Tag Archive: புராணங்கள்

குழந்தைகளுக்கு புராணங்களை கற்றுக்கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு மதம் ஜெ வணக்கம், இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு (10 மற்றும் 5 வயது) மகாபாரத கதையை ஒலி புத்தக வடிவில் கேட்கவைக்கலாம் என்று அமேசானில் உள்ள இஸ்கான் அமைப்பின் ஆங்கில மதிப்பின் மாதிரியை கேட்டேன் அந்த மாதிரியில்; விச்சித்திரவீரீயன் இறந்து விடுகிறான். நியோக நியதி படி அம்பிக்கையையும் அம்பாலிகையையும் கருவுற செய்ய முடிவெடுக்க படுகிறது. விச்சித்திரவீரீயனின் அண்ணனின் துணையுடன்.அம்பிகை பீஷ்மரை எண்ணியபடி சிறு உவகையுடன் மஞ்சத்தில் அமரந்திருக்க, ஓரு கரிய அழுக்கு படிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117588

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’

வண்ணக்கடல் எழுதத் தொடங்கும்போது அதில் கிருஷ்ணனின் கதையும் வந்துவிடும் என்றே நினைத்தேன். வண்ணக்கடல் என்னும் தலைப்புக்கே அந்த நோக்கம் இருந்தது. ஆனால் அந்தக் கட்டமைப்புக்குள் கண்ணன் வரமுடியாது என்பது போகப்போகத் தெரிந்தது. மகாபாரதத்தில் உள்ள கிருஷ்ணனுக்கும் பாகவதத்தில் உள்ள கிருஷ்ணனுக்கும் ஏராளமான வேறுபாடுண்டு. மூலமகாபாரதம் கிருஷ்ணனின் இளமைலீலைகளை எல்லாம் விரிவாகச் சொல்வதில்லை. அதில் வரும் கிருஷ்ணன் கவிஞனும் ஞானியும் ராஜதந்திரியுமான யாதவஅரசன் மட்டுமே. மகாபாரத காலம் முடிந்தபின்னர் இந்தியநிலத்தின் பெரும்பகுதி வெவ்வேறு யாதவ அரசுகளால் ஆளப்பட்டது. மகதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58240

புராணங்களும் படிமங்களும் -வெண்முரசு

வெண்முரசில் புராணங்களின் கதைகள் மாறுதலுக்குள்ளாகியிருப்பதைப்பற்றி பலர் எழுதியிருந்தனர். பெரும்பாலானவர்களுக்கு இது மறு ஆக்கம் என்று புரிகிறது, சிலருக்குப் புரியவில்லை புராணங்களை ‘தகவல்களாக’ தெரிந்துவைத்திருப்பதன் விளைவு இது. தொடர்ந்து புராணங்களை வாசிக்காமல் உதிரியாக- தற்செயல்களாக- அறியும் நம்மில் பெரும்பாலானவர்களிடம் இந்த மனநிலை உள்ளது புராணங்கள் தகவல்கள் அல்ல. அவை படிமங்கள் , உருவகங்கள், ஆழ்படிமங்கள் [image,metaphor, archetype] தொடர்ந்து புராணங்களைக் கவனிப்பவர்களுக்கு இது தெரியும். கவிதையும் கதையும் நேரடியாகச் சொல்லப்படமுடியாத பிரம்மாண்டமான அல்லது நுட்பமான ஒன்றைச் சொல்வதற்காக புராணங்களைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44966

கடவுளை நேரில் காணுதல்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம் , சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்ப திரும்ப வருவது ‘தவம் செய்தான் , கடவுள் தரிசனம் தந்தார்’ என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும் , மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22336