Tag Archive: புறப்பாடு II

புறப்பாடு II – 9, காலரூபம்

காசியில் ஒரு படகில் ஏறி மறுகரையில் இருக்கும் காசிமன்னரின் அரண்மனைக்குச் சென்றேன். படகில் நான்மட்டும்தான் போகப்போகிறேன் என்ற பிரமையில் இருந்தேன். சின்ன படகுதான். ஆனால் அந்த குகா இளைஞன் தொடர்ந்து ஆட்களை கூவிக்கூவி ஏற்றிக்கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் படகின் விளிம்புக்கும் நீருக்குமான இடைவெளி நான்கு இஞ்ச்தான் இருந்தது. ஒரு மார்வாடி குண்டு மனிதர் ஏறியபோது என்பக்கம் படகு மேலெழுந்து அவர் அருகே நீர் உள்ளே கொட்டியது. இறங்கிவிடலாமா என்று நினைத்தேன். அதற்குள் அவன் மோட்டாரை இணைத்திருந்த கயிற்றைப்பிடித்து இழுத்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40010

புறப்பாடு II – 8, சண்டாளிகை

தேவர்களும் அசுரர்களும் பாலாழியைக் கடைந்து அமுதத்தை எடுத்தபோது அதை கலசத்தில் வாங்கி சொர்க்கத்துக்குக் கொண்டுசென்றார் கருடன். அதிலிருந்து நான்குசொட்டுகள் மண்ணில் உதிர்ந்தன. அவை முறையே .நாசிக், உஜ்ஜயினி, பிரயாகை மற்றும் ஹரித்வாரில் விழுந்தன. ஹரித்வாரில்தான் முதல் சொட்டு விழுந்தது என்று என்னிடம் சண்டாளிகா தேவி சொன்னாள். ‘ஆகவே இதுதான் பூமியில் உள்ள புனிதத் தலங்களிலேயே புனிதமானது. ஹரியிடம் செல்வதற்கான வாசலே இதுதான்’ வேடத்தை முழுமை செய்துகொண்டிருந்தாள். முகத்தில் இளநீலநிறத்தை ஒரு தூரிகையால் தேய்த்தாள். கண்களின் விளிம்புகளில் ரத்தநிறம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40005

புறப்பாடு II – 7, மதுரம்

காசியிலிருந்து டேராடூன் செல்லும் ஹரித்வார் ரயிலில் குளிர்காலத்தில் கூட்டமே இருக்காது. அதுவரை தள்ளுமுள்ளு நிறைந்த ரயிலையே பார்த்துவந்தவன். மொத்தமும் காலியாக ஒரு ரயில் வந்து நின்றபோது உண்மையிலேயே அது ரயில்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. ரயில் கிளம்புவது வரை அதனருகிலேயே நின்றேன். பெரியவகுப்புகளில் பலர் ஏறிக்கொண்டிருந்தார்கள். பதிவுசெய்யாத பயணிகளின் பெட்டியில் ஒருவர்கூட ஏறவில்லை. ரயில் நினைத்துக்கொண்டு திக் என்று அசைந்தபோது சட்டென்று பாய்ந்து ஏறி உள்ளே சென்று மரபெஞ்சில் அமர்ந்துகொண்டேன். காசியில் வாங்கிய காவித் தோள்பைக்குள் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39969

புறப்பாடு II – 6, நீர்கங்கை

அறையுடன் இணைக்கப்பட்ட கழிப்பறை என்பதை பண்பாட்டுரீதியாக ஏற்றுக்கொள்ள எனக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டன. என் பாட்டி நாகர்கோயிலில் அத்தைவீட்டுக்கு ஒரு சிகிழ்ச்சைக்காகச் சென்றவள் மறுநாள் காலையில்தான் சமையலறையை ஒட்டியிருந்த பூசையறைபோன்ற அமைப்பு மலம்கழிப்பதற்குரியதென்பதைக் கண்டுகொண்டாள். உள்ளே சென்றபோதும் அவளுக்குப்புரியவில்லை. சோறுபோட்டுச் சாப்பிடலாம் போலிருந்த பீங்கான் பாத்திரத்தில் மலம் கழிக்கவேண்டும் என்ற தகவல் சொல்லப்பட்டதும் ’அய்யோ பகவதீ ’ என்று வெளியே பாய்ந்துவிட்டாள். அந்த மலம் எங்கே செல்லும் என்று கேட்டால் வீட்டுக்கு அடியிலேயே ஒரு கிணற்றுக்குள் என்றார்கள். குடிநீர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39933

புறப்பாடு ll – 5, எண்ணப்பெருகுவது

தாராவியில் நாணப்பண்ணணின் மதராஸ் மெஸ்ஸில் காத்திருக்காமல் சாப்பிட முடியாது. அதிகாலையில் நாணப்பண்ணன் கடைதிறக்கும்போதே எழுபது எண்பதுபேர் காத்திருப்பார்கள். அதன்பின் நூறுபேருக்குக் குறையாமல் எந்நேரமும் வெளியே நின்றிருப்பார்கள். சட்டென்று பார்த்தால் இருபதுபேர் காத்திருப்பதாகத் தோன்றும். பக்கத்திலுள்ள கடைகள் முன்னாலும் சாக்கடையை ஒட்டி போடப்பட்டிருந்த பெரிய சிமிண்ட் குழாய் மேலும் அமர்ந்திருப்பவர்களும் அந்த வரிசையில் உண்டு என அங்கே செல்லக்கூடியவர்களுகுத்தெரியும். வரிசை என்று ஏதும் இல்லை. ஆனால் யார் முன்னால் வந்தார்கள் என அடுத்து செல்லவேண்டியவருக்குத் தெரியும். ஒவ்வொருவரும் வந்துசேர்பவர்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39902

புறப்பாடு II – 4, இரும்பின்வழி

என்னை ஜோலார்ப்பேட்டையில் ரயிலில் இருந்து இறக்கிவிட்டார்கள். டிக்கெட் எடுக்கவில்லை. டிக்கெட் எடுக்கக் கூடாதென்று நினைக்கவில்லை. எங்கே செல்வது என்ற திட்டமில்லாமல் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நின்றேன். மூன்றுநாள் திருவனந்தபுரத்தில் அலைந்தபின் ரயில் நிலையம் என்னுடைய இடமாக ஆகியது. நிறுத்திவைக்கப்பட்ட ரயில்களில் ரகசியமாக இரவு தூங்கமுடியுமென்பதை கற்றுக்கொண்டேன் ரயிலில் எனக்கு ஓர் ஆறுதல் இருந்தது. தண்டவாளத்திலும் இரும்புச்சக்கரங்களிலும் இரும்பாலான கனத்த பெட்டிகளிலும் எல்லாம் ஓர் உறுதி இருந்ததை உணர்ந்தேன். ரயிலின் விசில், அதன் நெற்றியில் சுடரும் வெளிச்சம், அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39863

புறப்பாடு II – 3, பாம்பணை

வட இந்தியாவில் ரயில்நிலையங்களை விட்டால் தூங்குவதற்கு இடமே இல்லை. அங்கே உள்ள கோயில்கள் சற்றுப்பெரிய டீக்கடை பாய்லர்கள் என்றுதான் எனக்குத்தோன்றும். உட்கார்ந்து கால்நீட்ட முடியும் என்றால் அங்கே ஒருவர் கடைபோட்டிருப்பார். சைக்கிள்ரிக்ஷாக்காரர்கள் அதன் பின்னிருக்கை முதல் கைப்பிடிக்கம்பி வரை ஒரு பலகையைப்போட்டு அதில் படுத்திருப்பார்கள். லாரிகளில் இருந்து பெற்ற பழைய தார்ப்பாயை வெட்டி சிறிய போர்வைகளாக ஆக்கி அதைக்கொண்டு போர்த்தியிருக்க வெளியே கடும் பனியும் மழையும் எல்லாம் கொட்டிக்கொண்டிருக்கும். அந்தச்சிறிய பலகைகளில் தூங்க அவர்களுக்கு தூக்கத்திற்குள்ளும் பெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39799

புறப்பாடு II – 2, எள்

மூடிய அறைக்குள் மண்ணெண்ணை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பழையபாணி விளக்கு. பித்தளையாலானது. ஒயின்கோப்பை போன்ற ஒற்றைக் காலுக்கு மேலே சங்குபோன்ற எண்ணைக்குடுவை. மேலே ஒரு திரி. அதில் கருநிறக்கூந்தல் விரித்து நின்றாடும் செந்நிற யட்சிபோல சுடர். பகல்முழுக்க அந்த கரும்புகை வெளியேறிக்கொண்டே இருந்தது. இருட்டு கெட்டியாகி ஒரு சரடாக ஆனதுபோல. அந்தச்சரடு மேலே மச்சின் மரக்கூரைப் பரப்பில் படிந்து விழுதுகளாக மாறித் தொங்கியது. இருட்டைக் கடைந்து எடுத்த வெண்ணை தீயில் இருந்து அவ்வளவு இருட்டு வெளியேற முடியுமா? அத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39793

புறப்பாடு II – 1, லிங்கம்

ராதாகிருஷ்ணனை முதன்முதலாகப்பார்க்கும்போது அவன் ஒரு மொட்டைத்தென்னையில் ஏறிக்கொண்டிருந்தான். இடிவிழுந்து அதன் மேல்நுனி கருகி மொண்ணையாகிருந்தது. மூத்த கனத்த தென்னை. ஆகவேதான் முழுக்க எரிந்தழியவில்லை. விசித்திரமான ஒரு சுட்டுவிரல்போல அது வானத்தைக் காட்டியது. துண்டை முறுக்கி கால்களில் தளைப்பாகக் கட்டி அவன் அதில் பாதிவரை ஏறியிருந்தான் நானும் அப்பு அண்ணனும் அப்பா திருவரம்பில் புதியதாக வாங்கிய தோட்டத்தைப்பார்ப்பதற்காக வந்திருந்தோம். ஆச்சரியமாக மேலே இருந்த ராதாகிருஷ்ணனை அண்ணாந்து பார்த்தேன். ‘டேய் ராதா என்னடா அங்க செய்யுதே?’ என்றார் அப்பு அண்ணா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39758

» Newer posts