் படித்து முடித்தவுடன் தோன்றிய மனப்பதிவே இது. அசைபோட அசைபோட அஞ்ஞாடியின் பல கூறுகளும் மனதில் எழுந்தபடியேதான் இருக்கப்போகின்றன. கூளத்தைக் கொஞ்சமாகப் பிடுங்கிப்போட்டு படிப்பவனை ரெம்ப நாளைக்கு அசைபோட வைக்கும் பூமணி, அஞ்ஞாடி என்ற போரைத்தூக்கி நம் முன் போட்டு, அசைபோடும் மாடாக வாசகனை மாற்றும் கலையில் மீண்டும் வென்றிருக்கிறார். பூமணியின் அஞ்ஞாடி ஒரு மதிப்புரை அஞ்ஞாடி – வரலாற்றின் புதுமொழி

Permanent link to this article: https://www.jeyamohan.in/26042/

அஞ்ஞாடி- ஒரு மதிப்புரை

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம், பூமணியின் “அஞ்ஞாடி” நாவலை முன்வைத்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை கேரவான் இதழில் வெளிவந்துள்ளது (சுட்டி கீழே தரப்பட்டுள்ளது). http://caravanmagazine.in/Story.aspx?Storyid=1275&StoryStyle=FullStory இது தொடர்பாக பூமணியின் சில புகைப்படங்கள் தேவைப்பட்டது குறித்து நான் தங்களுக்கு எழுதியது நினைவிருக்கலாம். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இப்படிக்கு, கல்யாணராமன் முட்டுக்காடு — N Kalyan Raman

Permanent link to this article: https://www.jeyamohan.in/24697/

பூமணி – கடிதம்

அன்புள்ள சார், இன்று பூமணியின் தகனம் கதை வாசித்தேன்ங்க. நான் இலக்கியத்தில் வாழும் வயதானவர்களில் ஒரு கனிவான தந்தையைக் கண்டு கொண்டேன். அதில் வெள்ளத்தாயின்னு ஒரு பொண்ணு வருவா சார், வீட்டில் வேலை செய்தவரின் மகள், ஒரு உறவும் இல்லாவிட்டாலும் தன் மகள் போல அவளை நேசிக்கிறார் ஏட்டையா. கதையின் முடிவில் அந்தப்பெண் சாதிக் கலவரத்தால் இறந்து விடுவாள். இந்தக் கதை சாதிக்கலவரத்தின் தீங்கினைப் பற்றி. ஆனா ஒரு இடத்திலும் எங்கும் வெறுப்பு இல்லை. இந்த மாதிரி நபர்கள்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23754/

பூமணி- சொல்லின் தனிமை

பூமணி, தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் தணிக்கையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தணிக்கையாளராக, அதுவும் ஊழலுக்கு உருவமாகச் சுட்டிக்காட்டப்படும் தணிக்கைத் துறையில் செயல்படுவதென்பது மிகமிக அபாயகரமான ஒன்று – நேர்மையைத் தன்னுடைய அடையாளமாகக் கொண்ட ஒருவருக்கு. ‘என்னோட சர்விஸில் ஆரம்பம் முதல் கடைசி வரை நான் நேர்மையில் எந்த சமரசமும் இல்லாதவனாக இருந்தேன். என்னோட வாழ்க்கை இந்த அளவுக்குக் கொந்தளிப்போடு இருந்ததுக்கு அதுதான் காரணம். இந்தமாதிரி ஒரு வேலையில் இந்தமாதிரி ஒரு உறுதியோட நான் இல்லாம இருந்திருந்தா ஒருவேளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22951/

பூமணி-கடிதங்கள்

அன்பிற்குரிய ஜெயமோகன், விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு பூமணிக்குக் கொடுத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். பெருமைப்படுத்த வேண்டிய ஆளுமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அத்துடன் அவர்களின் படைப்புகளைக் குறித்து நூலும் எழுதுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன், பெருமாள்முருகன் www.perumalmurugan.com அன்புள்ள பெருமாள்முருகன், நன்றி. இது ஒரு அவசியமான விஷயம். இதைச் செய்யவேண்டுமெனப் பிறரிடம் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்திருக்கிறேன். சரி என்று நானே ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இந்த விருதுகளில் ஒரு சின்ன குறை உள்ளது. ஆ.மாதவன் அதைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23536/

பூமணி- எழுத்தறிதல்

வறண்ட கரிசலில் வாழ்க்கையே பெரும் போராட்டமாகிப் போன சூழலில் பிறந்த பூமணி கல்வி கற்றது ஓர் ஆச்சரியம். இலக்கியக் கல்வி கற்றது இன்னும் பெரிய ஆச்சரியம். இரண்டுமே தற்செயல்கள் அல்ல என்றார் பூமணி. அவர் கல்வி கற்கச் சென்றது அம்மாவின் தளராத பிடிவாதம் காரணமாகத்தான். அவர் கல்விக்குள் செல்வது அம்மாவின் கனவாக இருந்தது. அவரைப் பட்டப்படிப்பு வரை கொண்டு வருவதற்காக அம்மா காடுகளில் ரத்தமும் வியர்வையும் சிந்தியிருக்கிறார். இலக்கிய அறிவு பெற்றதற்கும் அம்மாவே காரணம். பூமணியின் தொட்டில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22948/

பூமணி- உறவுகள்

பூமணி அவரது அம்மாவிடம் எட்டுவயதுவரை பால்குடித்தவர். தமிழ் எழுத்தாளர்களில் இந்த தனித்தன்மை வேறு எவருக்காவது இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஒரு நல்வாய்ப்புதான் அது . ‘அம்மா பாடும் தாலாட்டுகளை கேட்டுக்கொண்டிருப்பேன். அவற்றின் பொருள் முழுக்க புரிகிற வயது வந்தபிறகும்கூட அம்மா என்னை தொட்டிலில் போட்டு ஆட்டி தாலாட்டு பாடுவதுண்டு’ என்று பூமணி சொன்னார். நடந்து திரியும் வயதில் அவர் அம்மாவிடம் பால்குடித்தார். பூமணி மேலூர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில்கூட அம்மாவிடம் பால்குடிப்பார். அம்மாவை உறிஞ்சி உரித்தெடுப்பார். பள்ளிக்கூடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22945/

பூமணியின் வழியில்

இந்தியமொழிகளில் நவீனத்துவம் ஆரம்பத்திலேயே உருவானது தமிழில் என்று தோன்றுகிறது. 1930களிலேயே தமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது. பொதுவாக இந்திய மொழிகளைப் பார்த்தால் விமரிசன யதார்த்தவாதம் என்ற அழகியல் வடிவம் மிதமிஞ்சிய வடிவப் பிசிறுகளுடன்தான் அமைந்துள்ளது. உதாரணமாக மகா ஸ்வேதா தேவியின் கதைகளையோ தகழி சிவசங்கரப் பிள்ளையின் சிறுகதைகளையோ சுட்டிக்காட்டலாம். பிற இந்திய மொழிகளில் தமிழ்ச்சிறுகதைக்கு உள்ள கச்சிதமான வடிவத்தை அபூர்வமாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22838/

விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை

அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம் அலங்கார மேடையேறி அறிவார்ந்த கருத்துக்களைச் செறிவுடன் எடுத்துரைக்கும் கலை எனக்குத் தெரியாது.  அந்த ஆற்றலும் கிடையாது.  அன்னியப்பட்டுக் காட்சிப் பொருளாவதில் எப்போதுமே கூச்சந்தான்.  கூச்சத்திலேயே என் காலமும் ஓடியடைந்துவிட்டது. எனக்குத் தொழில் எழுத்து.  தெரிந்ததெல்லாம் எழுத்து.  அது போதும். கற்பனை வானில் கண்டமானிக்கிப் பறந்து திரிந்த வெள்ளித் திரையை இழுத்துப் பிடித்து வசக்கிக் கால் பொசுக்கும் எதார்த்த மண்ணில் விரித்துப் பாமர மக்களின் வாழ்க்கையைக் காட்சிகளாக வரைந்த அசல் கலைஞனுக்கும் இலக்கியத்தை சுவாசிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23310/

Older posts «

» Newer posts