Tag Archive: புரோசனன்

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46

பகுதி பத்து : மீள்பிறப்பு – 3 வாரணவதத்தின் மாளிகை அவர்கள் எண்ணியதைவிட பெரியதாக இருந்தது. தொலைவில் அதைப் பார்த்தபோதே குந்தியின் முகம் மலர்ந்துவிட்டது. விமலம் என்னும் மலைச்சரிவில் தேவதாரு மரங்கள் சூழ அது வெண்ணிறமாக தலை தூக்கி நின்றது. மாலையொளியில் அதன் வெண்ணிற குவைமுகடுகள் மின்னிக்கொண்டிருந்தன. அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடி நடுவே பறக்க வலப்பக்கம் குந்தியின் சிம்மக் கொடியும் இடப்பக்கம் தருமனின் நந்தமும் உபநந்தமும் பொறிக்கப்பட்ட கொடியும் பறந்தன. குந்தி “இம்மாளிகையின் பெயர் என்ன?” என்றாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66236

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 43

பகுதி ஒன்பது : உருகும் இல்லம் – 3 வடக்கு யானைத்தளத்தை ஒட்டியிருந்த பெருங்களமுற்றத்தில் கோட்டைவாயில் அருகே இருந்த படைக்கலக் கொட்டில் முற்றிலும் காந்தாரர்களுக்கு உரியதாக இருந்தது. கனத்த காட்டுமரத்தூண்களுக்கு மேல் மரப்பட்டைக் கூரையிடப்பட்ட கொட்டிலின் உள்ளே மெல்லிய மூங்கில்களை சேர்த்துக்கட்டி உருவாக்கப்பட்ட பெரிய முக்கோணவடிவ முகடுக்கூட்டின் மேல் கூரை அமைந்திருந்தமையால் உள்ளே நடுவில் ஒருவரியாக மட்டுமே தூண்கள் இருந்தன. மூங்கில்களால் ஆன சிலந்திவலை போல அமைந்திருந்த கூரையில் ஏராளமான பெரிய மரப்பானைகள் கட்டிவைக்கப்பட்டிருந்தமையால் எதிரொலிகள் இல்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66175