Tag Archive: பூட்டான்

வடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா

பாரோவிலிருந்து இரவோடிரவாகத் திரும்பினோம். இனி நேராக ஊர் திரும்புதல்தான் என்ற எண்ணம்,மனதை நிறைவும் கனமும் கொள்ளச்செய்தது. ஆனால் ஊர் மிகத்தொலைவில் இருந்தது. பல மாநிலங்களுக்கு அப்பால். இருளில் சுழன்று மறைந்த மலைகளைப்பார்த்துக்கொண்டே பயணம் செய்தோம். பூட்டானின் பழைய மாளிகைகளில் ஒன்று வரும் வழியில் பார்த்த பாலம் இருளிலேயே மறைந்தது. அதற்கும் முன்னால் ஒரு பழைய இடிந்த பூட்டானிய வீட்டைச் சென்று பார்த்தோம். மண்ணால் கட்டப்பட்ட அடித்தள அமைப்பு மட்டுமே இருந்தது. உள்ளே நீர் தேங்கியிருந்தது. ஒரு பூட்டானிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16792

வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்

டா மடாலயத்தில் இருந்து வெளிவந்ததும் ஓட்டுநரிடம் கீழே இருக்கும் இன்னொரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு டைகர்ஸ் நெஸ்ட் என அழைக்கப்படும் மடாலயத்துக்குப் போகலாமென்றோம். ‘இனிமேல் முடியாதே’ என்றார். எனக்குக் கடும் கோபம் வந்தது. ‘இல்லை. அதுதான் பூட்டானின் அடையாளம். அங்கேபோகாமல் இந்தப் பயணத்தை முடிப்பதாக இல்லை’ என்றேன். அவன் ‘நேரம் இல்லையே’ என்றான். ஒரு ஓட்டுநர் ஜான் லாமா நிதானமானவன். ஆங்கிலம் தெரிந்தவன்.இன்னொருவன் கோபக்காரன். அவன் கோபமாக ஏதோ சொன்னான். ‘போயாகவேண்டும்’ என்றேன். மற்றவர்களும் சொன்னார்கள். ’அப்படியானால் உடனே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16790

பூட்டான், குழந்தைகள்

’வெட்கப்படுமளவுக்கு ஒரு புகைப்படம் முக்கியமான விஷயம்தானா?’ – ஒரு சின்னக் குழப்பம் ’அவ்ளோத்தையும் திம்பேன்’ . கைநீட்டிய யுவன் சந்திரசேகருக்கு ஓங்கி ஓர் அறை. பெயர்? ஆம், பேமா   ’மூன்று  பூட்டானியர்கள்’. பெயர் கேட்டால் பெயர் தந்தைபெயர் குலம் ஊர் என நான்கு சொற்களாக மொத்த விலாசத்தையுமே சொல்கிறார்கள். கங்காரு. உறை பின்பக்கம் இருக்கிறது. சாலையிலே ஒரு பூவுடன் எதிரே வந்தவள், அழகிகள் வாழ்விலே இதெல்லாம் சகஜம் என்று போஸ் கொடுத்தாள். புகைப்படங்களின் முழுத்தொகுப்பு https://picasaweb.google.com/vishnupuram.vattam/BhutanSikkimJeyamohan  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16789

அந்தப்பெண்கள்…

  அகன்ற கண் அழகு என்று ஈராயிரம் வருடங்களாகக் கற்ற மனம் சில கணங்களிலேயே திருத்திக்கொண்டது. கண்கள் வழியாகத் தெரிவது எதுவோ அதுவே அழகு. அது இளமை என்றால் உற்சாகம் என்றால் கனிவு என்றால் இரு ஜொலிக்கும் வைரங்களே போதுமே. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு உடை உருவாகி வந்துள்ளது. சூடும் குளிரும்தான் அவற்றைத் தீர்மானித்துள்ளன என்பவர்கள் சமூகவியலாளர்கள். அவர்கள் நாசமாகப் போகட்டும். பெண்களையும் குழந்தைகளையும் தீராது கொஞ்சும் மானுட அழகுணர்வல்லவா அவற்றை உருவாக்கியிருக்கிறது?   எந்த உடையிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16788

பூட்டான்- கட்டிடங்கள்

  திம்பு கையில் அள்ளிய மணிகள் போல ஒரு காட்சி. ஒரேவகையான கட்டிடக்கலையின் ஒழுங்கால் ஒட்டுமொத்த நகரமே ஒரு கலைப்பொருள்         பிரார்த்தனைச் சக்கரங்கள். பல்லாயிரம் கைகளின் பக்தியால் பயத்தால் ஆசைகளால் வேண்டுதல்களால் ஓயாது சுழன்றுகொண்டிருக்கிறது தர்மம்     திம்பு அருங்காட்சியகம். எங்கும் எதிலும் யாளிநாகம் -டிராகன்.   உணவகத்தின் உள்ளே. திரைச்சீலைகள் இங்கே இத்தனை செல்வாக்குடன் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தூசியே இல்லை என்பது.   பறக்கும் யாளி. நெருப்புத்தழல்களே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16787

வடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை

திம்புவில் இருந்து காலையில் கிளம்பி பரோ என்ற ஊருக்குச் சென்றோம். கிட்டத்தட்ட அந்திராவின் ராயலசீமாவை நினைவுறுத்தும் நிலம். ஒரு மரம்கூட இல்லாத மலைக்குவியல்கள். உடைந்த கற்களை அள்ளி வானளாவக் கொட்டியவை போல,அவை சாலைநோக்கிச் சரிந்துகொண்டே இருந்தன. சாலையில் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. ஆள் வைத்து ஒவ்வொருநாளும் அள்ளாவிட்டால் சாலை மறிக்கப்பட்டுவிடும்.   சாலையோரமாக ஒரு ஆறு. குளிர்நீலமாகச்சுழித்துக் கொப்பளித்துச் சென்றுகொண்டிருந்தது. காரை நிறுத்தி அந்த ஆற்று மீது கட்டப்பட்ட பாலத்தில் ஏறி நின்றோம். மரப்பாலம். அருகே பழைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16785

வடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்

இந்தப்பயணத்தில் பலவிஷயங்களை அவசரமாகத் திட்டமிட்டுவிட்டோம் என்று மீண்டும் மீண்டும் நினைக்கவேண்டியிருக்கிறது. பூட்டானுக்காக நாங்கள் ஒதுக்கியிருந்த நாட்கள் இரண்டுதான் என்று நினைக்கக் கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. திம்புவில் ஒருநாள் பரோவில் ஒருநாள். ஆனால் பூட்டானுக்குள் குறைந்தது ஒருவாரம் செலவழிக்காமல் இதைப் பார்த்தேன் என்று சொல்லமுடியாது. இந்தவருடமே மீண்டும் இங்கே வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன். நண்பர்களுடன் செல்வதில் உள்ள சிக்கல்,அவர்களுக்கு அதிக நாட்கள் செலவிடமுடியாதென்பதே. பத்து நாட்களே அவர்களுக்கு அதிகம். இங்கே வந்துசேரவே மூன்றுநாட்கள் ஆகிவிட்டன. சிக்கிம்,பூட்டான் என இணைத்துக்கொண்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16782

வடகிழக்கு நோக்கி- 6, திம்பு

எங்கள் பயணத்தின் வழிவிவாதங்களில் தமிழக சட்டசபையைப்பற்றி பேச்சு வந்தது. ஜெயலலிதா அந்த சட்டசபையைப் புறக்கணிப்பது சரியா என்று. நான் சரியல்ல என்றே நினைகிறேன் என்றேன். அது மக்கள் பணம். ஆனால் அது தமிழகத்தின் மிக அசிங்கமான கட்டிடங்களில் ஒன்று, தமிழகத்தின் ஆக அசிங்கமான சிலை திருவள்ளுவருக்குக் குமரியில் வைக்கப்பட்டிருப்பது. கருணாநிதி என்ற அரசிகரின் ரசனைக்கு எடுத்துக்காட்டு. விவாதம் ஏன் கட்டிடங்களை ஒரு குறிப்பிட்ட பாணியில் அமைக்கவேண்டும், விதவிதமான சோதனை முயற்சிகள் செய்தால் என்ன என்பதை நோக்கிச் சென்றது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16781

வடகிழக்கு நோக்கி-5, பூட்டான்

யும்தாங் சமவெளியில் இருந்து திரும்பும்போது மழை பெய்தது. மலையில் இருந்து கொட்டிய அருவிகள் பெரிதாகிவிட்டிருந்தன. திரும்பி வரும்போது சிக்கிம் காவலர்கள் வண்டியைப் பிடித்து அதிக சுமை ஏற்றியமைக்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்கள். நேராக விடுதிக்கே வந்தோம். பேமாவின் கைச்சமையலை உண்டோம். அங்கே ஒரு சின்னப்பூசல். நாங்கள் கிளம்பும்போது அறையைத் திறந்து வைத்துவிட்டுச் சென்றிருந்தோம். ஆனால் ‘அறைகள் மூடப்பட்டிருந்தன, சாவி இல்லை’ என்றார் விடுதி நிர்வாகியான பேமாவின் கணவன்.’இல்லை சாவி அங்கேயே இருந்தது’ என்றோம். செந்தில்தான் சாவிகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16776