Tag Archive: புனித தாமஸ்

தாமஸ் சில வம்புக்கேள்விகள்

மின்னஞ்சல்களில் வந்த சில தனிப்பட்ட கேள்விகளுக்கு நான் அனுப்பிய பதில்கள் இவை. 1. நீங்கள் உங்கள் ஆசிரியராகக் குறிப்பிடும் கோவை ஞானி உள்பட உள்ள தமிழறிஞர்கள் கிறித்தவ அமைப்புகளுக்கு விலைபோவார்கள் என்ற தொனியில் எழுதியிருக்கிறீர்கள். இது அவதூறு அல்லவா? [13-8-08] என்னுடைய மதிப்பீடு அது. அதற்கு அவர்களின் சென்றகாலச் செயல்பாடுகளே ஆதாரமாக உள்ளன. இந்து ஞானமரபு, இந்திய ஒருமைப்பாடு சார்ந்த அனைத்தையும் திரிக்கவும் இழிவுபடுத்தவும் இவர்கள் எப்போதுமே தயாராக இருக்கிறார்கள். ஆனால் இதை மதமாற்ற நோக்கத்துடன் பயன்படுத்திக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/616

தாமஸ் கடிதங்கள் மீண்டும்

ஐயா வணக்கம் நல்ல ஒரு பதிவு தாங்கள் ஆறு-முக நாவலரின் நூல்கள் படித்திரூப்பீர் என்று நம்புகிறேன். அந் நூல்களில் கிருத்துவ மிஷினரிகளை அவர் எவ்வாறு எதிர் கொண்டார் என்பது புரியும். அண்னாரின் நூல் ஒன்றினில் அவரி சைவ சமயத்தை சாடிய கிருத்துவ பாதிரியார்களை நோக்கி கேட்கும் கேள்விகளும் அவரின் சைவ கருத்துகளின் ஸமாதானமும் மிகவும் அருமையானவை ஆழ்ந்த கருத்துகள் உடையவை. இதன் மூலம் சுமார்  80-100 வருடங்களுக்கு முன் கிருத்துவ பாதிரியர்களின் பொய் பிரசாரங்கள் எவ்வாறு எதிர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/610

தாமஸ்:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் தாமஸ் வருகையைப்பற்றிய உங்கள் கட்டுரையையும் அதற்கு வந்த எதிர்வினைகளையும் படித்தேன். எனக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் இது உலகம் முழுக்க கிறித்தவ மதப்பரப்புனர்களால் [இவாஞ்சலிஸ்டுகள்] செய்யப்பட்டு வருவதுதான். அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். பொதுவாக அவர்கள் இரு தேசத்தை கையிலெடுக்க முயலும்போது அத்தேசத்தின் பண்பாட்டு உள்விவகாரங்களை ஆழமாக கவனிக்கிறார்கள். பழைய சேசுசபை கடிதங்களில் இதற்கான ஆழமான முயற்சிகள் இருப்பதைக் காணலாம். அதன்பின்னர் அங்கே நட்புசக்தி பகைசக்தி என்று இரு வகைகளைக் கண்டுகொள்கிறார்கள். நட்புசக்திகளுக்கு ஆதரவான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/607

தாமஸ்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் கிறித்தவ மதமாற்ற இயந்திரம் இந்திய வரலாற்றில் நிகழ்த்தும் ஊடுருவலைப் பற்றிய உங்கள் கட்டுரை என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியது. ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் எண்பதுகோடி முழுமூடர்களின் நாடு என்று நம்மைப்பற்றி நமக்கே கற்பிக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள், இங்குள்ள சிந்தனைகள் எல்லாமே திராவிடர்களால் உருவாக்கப்பட்டது. அந்த திராவிடர்கள் ஆரியர்களான பிராமணர்களிடம் தங்கள் சிந்தனைகள் அனைத்தையுமே இழந்து பரிதாபமாக சீரழிந்து முட்டாள்களாக ஆயிரம் வருடங்களாக வாழ்கிறார்கள். தாமஸ் வந்து அவர்களுக்கு கொஞ்சம் ஞானத்தை அளிக்கிறார். அதைக்கூட இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/604

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். கேரளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் சேரர்கள் ஆண்ட பகுதிகள் என்று கேள்விபட்டிருக்கிறேன்.உங்கள் ஊரை பற்றி குறிப்பிடும் போது, சோழர் கால ஏரி மற்றும் சோழர் காலத்து வயல்வெளிகள் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.அது சேரர்கள் ஆண்ட பகுதியா அல்லது சோழர்கள் ஆண்ட பகுதியா. அன்புடன், அசோக்குமார்,உதகை. அன்புள்ள அசோக் குமார் தென்குமரி நாட்டின் வரலாற்றை இவ்வாறு சொல்லலாம். சங்ககாலத்தில் இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். ஆய் அண்டிரனின் கல்வெட்டு கிடைத்துள்ளது. வேளிர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/603

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology]  வளர்ச்சியுறாத நிலையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/600