Tag Archive: புவனேஸ்வர்

இந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்

பூரியிலிருந்து செப்டெம்பர் 18 அன்று காலையில் கொனார்க் கிளம்பினோம். கடலோரமாகவே சாலை சென்றது. பெருமழைவெள்ளம் கடலுக்குச் செல்லாமல் ஈச்சைமரக்காடுகள் சவுக்குத்தோப்புகள் நடுவே பளபளவென தேங்கிக்கிடந்தது. இந்தக்கரை முழுக்க ஏராளமான ரிசார்ட்டுகள் இருந்தன. சவுக்குக்காடுகளுக்குள் குடிசைகள். கான்கிரீட் குடில்கள். வெளிநாட்டினரை நம்பி உருவாக்கப்பட்டவை. புயலில் அவையெல்லாம் சிதைந்து கிடந்தன. பல இடங்களில் ஜனநடமாட்டமே இல்லை. கொனார்க் சென்றுசேர்ந்தபோது வெயில் ஒளியுடன் இருந்தது. மேகமிருந்ததனால் வெப்பம் இல்லை. கொனார்க் கோயிலை வாசலில் நின்று நோக்கும் ஒருவருக்கு ஏமாற்றம் ஏற்படும். கோயிலுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/670