Tag Archive: புறப்பாடு II

எம்.எஸ்.வி நினைவஞ்சலி [புறப்பாடு II – 10, உப்பு நீரின் வடிவிலே]

ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் சக்கரங்கள் கொண்ட கரிசல்காட்டுக்கிராமம். சென்னைக்கு வராமலேயே மதுரைக்குச் செல்லக்கூடியது. ஏழெட்டு பெட்டிகள் முழுக்கமுழுக்க தென்தமிழகத்தவர்கள். நான் அந்தப்பெட்டியைநோக்கி ஓடியதும் ஒருவன் என் சட்டையைப்பிடித்து ’கியா?’ என்றான். ‘ரயிலு…’ என்றேன். ‘தமிழாளா?’ ‘ஆமா…’ ‘அண்ணாச்சி, அவன் மலையாளத்தான். பொய் சொல்லுறான்.மூஞ்சியப்பாருங்க’ ‘டேய் இதில தமிழாளுங்களத்தான் ஏத்துறது….வேற பெட்டிக்குப்போ…பின்னாலபோ’ ‘அண்ணாச்சி, நான் நாகர்கோயிலாக்கும்’ என்றேன். ‘அண்ணாச்சி அவன் பேச்சப்பாருங்க’ ‘இல்ல, நான்…’ ‘வக்காளி, சொல்லிட்டே இருக்கேன்…’ என அந்த இளைஞன் கையைச்சுருட்டிக்கொண்டு அடிக்கவந்தான். ‘கைய நீட்டாத…அதுவேற வம்பாயிரும்…டேய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40078/

புறப்பாடு II – 18, கூடுதிர்வு

என் அப்பா வீட்டைவிட்டு முதல்முறையாக கிளம்பிச் சென்றபோது அவருக்கு ஒன்பது வயது. பாட்டியை நோக்கி கையை ஓங்கி ‘ச்சீ போடி!’ என்று பல்லைக்கடித்துச் சொல்லிவிட்டு இடுப்பில் ஒற்றைத்துண்டு மட்டும் அணிந்தவராக படியிறங்கி ஓடி ஆற்றுக்குச் செல்லும்பாதையில் கைதைப்புதர்களுக்குள் புகுந்து காணாமலானார். பாட்டி அதை பெரியதாக எடுக்கவில்லை. வந்துவிடுவார் என்றுதான் மாலை வரை நினைத்திருந்தாள். இரவில்தான் கொஞ்சம் கவலை வந்தது. பக்கத்துவீடுகளிலும் கோயில்களிலும் தேடிப்பார்த்தாள். காணவில்லை என்று ஆனபோது திகில் ஏற்பட்டது. ஒருமாதம் கழித்துத்தான் அப்பா கிடைத்தார். அதற்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40369/

புறப்பாடு II – 17, பின்நின்றவர்

மதுரையை ரயில் தாண்டியபிறகுதான் நான் விழித்துக்கொண்டேன். அதுவரை எந்த சுயபோதமும் இல்லாமல் தூங்கியிருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரிந்தது. எச்சில் என் தோளிலும் மடியிலுமாக வழிந்திருந்தது. சன்னலோர இருக்கை என்பதனால் நன்றாகவே சாய்ந்துகொள்ள முடிந்தது. கால்களை நீட்டி சோம்பல் முறித்தேன். எதிரே இருந்த தெற்றுப்பல்காரர் ‘நல்ல தூக்கம் என்ன தம்பி?’ என்றார். ‘ஆமா…’ என்றேன்.  ‘பாத்துக்கங்க’ என்று சொல்லிவிட்டு சென்று முகம் கழுவி கழிப்பறை சென்றுவந்தேன். ‘இப்ப இனிமே டீக்காரன் எவனும் வரமாட்டான். சிலசமயம் கோயில்பட்டீல ஏறுவான்’ ‘கோயில்பட்டியா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40343/

புறப்பாடு II – 16, ஜோதி

வடலூர் எந்தப்பக்கம் என்று எனக்குத்தெரியாது. நெய்வேலியில் என் பக்கத்து வீட்டுக்காரரின் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பேச்சிலிருந்து அது நெய்வேலி அருகே என்று தெரியும். ஆனால் நெய்வேலி எந்தப்பக்கம் என்று தெரியாது. என்ன விசேஷமென்றால் அருளப்ப சாமிக்கும் அதெல்லாம் தெரியாது என்பதுதான். நானும் அவரும் நடக்க ஆரம்பித்தபோது அவர் ரயில்நிலையத்துக்குத்தான் போகிறார் என்று நினைத்தேன். அதன்பின்பு அவர் ஒருவேளை பேருந்தில்போக திட்டமிடுகிறாரோ என்ற சந்தேகம் வந்தது. அப்படியென்றால் அவரிடம் பணமிருக்கவேண்டும். என்னிடம் ஒரு பைசாகூட இல்லை. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40305/

புறப்பாடு II – 15, நுதல்விழி

சித்ரா அச்சக விலாசத்துக்குச் சென்று என்னைப்பற்றி விசாரித்து கடைசியாக என்னைத்தேடி வந்து பசவராஜுவிடம் பேசிக்கொண்டிருந்தார் அருளப்பசாமி. அப்போது நான் கொல்லைப்பக்கமிருந்த பெஞ்சில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். ‘இதோ வந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு முன்வாசல்வழியாக வெளியே சென்று சந்துவழியாக பின்பக்கம் வந்து அங்கே படுத்துத் தூங்குவது என் வழக்கம். பசவராஜு நான் எங்கோ வேலையாகச் சென்றிருப்பதாகத்தான் நினைப்பார். அதற்குமேல் யோசிக்கும் திறன் அவருக்கு இல்லை. நான் கனத்த தூக்கமுகத்துடன் திரும்பிவருவதைக் கண்டாலும் அவரது மூளையில் கிளிக் ஒலிக்காது. அருளப்பசாமி பொறுமையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40265/

திரைப்பாடல்கள் எழுபதுகள்….

அன்பின் ஜெ , நலந்தானே? 70களின் தமிழ்த்திரைபாடல்களுக்கு ஒரு அஞ்சலி போல் அமைந்த உப்புநீரின் வடிவிலே படித்தேன். எவ்வளவுதான் தமிழ்த்திரைப்படங்களை, அதில் பாடல்கள் இடம் பெறும் அபத்தத்தை கிண்டல் செய்தாலும், தமிழ் திரையிசைப்பாடல்களை விட்டு விலகவே முடிவதில்லை இல்லையா? எப்போதோ யாருக்காகவோ எழுதப்பட்டு பாடப்பட்டு இருந்தபோதிலும் அந்தப் பாடல்கள் அவற்றைக் கேட்ட ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அவரவர்க்கான ஒரு பிரத்யேக அர்த்தத்தையும் கனவினையும் ஏற்படுத்தி அவரவர்க்கே ஆன சொந்த பாடல்களாக மாறியிருப்பதை நான் கவனித்து வருகிறேன். சமீபத்தில் நம் ஏற்காடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40250/

புறப்பாடு II – 14, ரணம்

சென்னையில் அச்சகம் என்பது பெரும்பாலும் பெண்களின் உலகம். அச்சுகோர்க்கும் ஆண்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். ஆண்கள் கம்பாசிட்டர் வேலைதான் செய்வார்கள். எடைகூடிய அச்சுப்பலகையை எந்திரத்தில் ஏற்றுவதும் இறக்குவதும், மின்சாரம் நின்றுவிட்டால் அவசரத்துக்கு டிரெடிலை இயக்குவதும் எல்லாம் அவர்கள்தான் செய்யவேண்டும். அது ஆண்மை மிக்கவேலை என்பதனாலேயே அச்சுகோர்ப்பது பெண்மைமிக்கவேலை என்றாகிவிட்டது. அச்சுகோர்க்கும் ஆண்களும் நான் பார்த்தவரை பெண்களின் பேச்சு மற்றும் அசைவுகளைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அதிகமாக பெண்களிடம் பேசிக்கொண்டே இருப்பதனால் அப்படி வந்திருக்கலாமென நான் ஊகித்தேன். சென்னையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40223/

புறப்பாடு II – 13, காற்றில் நடப்பவர்கள்

சந்தியா அச்சகத்தில் சாலையோரமாக ஒரு பெரிய திண்ணை இருந்தது. பழங்கால வீடு அது. சென்னையில் அத்தகைய தெலுங்குமணம் வீசும் வீடுகள் பல இருந்தன. இரண்டுபக்கமும் திண்ணை. நடுவே உள்ள பள்ளம் வழியாக உள்ளே செல்லும் பாதைக்கு அப்பால் இருண்ட தாழ்வான அறைகள். திண்ணையில் கரிய சிமிண்ட்தரை நெடுங்காலம் பலர் படுத்து புரண்டதனால் உளுந்து போல வழவழப்பாக இருந்தது. வளையோடு போட்ட மேல்கூரை கீழே வந்து பாதி தெருவை மறைப்பதனால் உள்ளே இருந்துபார்த்தால் தெருவில் நடப்பவர்களின் இடுப்புக்குக் கீழேதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40189/

புறப்பாடு II – 12, புரம்

மான்வேட்டைக்குச் சென்றிருந்தபோது வழிதவறி பேச்சிப்பாறை உள்காட்டுக்குச் சென்றுவிட்ட தேவநேசன் பெருவட்டரின் கதையை எனக்கு அப்பு அண்ணா சொல்லியிருக்கிறார். புல்மூடிக்கிடந்த பெரும் குழி ஒன்றில் அவர் விழுந்துவிட்டார். இருபதடிக்குமேல் செங்குத்தாக ஆழம் கொண்ட குழி அந்தக்காலத்தில் யானைபிடிக்க அனுமதி இருந்தபோது வெட்டப்பட்டது. அதன்பின் அப்படியே விட்டுவிட்டார்கள். உள்ளே விழுந்த பெருவட்டருக்கு அடி ஏதும் படவில்லை. ஆனால் அடுத்த அரைமணிநேரத்தில் தெரிந்துவிட்டது பிறர் உதவி இல்லாமல் மேலே ஏறுவது சாத்தியமே இல்லை என்று. மேலே இருந்து வந்த வேர்களும் கொடிகளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40125/

புறப்பாடு II – 11, தோன்றல்

சிறுவயதில் நான் ஒரு கனவுகண்டேன். களமெழுத்துப்பாட்டில் கரிமணல் செம்மணல் நீலமணல் சேர்த்து மண்ணில் கோலமாகப்போட்டு வரையப்படும் நாககாளி வடிவம் புள்ளுவர்கள் குடம்தட்டிப்பாட்டு பாடி முடித்து முடியவிழ்த்து ஆட ஆரம்பித்ததும் கலைய ஆரம்பிக்கும். புள்ளுவத்தி தன் கூந்தலாலேயே வண்ணக்கோலத்தை கலைப்பாள். புள்ளுவர் கமுகுப்பூக்குலையால் கலைப்பார். சிலசமயம் பெரும் காற்றுவந்து அப்படியே ஓவியத்தை சுருட்டி அகற்றிச்செல்லும். அப்படி கண்முன் வண்ணமணல்துகள்களாக மாறி மறைந்த ஓர் நாககாளி நீலமும் சிவப்பும் கறுப்பும் வெளுப்புமாக மணல்துளிகள் காற்றிலேறி ஒன்றாகி இணைந்து கண்களில் உயிர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40117/

Older posts «