குறிச்சொற்கள் புரூரவஸ்
குறிச்சொல்: புரூரவஸ்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28
28. மலர்திரிதல்
“புரூரவஸ் பன்னிரண்டு ஆண்டுகாலம் குரங்குகளுடன் அந்தக்காட்டில் இருந்தான் என்கின்றன கதைகள்” என்று முண்டன் சொன்னான். “காட்டில் அவன் பிறிதொரு குரங்கென்றே ஆனான். அறத்தின்பொருட்டு காமத்தையும் பொருளையும் விட்டவன் பின்னர் அவையிரண்டின்பொருட்டு அறத்தை...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–27
27. வீடுகோள் செலவு
கீற்றுநிலா முகில்களுக்குள் மறைந்தும் விளிம்புகாட்டியும் நகரை ஆக்கி அழித்துக்கொண்டிருந்த பின்னிரவில் முரசோ கொம்போ ஒலிக்காமல் ஓரிரு பந்தங்கள் மட்டுமே எரிந்த சிறைமுற்றத்தில் ஐம்பது வில்வீரர்கள்கொண்ட படை காத்திருந்தது. உள்ளிருந்து எழுவர்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–26
26. வாளெழுகை
மூதரசரின் எரியூட்டல் முடிந்த மறுநாளே மூதரசி அரண்மனையிலிருந்து கிளம்பினாள். எரியூட்டலுக்கு கால்நிலையா கள்மயக்கில் வந்த புரூரவஸ் சிதையில் எரி எழுந்ததுமே “களைப்பாக உள்ளது. ஏதேனும் தேவை என்றால் சொல்லுங்கள்” என்றபின் கிளம்பிச்சென்றான்....
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–25
25. எஞ்சும் ஒளி
மூதரசி அப்போதே தன் கணவரின் அறைக்கு சென்றாள். அவர் மைந்தனின் அறையில் இருப்பதாக சேடி சொன்னாள். “அரசர் அணிபுனையும் நேரம் இது, மூதரசி. அருகிருந்து அதைப் பார்ப்பது மூதரசரின் வழக்கம்”...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–24
24. என்றுமுள பெருங்கொடை
ஒவ்வொருநாளும் கடையனாக கீழோனாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான் புரூரவஸ். அதற்கென்று புதிய வழிகளை அவனுள் நிறைந்து விம்மி கரைமுட்டும் ஒன்று தேடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தன் கையிலிருந்து ஒரு மணி பொன்னும்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–23
23. இருள்மீட்சி
பன்னிரு நாட்கள் துயிலிலேயே இருந்தான் புரூரவஸ். மென்பட்டுச் சேக்கையில் கருக்குழவியென உடல் சுருட்டி, முட்டுகள் மேல் தலை வைத்து, இரு கைகளையும் மடித்து கழுத்தில் சேர்த்து படுத்திருந்தான். மருத்துவர்கள் அவனை நோக்கியபின்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–22
22. எரிந்துமீள்தல்
ஒவ்வொருநாளும் அரசனின் உடல் சுருங்கி நெற்றாகி, உலர்ந்த புழுபோலாகி, வெண்பட்டுப்படுக்கையில் வழிந்த கறையென்றாகி கிடந்தது. அறையெங்கும் மட்கும் தசையின் கெடுமணமே நிறைந்திருந்தது. அதை மறைக்க குந்திரிக்கப் புகை எழுப்பிக்கொண்டிருந்தனர். தரையை மும்முறை...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–21
21. விழைவெரிந்தழிதல்
ஏழாண்டுகள் சியாமையுடன் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளும் புரூரவஸின் உடல் பொலிவுகொண்டு வந்தது. அவன் சிரிப்பில், சொல்லில், நோக்கில், அமர்வில் வென்றவன் எனும் பீடு தெரிந்தது. அவன் இருக்குமிடத்தில் கண்ணுக்குத் தெரியா கந்தர்வர்கள்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20
20. விண்வாழ் நஞ்சு
குருநகரி மீண்ட விஸ்வவசு தன் பொந்துக்குள் பிற கந்தர்வர் எழுவரையும் கூட்டி அமர்ந்து சொல்சூழ்ந்தான். “நாம் இங்கு செய்வதற்கு ஏதுமில்லை. ஒருவர் முப்பொழுதும் அவளை தொடர்க! ஆறு மைந்தரை அறுவர்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19
19. மண்ணுறு அமுது
ஏழாண்டுகாலம் அமராவதி காத்திருந்தது. ஊர்வசியே அமரகணிகையரில் தலைக்கோலி என்பதனால் அவளை மையமாக்கியே அங்குள்ள ஆடல்கள் அதுவரை ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அவள் முன்னின்று ஆடியதை தொடர்ந்தாடியமையால் ஒவ்வொருவரும் அவளைப்போலவே ஆகிவிட்டிருந்தனர். அனைவரிலும் வெளிப்பட்டமையாலேயே...